இந்த "மேட்டர்" தெரிஞ்சா உங்க ஜியோ சிம் கார்ட்டை தூக்கி எரிஞ்சுடுவீங்க.!

|

அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெயிட் திட்டங்களில் சில மாற்றங்களைக் கொண்டுவந்து வாடிக்கையாளர்களிடம் இருந்து கடுமையான விமர்சங்களையும், எதிர்ப்புகளையும் பெற்று வருகிறது. குறிப்பாக அதன் மிகவும் பிரபலமான 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரூ.399/- என்ற "தண் தாணா தன்" திட்டத்தின் விலையை கடுமையாக உயர்த்தியது.

<strong>ஏரியா 51 : ஒட்டுமொத்த அமெரிக்க அரசும் மறைக்க விரும்பிய ஒரு இடம்..!</strong>ஏரியா 51 : ஒட்டுமொத்த அமெரிக்க அரசும் மறைக்க விரும்பிய ஒரு இடம்..!

கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி முதல் திட்டத்தின் விலை உயர்வு மற்றும் செல்லுப்படியாகும் காலத்தில் குறைப்பு ஆகியவைகள் அமலுக்கு வந்தன. ரூ.399/- என்ற ஜியோவின் பிரதான ரீசார்ஜ் பேக் ஆனது இனி ரூ.459/-க்கு கிடைக்கும்.

"சத்தமில்லாமல்" ஜியோ ஒரு காரியத்தை நிகழ்த்தியுள்ளது.!

இந்த திட்டத்தை அணுகும் சந்தாதாரர்கள் அதே வழக்கமான 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவையே பெறுவார்கள் என்று நிறுவனத்தின் வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட தகவல் கூறுகிறது. இதெல்லாம் ஒருபக்கமிருக்க "சத்தமில்லாமல்" ஜியோ ஒரு காரியத்தை நிகழ்த்தியுள்ளது தெரியவந்துள்ளது.

இன்டர்நெட் வேகத்திலும், ஜியோ கைவைத்துள்ளது.!

இன்டர்நெட் வேகத்திலும், ஜியோ கைவைத்துள்ளது.!

ரீசார்ஜ்களின் விலை உயர்வு, செல்லுபடியாகும் காலம் குறைப்பு ஆகியவர்களுடன் ரிலையன்ஸ் ஜியோ அதன் எப்யூபி வரம்பில் கைவைத்துள்ளது. எப்யூபி என்பது ஃபேர் யூஸேஜ் பாலிசி அதாவது நியாயமான பயன்பாட்டுக் கொள்கை ஆகும். விளங்கச்சொன்னால் குறிப்பிட்ட டேட்டா வரம்பை அடைந்த பிறகு இணையத்தின் வேகம் குறையும் அல்லவா.? அதுதான் எப்யூபி.!

ஒரு மிகப்பெரிய பின்னடைவாகும்.!

ஒரு மிகப்பெரிய பின்னடைவாகும்.!

அதாவது, ஜியோ வழங்கும் குறிப்பிட்ட வரம்பிற்கு பின்னாலான வேகமானது 128கேபிபிஎஸ்-ல் இருந்து 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்பட்டுள்ளது. தற்கால ஸ்மாபோன் பயனர்கள் தொடர்ந்து இணையத்துடன் இணைக்கப்பட்டு, மல்டிமீடியா உள்ளடக்கத்தைப் பயன்படுத்தும் நிலைப்பாட்டில் ரிலையன்ஸ் ஜியோவின் இந்த வேகக்குறைப்பு முடிவானது ஒரு மிகப்பெரிய பின்னடைவாகும்.

ஜியோ வேகக்குறைப்பு மூலம் இன்னும் சிக்கலாகும்.!

ஜியோ வேகக்குறைப்பு மூலம் இன்னும் சிக்கலாகும்.!

ஏற்கனவே நெரிசல் காரணமாக சிக்கலாகி கிடக்கும் இணைய பயன்பாடானது, ஜியோ வேகக்குறைப்பு மூலம் இன்னும் சிக்கலாகும். பேஸ்புக் அல்லது வாட்ஸ்ஆப் போன்றவைகளை கூட திறக்க முடியாமல் போகும். ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே இரண்டு சிம் கார்டுகளைப் பயன்படுத்துவதற்கான ஓரிரு போக்கை உருவாக்கி விட்டுள்ளது.

ஜியோ - ஒரு இரண்டாம் நிலை சிம்.!

ஜியோ - ஒரு இரண்டாம் நிலை சிம்.!

அதாவது ஒரு முதன்மை சிம் மற்றும் வரம்பற்ற தரவுகளுக்காக இரண்டாம் நிலை சிம் ஆக ஜியோ சேவை - இதுதான் நிதர்சனமான நிலைப்பாடு என்றிருக்கும் பட்சத்தில் வேகக்குறைப்பு நடவடிக்கையால், ஜியோ அதன் இரண்டாம் நிலை இடத்தை இழக்க நேரிடலாம் என்பது வெளிப்படை.

28 நாட்களுக்கு செல்லுபடியாகும்

28 நாட்களுக்கு செல்லுபடியாகும்

ரீசார்ஜ்களை பொறுத்தமட்டில் ரூ.399/- தவிர ஜியோவின் ரூ.149/- திட்டமானது, 2 ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்கி வந்த நிலைப்பாட்டில் தற்போது திருத்தப்பட்ட திட்டங்களின் கீழ் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் 4 ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்கும் அதாவது டேட்டா அளவை இரட்டிப்பாக வழங்கும்.

ரூ.459/-திட்டத்தை தான் அணுக வேண்டியது இருக்கும்.

ரூ.459/-திட்டத்தை தான் அணுக வேண்டியது இருக்கும்.

ரிலையன்ஸ் ஜியோ வலைத்தளத்தின்படி, ரூ.399/- திட்டத்தை அணுகவதற்கான கடைசி நாள் (அக்டோபர் 18, 2017) நேற்றே முடிந்துவிட்ட நிலைப்பாட்டில் இனி பயனர்கள் ரூ.459/-திட்டத்தை தான் அணுக வேண்டியது இருக்கும்.

புதிய ஜியோ ரூ.459 திட்டம்

புதிய ஜியோ ரூ.459 திட்டம்

திருத்தப்பட்ட புதிய ஜியோ ரூ.459 திட்டம், ஒரு நாளைக்கு 1 ஜிபி அதிவேக தரவை 84 நாட்களுக்கு வழங்கும், உடன் முந்தைய ரூ.399/- திட்டம் வழங்கிய அதே அழைப்பு நன்மைகளையும் வழங்கும். மறுகையில், குறைந்த விலை மற்றும் குறுகியகாலத் திட்டங்களுக்கு ஜியோ அதன் கட்டணத்தை குறைத்துள்ளது.

ரூ.98/- ஆனது இரண்டு வாரங்களுக்கு

ரூ.98/- ஆனது இரண்டு வாரங்களுக்கு

அதன்படி, ரூ.52 ஒரு வாரம் செல்லுபடியாகும் மற்றும் ரூ.98/- ஆனது இரண்டு வாரங்களுக்கு அதன் வாடிக்கையாளர்களுக்கு இலவச குரல், எஸ்எம்எஸ், வரம்பற்ற தரவு (0.15 ஜிபி தினசரி) வழங்கும்

வரம்பற்ற குரல் அழைப்பு

வரம்பற்ற குரல் அழைப்பு

ஜியோவின் அனைத்து திட்டங்களும் தொடர்ந்து ரோமிங் உட்பட அனைத்து வகையான வரம்பற்ற குரல் அழைப்புகளையும் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ரூ.149/- திட்டமானது 4ஜிபி டேட்டா வழங்குவதால் இனி இந்த திட்டம் தான் பெரும்பாலான மக்களால் தேர்நதெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.509/- திட்டமானது இனி

ரூ.509/- திட்டமானது இனி

திருத்தப்பட்ட ரூ.509/- திட்டமானது நாள் ஒன்றுக்கு 2ஜிபி அளவிலான 4ஜி தரவை 56 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்கி வந்த நிலைப்பாட்டில் இனி 49 நாட்களாக குறைக்கப்பெற்றுள்ளது. ஆக அதன் அதிவேக 112 ஜிபி டேட்டா 98 ஜிபி ஆக குறைக்கப்படுகிறது.

ரூ.999/- திட்டமானது இனி

ரூ.999/- திட்டமானது இனி

பதிவிறக்க வேகத்தில் வெட்டு இல்லாமல் 90 ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்கி வந்த ரூ.999/- திட்டமானது இனி மூன்று மாதங்களுக்கு 60ஜிபி அதிவேக தரவு மட்டுமே வழங்கும்.

Best Mobiles in India

English summary
Reliance Jio throttles FUP speeds and they are a joke. Read more about this in Tamil GizBo

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X