குறைந்த கட்டணத்திலும் அதிக வருவாயை ஈட்டி ஜியோ முதலிடம்.!

ஜியோ நிறுவனத்திற்கு ஏராளமான பெருமைகள் குவிந்தாலும், தற்போது வருவாயிலும் கலக்கும் நிறுவனமாக உருவாகியுள்ளது. தற்போது ஜியோ நிறுவனம் மொத்தம் 8271 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.

|

டெலிகாம் துறையில் மற்ற நிறுவனங்களை காட்டிலும் குறைந்த கட்டணத்தில் சேவையாற்றி வரும் ஜியோ தற்போது, வருவாயிலும் அதிகம் லாபம் ஈட்டும் நிறுவனமாக இருக்கின்றது.

குறைந்த கட்டணத்திலும் அதிக வருவாயை ஈட்டி  ஜியோ முதலிடம்.!

ஜியோ நிறுவனத்திற்கு ஏராளமான பெருமைகள் குவிந்தாலும், தற்போது வருவாயிலும் கலக்கும் நிறுவனமாக உருவாகியுள்ளது. தற்போது ஜியோ நிறுவனம் மொத்தம் 8271 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.

ஜியோ நிறுவனம்:

ஜியோ நிறுவனம்:

ஜியோ நிறுவனம் கடந்த ஆண்டு முன் துவங்கப்பட்டது. துவக்கம் முதலே இலவச சேவையை அள்ளி வீசியது. இதனால் ஏராளமான வாடிக்கையாளர்களும் இந்த நிறுவனத்தில் இணையத்துவங்கினர்.

மேலும் தனது அதிரடி ஆப்பர்களாலும் தனது 4 ஜி சேவையினாலும் ஜியோ நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்தது.

குறைந்த விலை:

குறைந்த விலை:

குறைந்த விலைக்கு லோக்கல் அண்டு நேசனல் அன்லிமிடெட் அவுல் கோயிங் கால், ரோமிங் ப்ரீ, தினமும் 100 எஸ்எம்எஸ் ப்ரீ, காலர் டியூன் ப்ரீ. 2ஜிபி டேட்டா உள்ளிட்ட சலுகையை அறித்தது ஜியோ நிறுவனம்.

இதனால் குறைந்த காலத்தில் இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை பெற்ற நிறுவனம் என்ற பெருமையும் ஜியோ நிறுவனத்திற்கு கிடைத்தது.

 4 ஜியில் சேவை துவங்கியது:

4 ஜியில் சேவை துவங்கியது:

முதன் முதலில் 4 ஜியில் சேவை துவங்கிய நிறுவனம் என்ற தனிப்பெருமையும் ஜியோவுக்கே கிடைத்தது. இதைத்தொடர்ந்து அதிக வாடிக்கையாளர்களை பெற்ற நிறுவனமாகவும் ஜியோ திகழ்கின்றது.

கால் டிராப் ஆகாத பெருமை:

கால் டிராப் ஆகாத பெருமை:

ரயில் மற்றும் சாலை போக்குவரத்தின் போது, கால் டிராப் ஆகாத நிறுவனம் என்ற பெருமையும் ஜியோவுக்கு கிடைத்தது. மற்ற நிறுவனங்களை காட்டிலும் ஜியோ சிறந்து சேவையளிப்பதாகவும் டிராய் (இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்தது.

வோல்ட் இ வேல்டு ரோமிங் சேவை:

வோல்ட் இ வேல்டு ரோமிங் சேவை:

இந்தியாவில் வோல்ட் இ வேல்டு ரோமிங் எனப்படும் சேவையை முதன் முதலில் ஜியோவே கடந்த சில நாட்களுக்கு முன் அறிமுகம் செய்தது. இதனால் அதிவே அப்லோடிங், டவுன்லோடிங் என்று இணையத்தில் பெற முடிகின்றது.

ரயில் டெல்லும் நுழைந்தது:

ரயில் டெல்லும் நுழைந்தது:

கடந்த 6 ஆண்டாக ரயில்வே சொந்தமான ரயில் டெல்லில் தனது சேவையை தொடர்ந்து வந்தது. ஏர்டெல் நிறுவனம் விரைவில் இதன் ஒப்பந்தம் முடிய இருப்பதால், அளவுற்ற கால்களை வழங்குவதாகவும் ஜியோ நிறுவனம் அறிவித்தது. இதனால் ரயில் டெல்லில் 3.78 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றது. மேலும் ஆண்டுக்கு ரூ.100 வருமானத்தையும் பெற தயாராகிவிட்டது.

அதிக வருமானத்தில் ஜியோ:

அதிக வருமானத்தில் ஜியோ:

தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களில் அதிக வருவாய் ஈட்டி ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த நிறுவனம் குறைந்த கட்டணத்தில் அதிக சேவைகள் வழங்கும் நிறுவனமாக இருக்கின்றது. இந்நிலையில் ஜியோ நிறுவனம் அதிக வருமானம் ஈட்டி இருப்பதாக டிராய் அறிவித்துள்ளது.

 வருமானம்:

வருமானம்:

டிராயின் புள்ளி விவரப்படி ஜுலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் ஜியோ நிறுவனம் மொத்தம் 8271 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இது முதல் காலாண்டு வருமானத்தை விட ஆயிரத்து 145 கோடி ரூபாய் அதிகமாகும்.

மற்ற நிறுவனங்களின் வருமானம்:

மற்ற நிறுவனங்களின் வருமானம்:

2வது காலாண்டில் வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு 7528 கோடி ரூபாயும், பார்தி எர்டெல் நிறுவனத்திற்கு 6720 கோடி ரூபாயும், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 1284 கோடி ரூபாயும் வருவாய் கிடைத்துள்ளது.

 பெருமை மீது பெருமை  ஜியோவுக்கு:

பெருமை மீது பெருமை ஜியோவுக்கு:

இப்படி ஜியோவுக்கு பெருமை மீது பெருமையாக சேர்ந்து வருகின்றது. விரைவில் ஜியோ நிறுவனம் அதிக வாடிக்கையாளர்கள் இந்தியாவில் பெற்றுள்ள நிறுவனம் என்ற பெருமையையும் இந்த நிறுவனத்திற்கு கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
reliance jio top telco in terms of adjusted gross revenue in september quarter : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X