தீபாவளி பரிசு அறிவித்த Mukesh Ambani- Jio 5G சேவை குறித்த முக்கிய அறிவிப்புகள்!

|

வருவது உறுதி, நேரமும் காலமும் விரைவில் அறிவிக்கப்படும் என்ற கேள்விகளுக்கு எல்லாம் சமீப காலமாக பதில் கிடைத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 5ஜி அறிமுக காலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 45வது ஆண்டு பொதுக் கூட்டம் (ஏஜிஎம்) இல் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

Reliance Jio 5ஜி சேவைகள்

Reliance Jio 5ஜி சேவைகள்

Reliance Jio 5ஜி சேவைகள் முதற்கட்டமாக டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தீபாவளித்தன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ இந்தியாவிற்கான 5ஜி சேவையை செயல்படுத்த Qualcomm உடன் இணைந்திருக்கிறது.

அக்டோபர் மாதத்திற்குள் 5ஜி சேவை

அக்டோபர் மாதத்திற்குள் 5ஜி சேவை

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 45வது ஆண்டு பொதுக் கூட்டம் (ஏஜிஎம்) இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் 5ஜி சேவைகளை அக்டோபர் மாதத்திற்குள் வெளியிடத் தொடங்கும் என முகேஷ் அம்பானி அறிவித்தார்.

நாட்டின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, தீபாவளிக்குள் மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் 5ஜி இணைப்பை செயல்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு நிறுவனம் ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளது.

இந்தியா முழுவதும் எப்போது 5ஜி?

இந்தியா முழுவதும் எப்போது 5ஜி?

அதேபோல் ரிலையனஸ் ஜியோவின் 5ஜி சேவை நாடு முழுவதும் டிசம்பர் 2023க்குள் அறிமுகம் செய்யப்படும் எனபது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜியோ இந்தியாவிற்கான 5ஜி சேவைகளை உருவாக்க குவால்காம் உடன் இணைந்துள்ளது.

end-to-end வயர்லெஸ் 5ஜி இணைப்பை வழங்குவதற்கு நிறுவனம் ஏர் ஃபைபர் சேவையையும் அறிவித்துள்ளது.

முகேஷ் அம்பானி அறிவிப்பு

முகேஷ் அம்பானி அறிவிப்பு

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 45வது ஏஜிஎம் இல் இந்தியாவிற்கான 5ஜி சேவை வெளியிடுவதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

வருகிற தீபாவளி பண்டிகைக்குள் டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய மெட்ரோ நகரங்களில் ஜியோ 5ஜியை அறிமுகப்படுத்தும் என முகேஷ் அம்பானி குறிப்பிட்டார்.

ஒவ்வொரு நகரம் மற்றும் தாலுகாவிலும் 5ஜி சேவை

ஒவ்வொரு நகரம் மற்றும் தாலுகாவிலும் 5ஜி சேவை

2023 டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நகரம் மற்றும் தாலுகாவிலும் ஜியோவின் 5ஜி சேவை கிடைக்கும் என்பதை அம்பானி உறுதிப்படுத்தினார்.

நிறுவனத்தின் 5ஜி வெளியீட்டுத் திட்டம் உலகிலேயே மிக வேகமானதாக இருக்கும் என குறிப்பிட்டார்.

ரிலையன்ஸ் ஜியோ தலைவர் ஆகாஷ் அம்பானி

ரிலையன்ஸ் ஜியோ தலைவர் ஆகாஷ் அம்பானி

ரிலையன்ஸ் ஜியோ தலைவர் ஆகாஷ் அம்பானி, ஜியோ ஏர்ஃபைபர் திட்டத்தையும் அறிவித்தார். இது பயனர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் கம்பி இல்லாமல் ஜிகாபிட் வேக இணையத்தை வழங்கும் என குறிப்பிட்டார்.

இணையற்ற டிஜிட்டல் அனுபவம் மற்றும் ஸ்மார்ட் ஹோம் சேவை

இணையற்ற டிஜிட்டல் அனுபவம் மற்றும் ஸ்மார்ட் ஹோம் சேவை

ஜியோ 5ஜி சேவை மூலமாக அனைவரையும், ஒவ்வொரு இடத்தையும், எல்லாவற்றையும்.. மிக உயர்ந்த தரம் மற்றும் மலிவான டேட்டா மூலம் இணைப்போம் என முகேஷ் அம்பானி குறிப்பிட்டார்.

அதேபோல் 5ஜி சேவை மூலம் இணையற்ற டிஜிட்டல் அனுபவங்கள் கிடைக்கும் எனவும் ஸ்மார்ட் ஹோம் சேவை மூலம் 100 மில்லியன் வீடுகளை சென்றடைவோம் எனவும் தெரிவித்தார்.

மிகப்பெரிய நெட்வொர்க்காக இருக்கும்

மிகப்பெரிய நெட்வொர்க்காக இருக்கும்

இந்தியாவின் தேவைகளை பூர்த்தி செய்வதோடு, உலகளாவிய சந்தைகளுக்கான டிஜிட்டல் தீர்வுகளை வழங்குவதில் ஆக்கப்பூர்வமாக செயல்படுவோம் என நம்புகிறோம். ஜியோ 5ஜி ஆனது உலகின் மிகப்பெரிய மற்றும் மேம்பட்ட 5ஜி நெட்வொர்க்காக இருக்கும்.

ரூ.2 லட்சம் கோடி முதலீடு

ஸ்டாண்ட்-அலோன் 5G கட்டமைப்பில் மூன்று வித நன்மை இருக்கிறது. அது 5ஜி கவரேஜ் திறன், தரம் மற்றும் மலிவு விலை சேவை ஆகும்.

பான்-இந்தியா நெட்வொர்க்கிற்கு நாங்கள் ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளோம். ரிலையன்ஸ் ஜியோ உலகின் அதிவேக 5ஜி திட்டத்தை உருவாக்கி இருக்கிறது.

தீபாவளிக்குள் பல முக்கிய நகங்களில் ஜியோ 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவோம் எனவும் டிசம்பர் 2023க்குள் இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திற்கும் 5ஜி சேவை வழங்குவோம் எனவும் குறிப்பிட்டார்.

Best Mobiles in India

English summary
Reliance Jio to Roll Out 5G Connectivity in India by Diwali: Mukesh Ambani

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X