நிறுத்தப்பட்டது ஜியோபோன் முன்பதிவு : என்ன காரணம்.?
கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி ஜியோபோன் முன்பதிவு தொடங்கப்பட்டது, அதையடுத்து இப்போது தற்காலிகமாக ஜியோபோன் முன்பதிவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜியோபோன் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி முன்பதிவு ஆரம்பம் எனத் தெரிவித்திருந்தது. ஜியோ நிறுவனம் முன்பதிவு தொடங்கப்பட்ட சில மணி நேரங்களிலே 30லட்சம் மொபைல்கள் முன்பதிவு செய்யப்பட்டது என ஜியோ நிறுவனம் தெரிவித்தது.

தற்சமயம் ரிலையன்ஸ் ஜியோ போன் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது,மேலும் இந்தியா முழுவதும் அதிக மக்கள் ஜியோ போனை வாங்க ஆர்வமாக உள்ளனர்.

முன்பதிவு:
கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி ஜியோபோன் முன்பதிவு தொடங்கப்பட்டது, அதையடுத்து இப்போது தற்காலிகமாக ஜியோபோன் முன்பதிவு
நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இணையதளம்:
ஜியோபோன் அடுத்த முன்பதிவு தேதி மற்றும் நேரம் குறித்த விபரங்களை அறியவேண்டுமெனில் ஜியோ இணையதளம் சென்று பார்க்கமுடியும். கூடிய விரைவில் முன்பதிவு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ பீச்சர் போன்:
ஜியோ பீச்சர் போன் பொதுவாக 2.4-இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது, அதன்பின் (240-320)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது இந்த பீச்சர் போன்.அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கேமரா மற்றும் பேட்டரி:
ஜியோ பீச்சர் போன் 2மெகாபிக்சல் ரியர் கேமரா மற்றும் விஜிஏ முன்புற கேமரா வசதி இவற்றில் இடம்பெற்றுள்ளது, அதன்பின் 2000எம்ஏஎச் பேட்டரி இவற்றில் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கேபிள்:
ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ பீச்சர் போன் உடன் புதிய கேபிள் ஒன்றை அறிமுகம் செய்துவைத்துள்ளது. இவை டிவியுடன் இனைத்து வீடியோக்களை பார்க்கும் வசதி செய்துதரப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஒற்றை சிம் கார்டு:
தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட 4ஜி வசதி கொண்ட ஜியோபோன் பொறுத்தவரை ஒற்றை சிம் கார்டு சிம்கார்டு போடும் வசதி மட்டுமே உள்ளது. இரட்டை சிம் வசதி கொண்ட பீச்சர் போன் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என முகேஷ் அம்பானி தெரிவித்தார். அதன்பின்பு இவற்றில் ஜியோவின் ஜியோ டிவி, ஜியோ சினிமா உள்படி சில செயலிகளை இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது


Click it and Unblock the Notifications