இதுக்கு இலவசமாகவே தந்துடலாமே - மிரண்டுபோன 'ஏர்டெல்' சுனில் மிட்டல்.!

'ஜியோ' வெளியிட்ட அதன் அனைத்து மொபைல் நெட்ஒர்க் சேவைகளுக்குமான கட்டண விவரங்கள் குறித்து காட்டமான கருத்து தெரிவித்துள்ளார் 'ஏர்டெல்' சுனில் மிட்டல்.

By Ilamparidi
|

தொலைத்தொடர்புத் துறையில் ஜியோவின் வருகை ஏனைய மொபைல் நெட்ஒர்க் நிறுவனங்கள் அனைத்தையும் பெரும் மிரட்சிக்கு உள்ளாக்கியது.அதற்கான காரணம் ஜியோ வாய்ஸ் கால் உட்பட தனது அனைத்து சேவைகளும் இலவசமென்று அறிவித்து களமாட இறங்கியதுதான்.

அதன் பிறகு குறைந்த காலத்தில் அதிகப்படியான வாடிக்கையாளர்களைப் பெற்றதோடு மட்டுமன்றி தனது வாடிக்கையாளர்களுக்கான சலுகைகளை வெவ்வேறு பெயர்களில் கால நீட்டிப்பு செய்து வழங்கி வருகிறது.ஏப்ரல் 1 முதல் தனது சேவைகளுக்கான கட்டண விவரங்களை சமீபத்தில் வெளியிட்டது.அதுகுறித்து ஏர்டெல்லின் சுனில் மிட்டல் காட்டமான கருத்துக்களை கூறியுள்ளார்.அதுகுறித்த விவரமான தகவல்கள் கீழே.

ஜியோ:

ஜியோ:

'ஜியோ' இந்தப் பெயர் அதன் வாடிக்கையளர்களை எந்த அளவினுக்கு மிகுந்த மகிழ்ச்சியினுக்கு உள்ளாக்குகிறதோ அதனை விட அதிகப்படியான அளவினுக்கு அதன் சக மொபைல் நெட்ஒர்க் நிறுவனங்களை மிரட்சியில்,கவலையில் ஆழ்த்துகிறது.அதற்கான காரணம்,தொலைத்தொடர்புத் துறை வரலாற்றிலேயே இல்லாத அளவினுக்கு எல்லாச் சேவைகளையும் இலவசமாக வழங்கி தமது அறிமுகத்தின் மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியினையும்,பிற நெட்ஒர்க் நிறுவனங்களுக்கு பேரதிர்ச்சியையும் ஒரு சேர வழங்கி களத்தில் கால் பதித்தது ஜியோ.

எல்லாச் சேவைகளும் இலவசம்:

எல்லாச் சேவைகளும் இலவசம்:

தொலைத்தொடர்புத் துறையில் ஜியோவின் அறிமுகத்தின் போது பிற நெட்ஒர்க் நிறுவனங்களால் நினைத்துக்கூட பார்க்கவியலாத வகையில் 'வெல்கம் ஆஃபர்' என்னு பெயரில் தனது எல்லாச் சேவைகளையும் இலவசமாக வழங்கி தனது அறிமுகத்தின் போதே அதிரடி காட்டியது ஜியோ.அதாவது,வாய்ஸ் கால்,மெசேஜ்,4ஜி வேகத்தில் டேட்டா சேவை,ரோமிங் உள்ளிட்ட தனது எல்லாச் சலுகைகளையும் இலவசமாக வழங்கத்துவங்கியது.

பெயர் மாற்றம்-சலுகைகள் நீட்டிப்பு:

பெயர் மாற்றம்-சலுகைகள் நீட்டிப்பு:

ஜியோவின் இந்த சலுகைகள் காரணமாக மிகக்குறைந்த நாட்களிலேயே நாடு முழுமையிலும் அதிகப்படியான வாடிக்கையாளர்களைப் பெற்றது.அதுமட்டுமன்றி,பிற மொபைல் நெட்ஒர்க் நிறுவன பயனாளர்களையும் தனது கவர்ச்சியான சலுகைகள் மூலம் தன் பக்கம் ஈர்த்தது ஜியோ.ஒரு புறம் பிற நெட்ஒர்க் நிறுவனங்கள் தமது அதிருப்தியை பதிவு செய்துகொண்டிருந்தபோதே,தனது இலவச சலுகைகளை சென்ற ஆண்டின் முடிவில் இச்சலுகைகள் அடுத்த ஆண்டு மார்ச் வரை தொடரும் என அறிவிப்பு வெளியிட்டது ஜியோ.

அதிர்ந்த பிற நெட்ஒர்க் நிறுவனங்கள்-குறைந்த கட்டணங்கள்:

அதிர்ந்த பிற நெட்ஒர்க் நிறுவனங்கள்-குறைந்த கட்டணங்கள்:

ஜியோவின் மேற்கண்ட இலவச சலுகைகள் மற்றும் அது 2017 மார்ச் வரை தொடரும் என்பது போன்ற அதிரடியான அறிவிப்புகளால் பிற மொபைல் நெட்ஒர்க் நிறுவனங்கள் என்ன செய்வதென்று புரியாமல் அதிர்ந்து தான் போயின.ஓர் புறம் ஜியோவின் இலவச சலுகைகள்,மறுபுறம் ஜியோவினை நோக்கிச் செல்லும் தமது வாடிக்கையாளர்கள் என்ன செய்வதென்று புரியாமல் 'சார்..அவன் என்ன கிள்ளுறான் சார்' என்கிற ரீதியில் நீதிமன்றத்தின் கதவைத் தட்டின.

விலைகுறைப்பு:

விலைகுறைப்பு:

ஜியோவின் இலவச சலுகைகள் குறித்து நீதிமன்றம் துவங்கி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உள்ளியிட்ட எல்லா இடங்களிலும் புகார் பட்டியல் வாசித்து ஓய்ந்து பிறகு ஓர் வழியாக தமது மொபைல் நெட்ஒர்க் சேவைகளில் விலை குறைப்பு,வாடிக்கையாளர்களை கவரும் வகையிலான சலுகைகள் பல வற்றினை வெளியிட்டு வருகின்றன.

'டல்லான' ஏர்டெல்:

'டல்லான' ஏர்டெல்:

பெரும் புயல் மழையில் சிக்கி கிளைகள் முறிந்து பலத்த சேதாரங்களுக்கு ஆளாகும் மரங்களைப்போல ஜியோ புயலில் எல்லா நெட்ஒர்க் நிறுவனங்களும் சிக்கி தமது வேர்களான வாடிக்கையாளர்களை இழந்து கொண்டிருந்த சூழலில்,இனியும் உயிர் பிழைத்திருக்க வேண்டுமெனில் வேர்களான வாடிக்கையாளர்களுக்கு தமது எல்லாச் சேவைகளிலும் விளைக்குறைப்பு வழங்கின.அவற்றில் குறிப்பிட தகுந்த அளவில் தமது வாடிக்கையாளர்களை இழந்து நிறுவனம் 'ஏர்டெல்'.இது 54 சதவிகிதம் வருமானத்தினை இழந்தது.

விலைகுறைப்பு:

விலைகுறைப்பு:

இந்நிலையில்,சில நாட்களுக்கு முன் தமது வாடிக்கையாளர்களுக்காக ஏப்ரல் 1 முதல் ரோமிங் கட்டணம் ரத்து ,இலவச இன்கம்மிங் கால்,டேட்டா சலுகைகள் இவை தவிர்த்து தமது பல சேவைகளில் விலைகுறைப்பு உள்ளிட்டவற்றினை அறிமுகப்படுத்தியது.

காட்டமான கருத்து:

காட்டமான கருத்து:

ஜியோவின் இலவச சலுகைகள் மார்ச் 31 இந்தச் சலுகைகள் முடிவுற்றாலும் ஜியோ ப்ரைம் மெம்பாரனால் ஏப்ரல் 1 முதல் இதே சலுகைகளினை தொடர்ந்து பெறலாம் எனவும்,அப்படி ப்ரைம் ஆகாதவர்களுக்கென சில கட்டண விவரங்களையும் வெளியிட்டது ஜியோ. இந்நிலையில் அதுகுறித்து கருத்து தெரிவித்த ஏர்டெல்லின் சிஇஓ சுனில் மிட்டல்"ஏப்ரல் 1 முதல் அவர்கள் தமது சேவைகளுக்கு கட்டணம் விதிக்கப்படும் என அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்கு உரியது.ஆனால்,அவர்கள் அறிவித்துள்ள கட்டண விவரங்கள் சற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடியவை இல்லை எனவும்,மிக்க குறைந்த கட்டணத்தை விதிப்பதனை விடவும் அவர்கள் இலவசமாக வழங்குவதே மேல்" என தற்போது நடைபெற்று வரும் டபள்யூஎம்சி மாநாட்டில் ஜியோ கட்டண விவரங்கள் குறித்த காட்டமான பதிலளித்தார் 'ஏர்டெல்' சுனில் மிட்டல்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஏப்ரல் 1 முதல் "மெல்ல மெல்ல" இலவசங்களை வழங்க ஏர்டெல் திட்டம்.!

Best Mobiles in India

English summary
Reliance Jio Tariff Very Aggressive, Unsustainable: Airtel's Sunil Mittal.Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X