Home
News

ஜியோ பயனர்களே கவனிங்க.. Oppo A15 போனை வெறும் ரூ. 9,991 விலையில் வாங்க வாய்ப்பு.. யாரெல்லாம் வாங்கலாம்?

ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு ஒரு மகத்தான செய்தி தற்பொழுது வெளியாகியுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் சாதனம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் மற்றும் மலிவு விலையில் ஒரு பெஸ்டான புது ஸ்மார்ட்போன் சாதனத்தை வாங்க வேண்டும் என்று திட்டமிட்டுவருபவர்கள் இந்த பதிவை இறுதிவரை தொடர்ந்து படியுங்கள். ஒப்போ நிறுவனத்துடன் ஜியோ இணைந்து ஒரு நம்ப முடியாத சலுகையை தற்பொழுது அறிவித்துள்ளது, அதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

ஒப்போ ஏ 15 (Oppo A15) ஸ்மார்ட்போன் மீது ஜியோ சலுகை

ஒப்போ ஏ 15 (Oppo A15) ஸ்மார்ட்போன் மீது ஜியோ சலுகை

இந்தியாவில் சியோமி நிறுவனத்திற்கு அடுத்தபடியாக முன்னணியில் இருக்கும் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒப்போ நிறுவனம் தற்பொழுது அதன் ஒப்போ ஏ 15 (Oppo A15) ஸ்மார்ட்போன் மீது சிறப்புச் சலுகையை வழங்குகிறது. குறிப்பாக ஒப்போ நிறுவனம் தற்போது ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து அதன் ஒப்போ ஏ 15 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி வேரியண்ட் மாடல் மீது பிரத்தியேகமான சலுகையை அறிவித்துள்ளது.

ஜியோ பயனர்களுக்கு மட்டுமான பிரத்தியேக சலுகை

ஜியோ பயனர்களுக்கு மட்டுமான பிரத்தியேக சலுகை

இதனால் ஜியோ பயனர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாக இந்த சலுகை தற்பொழுது கிடைக்கிறது. ஒப்போ மற்றும் ஜியோ நிறுவனம் இணைத்து வழங்கும் சலுகையில் கீழ் இனி ஜியோ பயனர்கள் ஒப்போ ஏ 15 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் வேரியண்ட் மாடலை வெறும் ரூ .9,991 என்ற விலையில் வாங்க முடியும். இதன் மூலம், ஒப்போ ஏ 15 ஸ்மார்ட்போன் மீது ஜியோ பயனர்களுக்கு ரூ. 999 விலை குறைப்புடன் சலுகை கிடைக்கிறது.

யாருக்கெல்லாம் இந்த ஜியோ சலுகை கிடைக்கும்?

யாருக்கெல்லாம் இந்த ஜியோ சலுகை கிடைக்கும்?

ஒப்போ ஏ 15 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் வேரியன்ட்டின் அசல் விலை தற்போது ரூ. 10,990 ஆக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஜியோ வாடிக்கையாளர்கள் இந்த சிறப்புச் சலுகையின் ஒரு பகுதியாக ஒப்போ ஏ 15 சாதனத்தை வெறும் ரூ. 9,991 விலைக்கு வாங்கலாம். இந்த சலுகை தற்போது ஜியோவுடன் தொடர்பில் உள்ள புதிய மற்றும் செயல்பாட்டில் உள்ள தற்போதைய ஜியோ பயனர்களுக்கும் மட்டுமே கிடைக்கும்.

ஒப்போ ஏ 15 ஸ்மார்ட்போனின் எந்த மாடலுக்கு இந்த சலுகை கிடைக்குமா?

ஒப்போ ஏ 15 ஸ்மார்ட்போனின் எந்த மாடலுக்கு இந்த சலுகை கிடைக்குமா?

இந்த திட்டத்தின் கீழ் அனைத்து சலுகைகளையும் அனுபவிக்க வாடிக்கையாளர்கள் முக்கிய சில்லறை விற்பனை நிலையங்களில் இருந்து ஜியோ பூட்டுதலுடன் அல்லது ஜியோ லாக்கிங் இல்லாமல் OPPO A15 3GB வேரியண்ட் மாடலை வாங்க முடியும். இந்த சலுகையைப் பெற ஜியோ வாடிக்கையாளர்களுக்குத் தரவு மற்றும் குரல் சேவைகளுக்கு ஜியோ சிம் கார்டு தேவை. வாடிக்கையாளர்கள் ஒப்போ ஏ 15 ஐ டைனமிக் பிளாக் மற்றும் மிஸ்ட்ரி ப்ளூ வண்ண விருப்பங்களில் வாங்கலாம்.

ஒப்போ ஏ 15 சிறப்பம்சம்

ஒப்போ ஏ 15 சிறப்பம்சம்

ஒப்போ ஏ 15 ஸ்மார்ட்போன் சாதனம் 720 x 1600 பிக்சல் தீர்மானம் கொண்ட 6.55' இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 35 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு உள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டை நிறுவுவதன் மூலம் பயனர்கள் 256 ஜிபி வரை சேமிப்பகத்தை மேலும் விரிவாக்க முடியும்.

 கேமரா மற்றும் பேட்டரி அம்சம்

கேமரா மற்றும் பேட்டரி அம்சம்

ஒப்போ ஏ 15 ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் இயங்கும் சொந்த கலர்ஓஎஸ் உடன் வருகிறது. இரட்டை சிம் வசதியுடன், பின்புறம் பொருத்தப்பட்ட கைரேகை சென்சாரும் இதில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 13 எம்பி பிரதான சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமராவுடன் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. முன்பக்கத்தில் 5 எம்பி செல்ஃபி ஷூட்டர் உள்ளது. ஒப்போ 15 இல் 4300 எம்ஏஎச் பேட்டரியும் உள்ளது.

Best Mobiles in India

English summary
Reliance Jio Users Can Avail This Special Offer On Purchasing New Oppo A15 Smartphone For Rs 9991 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X