கொரோனாவை எதிர்கொள்ள jio சிறப்பு முயற்சி! என்ன தெரியுமா?
இந்தியாவில் கொரோனாவை எதிர்கொள்வதற்கு ஜியோ, மத்திய அரசுக்கு முழு முயற்சியில் உதவி செய்து வருகிறது. தொலைத் தொடர்பு சேவை மட்டுமின்றி மருத்துவ சேவையிலும் முழு முயற்சியுடன் ஈடுபட்டு வருகிறது.

மார்ச் 31ம் தேதி வரை 144 தடைஉத்தரவு
உலகிலேயே இன்று பெரும் அச்சுறுத்தலில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ், இந்தியாவிலும் தன் வேலையை காட்டி வருகிறது. மேலும் கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் நாளை (மார்ச் 24) மாலை ஆறு மணி தொடங்கி மார்ச் 31ம் தேதி வரை 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும்
அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும் என்றும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டும் இயங்கும் என தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கொரோனா வைரஸின் தாக்கத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக ஜியோ நிறுவனம் தற்போது இந்த புதிய work from home திட்டத்தை இந்தியாவில் தனது பயனர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது.

புதிய ரூ.251 ‘work from home' திட்டம்
டேட்டா நன்மை மட்டுமே கிடைக்கும் இந்த புதிய ரூ.251 ‘work from home' திட்டம் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் பயனர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த work from home ப்ரீபெய்ட் திட்டத்தில் பயனர்களுக்கு ஜியோவின் டேட்டா நன்மைகள் மட்டும் தான் வழங்கப்படுகிறது. இத்திட்டம் கூடுதல் அழைப்பு சலுகை மற்றும் எஸ்.எம்.எஸ் சலுகை போன்று எதுவும் இந்த திட்டத்தில் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

251 ரூபாயில் ஒட்டுமொத்தமாக 120 ஜிபி டேட்டா
251 ரூபாயில் ஒட்டுமொத்தமாக 120 ஜிபி டேட்டா இந்த ரூ.251 ஜியோவின் திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 2 ஜிபி டேட்டா என்று ஒட்டுமொத்தமாக 120 ஜிபி என்று தொடர்ச்சியாகத் தடையின்றி 51 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. டேட்டா வரம்பைப் பயனர்கள் எட்டியதும், பயனர்களுக்கு டேட்டா நன்மையின் வேகம் குறைக்கப்பட்டு 64 kbps என்ற வேகத்தில் வழங்கப்படுகிறது. இந்த ரூ.251 திட்டம் டேட்டா பூஸ்டர் திட்டமாக மட்டுமே பயன்படுகிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

4ஜி டேட்டா வவுச்சர்கள் பிரிவு
4ஜி டேட்டா வவுச்சர்கள் பிரிவின் கீழ் இந்த திட்டம் ஜியோ பயனர்கள் இந்த ரூ.251 ரீசார்ஜ் திட்டத்தை மைஜியோ பயன்பாட்டிற்குச் சென்று ரீசார்ஜ் செய்துகொள்ளலாம் அல்லது ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று work from home என்ற இந்த திட்டத்தை ஜியோவின் 4ஜி டேட்டா வவுச்சர்கள் பிரிவின் கீழிருந்து தேர்வு செய்துகொள்ளலாம். பிஎஸ்என்எல் மற்றும் ஆக்ட் ஃபைபர்நெட் அதன் பயனர்களுக்கு work from home திட்டத்தை அறிமுகம் செய்ததும் ஜியோ இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

4 ஜி டேட்டா வவுச்சர்
அதேபோல் ஜியோ நிறுவனம் கடந்த வாரம் தனது 4 ஜி டேட்டா வவுச்சர்களில் சில மாற்றங்களைச் செய்து திருத்தியுள்ளது. ஜியோவின் 4 ஜி டேட்டா வவுச்சர்கள் இப்பொழுது ரூ.11 இல் தொடங்குகின்றன, இது 800 எம்பி டேட்டா மற்றும் 75 நிமிட ஜியோ அல்லாத அழைப்புகளுடன் வருகிறது. இரண்டாவது 4 ஜி டேட்டா வவுச்சர் ரூ.21 என்ற விலையில், 2 ஜிபி டேட்டா மற்றும் 200 நிமிட ஜியோ அல்லாத அழைப்பு நிமிடங்களுடன் வருகிறது.

12 ஜிபி டேட்டா கிடைக்கும் வவுச்சர்
அடுத்தபடியாக ஜியோவின் ரூ.51 விலையில் கிடைக்கும் 4 ஜி டேட்டா வவுச்சரின் கீழ் பயனர்களுக்கு இது 6 ஜிபி டேட்டா மற்றும் 500 நிமிட ஜியோ அல்லாத அழைப்பு நிமிடங்களை வழங்குகிறது. இறுதியாக ஜியோவின் அதிகவிலை கொண்ட டேட்டா வவுச்சராக ரூ.101 திட்டம் இருக்கிறது, இத்திட்டத்தின் கீழ் 12 ஜிபி டேட்டாவும், 1000 நிமிட ஜியோ அல்லாத அழைப்பு நிமிடங்களும் கிடைக்கிறது.

மைக்ரோசாஃப் நிறுவனத்துடன் கூட்டணி
ஜியோ மைக்ரோசாஃப் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து தனி நபர்கள், மாணவர்கள், கல்வி மற்றும் மருத்துவ மையங்களை சேர்ந்தவர்கள் ஆன்லைன் மூலம் தங்கள் பணிகளை தனித்து மேற்கொள்ள முடியும்.

Healthcare at home திட்டம்
Healthcare at home, திட்டம் மூலம் ஒருவர் தங்களது வீட்டில் இருந்தபடியே கொரோனா தொடர்பான சோதனைகளையும் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை அடுத்து மருத்துவமனைகளில் தேவையில்லாமல் கூட்டம் சேருவது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Jio Haptik என்ற தொழில்நுட்பம்
அதேபோல் ரிலையன்ஸ் நிறுவனத்தில் Jio Haptik என்ற தொழில்நுட்பம்தான் இந்திய அரசின் வாட்ஸ்அப் உதவி சேவைக்குத் துணை புரிந்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது. இதன்படியே அரசின் 'MyGov Corona Helpdesk' செயல்பட்டு வருகிறது.

அரசின் தேவைக்கு ஏற்ப உடனுக்குடனான அப்டேட்
இந்த செயல்பாட்டின் மூலம் மக்கள் கொரோனா வைரஸ் குறித்த அதிகாரப்பூர்வ சந்தேகங்களை தீர்த்து வருகிறது. அரசின் வேண்டுகோளுக்கு இணங்க Jio Haptik சேவை முற்றிலும் அரசின் தேவைக்கு ஏற்ப உடனுக்குடனான அப்டேட்களுடன் இலவசமாக வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications