Jio True 5G சென்னைக்கு வந்தாச்சா? 5ஜியின் அல்டிமேட் ஸ்பீடை தமிழ்நாட்டில் எப்படி அணுகுவது?
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) பயனரா நீங்கள்? அதுவும் மெட்ராஸ் பட்டினத்தில் வசிக்கும் சென்னை வாசியா நீங்கள்? அப்படியினால், இந்த சூப்பர் குட் நியூஸ் உங்களுக்கானது தான்.
காரணம், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் ஜியோ ட்ரூ 5ஜி (Jio True 5G) சேவையை இப்போது சென்னையிலும் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஜியோ 5ஜி சேவைக்கான திட்டங்கள் மற்றும் மற்ற முழு விபரங்களை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

சென்னை மக்களுக்கு Jio True 5G வந்தாச்சா?
சென்னையில் வசிக்கும் ஜியோ வாடிக்கையாளர்கள் மற்றும் ஜியோவுடன் இணையாத அல்லது மாற நினைக்கும் மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்களும் இந்த புதிய 5ஜி சேவையைப் பயன்படுத்திப் பார்க்கலாம் என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் பல முக்கிய மெட்ரோ நகரங்களுடன் ரிலையன்ஸ் ஜியோ இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவில் அதன் 5G சேவைகளை தொடங்கியது.

இரண்டாம் கட்ட 5ஜி அறிமுக நகரங்களில் சென்னையும் உள்ளதா?
ஜியோ நிறுவனம் இப்போது இரண்டாம் கட்ட அறிமுகமாக, அதன் 5G சேவைகளை சென்னை மற்றும் ராஜஸ்தானின் நத்வாரா பகுதியில் அறிமுகப்படுத்தியுள்ளது.
கல்வி நிறுவனங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக மையங்கள் மற்றும் இந்தியா முழுவதும் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளுடன் ஜியோ அதன் 5G சேவையை விரிவுபடுத்துகிறது.

ஜியோ வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்.!
சமீபத்தில் வெளியான ஒரு அறிவிப்பில், ரிலையன்ஸ் ஜியோ அதன் True5G சேவைகளை கூடுதல் நகரங்களில் விரைவில் செயல்படுத்தும் என்று கூறியுள்ளது.
ராஜஸ்தானில் உள்ள கோயில் நகரமான நாத்துவாராவில் ஜியோ ட்ரூ 5ஜி மூலம் இயங்கும் வைஃபை சேவைகளை தொடங்கியுள்ளது என்று ஜியோ தனது வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
இதில் ஜியோ வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது.

ஜியோ வெல்கம் ஆஃபர்.!
ஜியோ வெல்கம் ஆஃபர் காலத்தில் ஜியோ ட்ரூ5ஜி சேவைகளை எந்தக் கட்டணமும் இன்றி இப்பகுதியில் உள்ள ஜியோ பயனர்கள் பெறுவார்கள் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது சென்னை மக்களுக்கும் பொருந்தும்.
மேலும், ஜியோ அல்லாத பயனர்களும் ஜியோவுக்குச் செல்வதற்கு முன் அல்லது முழு வரம்பற்ற சேவை அனுபவத்தைப் பெறுவதற்கு முன்பு 5G சேவைகளை முயற்சி செய்து பார்க்கவும் முடியும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.

ஜியோ ட்ரூ5ஜி வெல்கம் ஆஃபரில் சென்னை கன்ஃபார்ம்.!
புனித நகரமான நாதத்வாரா மற்றும் பகவான் ஸ்ரீநாத் ஜி கோவிலில் முதல் True5G இயக்கப்பட்ட Wi-Fi சேவையை நிறுவனம் இயக்கியுள்ளது.
இதன் மூலம், இதுபோன்ற இன்னும் பல இடங்களை ஜியோ தனது 5ஜி சேவை மூலம் விரிவுபடுத்தவுள்ளது.
ஜியோ ட்ரூ5ஜி வெல்கம் ஆஃபரில் சேர்க்கப்பட்டுள்ள சமீபத்திய நகரமாகச் சென்னை சேர்க்கப்பட்டுள்ளது என்று ரிலையன்ஸ் ஜியோ தலைவர் ஆகாஷ் அம்பானி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

1Gbps வேகத்தில் வரம்பற்ற 5G.!
ஜியோவின் முந்தைய அறிவிப்புக்கு இணங்க, நிறுவனம் தனது ஜியோ ட்ரூ5ஜி சேவைகளை சென்னையில் வெளியிடத் தொடங்கியுள்ளது.
இது ஜியோ 5ஜி சேவையைப் பெறும் சமீபத்திய மெட்ரோ நகரமாகும். சென்னையில் உள்ள ஜியோ பயனர்கள் Jio True5G உடன் 1Gbps வேகத்தில் வரம்பற்ற 5G தரவை அணுக முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ இந்த மாத தொடக்கத்தில் டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் வாரணாசியில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியது.

இதை கவனிக்க மறக்காதீர்கள்.!
ஜியோ ட்ரூ5ஜி வெல்கம் ஆஃபருடன் நிறுவனம் 5ஜியை இந்தியாவிற்குக் கொண்டு வந்தது, இதில் ஜியோ பயனர்கள் 1ஜிபிபிஎஸ் வேகத்தில் வரம்பற்ற 5ஜி டேட்டாவை ஆதரிக்கும் பகுதிகளில் கூடுதல் கட்டணம் ஏதுவுமின்றி பெறலாம். இருப்பினும், வெல்கம் ஆஃபர், இன்வைட் அடிப்படையிலான பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது அனைத்து ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கும் பொதுவில் கிடைக்காது என்பதை மறக்காதீர்கள்.


Click it and Unblock the Notifications