ரூ.14,000 கோடியை டெபாசிட் செய்த Jio..எதற்கு தெரியுமா? வாயைப் பிளந்த Airtel மற்றும் Vi நிறுவனங்கள்!

|

ரிலையன்ஸ் ஜியோ (Jio) தான் இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனம் என்பதை ஜியோ மீண்டும் நிரூபித்துள்ளது. இந்தியாவில் 5ஜி துவங்கும் பனி மும்முரமாக நடைபெற்று வருகிறது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இப்போது, இதற்கான ஏலம் மிக விரைவில் நடைபெறவிருக்கும் காரணத்தினால், டெலிகாம் நிறுவனங்கள் அனைத்தும் அவற்றின் செயல்களைத் தீவிரமாக்கியுள்ளன. இதில் நாட்டில் உள்ள அனைத்து முன்னணி நிறுவனங்களும் போட்டியிடுகின்றன.

ரூ.14,000 கோடியை டெபாசிட் செய்ததா ஜியோ?

ரூ.14,000 கோடியை டெபாசிட் செய்ததா ஜியோ?

இந்த போட்டியின் ஆரம்பம் இப்போதே துவங்கிவிட்டது. இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம், 5ஜி ஏலத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக ரூ.14,000 கோடியை EMD கட்டணமாக டெபாசிட் செய்துள்ளது. உண்மையில், ரூ.14,000 கோடியை ஜியோ முதலீடு செய்யும் என்று எந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களும் எதிர்பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Airtel மற்றும் Vi எவ்வளவு டெபாசிட் செய்தது?

Airtel மற்றும் Vi எவ்வளவு டெபாசிட் செய்தது?

ஜியோவை தொடர்ந்து, நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமான பாரதி ஏர்டெல் நிறுவனம், 5ஜி ஏலத்திற்காக ரூ. 5,500 கோடியை EMD ஆக டெபாசிட் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து, வோடபோன் ஐடியா நிறுவனம் இந்தியாவின் 5ஜி ஏலத்திற்காக ரூ.2,200 கோடியை முதலீடு செய்துள்ளது. இந்த மூன்று முன்னணி நிறுவனங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில், ஜியோ அதிகளவு டெபாசிட் செய்துள்ளது தெளிவாகத் தெரிகிறது.

அதானி டேட்டா நெட்வொர்க்கின் டெபாசிட் தொகை இவ்வளவு தானா?

அதானி டேட்டா நெட்வொர்க்கின் டெபாசிட் தொகை இவ்வளவு தானா?

தொலைத்தொடர்புத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட முன் தகுதி பெற்ற ஏலதாரர்களின் பட்டியலின்படி, அதானி டேட்டா நெட்வொர்க்கின் EMD தொகை ரூ. 100 கோடியாக இருக்கிறது. இப்படி ஒவ்வொரு நிறுவனமும் அவர்களால் முடிந்த டெபாசிட் தொகையை டெபாசிட் செய்துள்ளன. இந்த டெபாசிட் செய்யப்பட்ட EMD தொகைக்கு ஏற்ப நிறுவனங்களுக்குத் தகுதி புள்ளிகள் பிரித்து வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

1 இல்ல 2 இல்ல மொத்தம் 12 OTT சேனல்! விலை வெறும் ரூ.149 மட்டுமே! Airtel-லின் இந்த திட்டம் தான் பெஸ்ட்!1 இல்ல 2 இல்ல மொத்தம் 12 OTT சேனல்! விலை வெறும் ரூ.149 மட்டுமே! Airtel-லின் இந்த திட்டம் தான் பெஸ்ட்!

ஜியோவுக்கு ஒதுக்கப்பட்ட தகுதிப் புள்ளிகள் எவ்வளவு தெரியுமா?

ஜியோவுக்கு ஒதுக்கப்பட்ட தகுதிப் புள்ளிகள் எவ்வளவு தெரியுமா?

ரூ.14,000 கோடியை டெபாசிட் தொகையாக ஏலத்தில் முதலீடு செய்ததைத் தொடர்ந்து ஜியோவுக்கு ஒதுக்கப்பட்ட தகுதிப் புள்ளிகள் 1,59,830 ஆக உள்ளது. இது 5ஜி ஏலப் போட்டில் பங்குபெற்ற நான்கு ஏலதாரர்களின் பட்டியலில் அதிகபட்சமாக உள்ளது. இதனைத் தொடர்ந்து, ஏர்டெல்லுக்கு ஒதுக்கப்பட்ட தகுதிப் புள்ளிகள் 66,330 ஆக இருக்கிறது. இதேபோல், வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட தகுதிப் புள்ளிகள் 29,370 ஆக இருக்கிறது.

தகுதி புள்ளிகள் ஏன் முக்கியமானவை?

தகுதி புள்ளிகள் ஏன் முக்கியமானவை?

பொதுவாக, EMD தொகைகள் ஏலத்தில் பங்குபெறும் வீரர்களின் உத்தி மற்றும் ஏலத்தில் வழங்கப்படும் ஸ்பெக்ட்ரம்களை தேர்ந்தெடுப்பதற்கான பரந்த அளவிலான வாய்ப்பை வழங்குகிறது. இந்த ஏலத்தில் நிறுவனங்களுக்குக் கிடைக்கும் தகுதி புள்ளிகளை வைத்துத் தான் நிறுவனங்கள் அவற்றின் 5ஜி சேவையைத் துவங்க முடியும். தகுதி புள்ளிகளின் அடிப்படையின் மூலம் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கொடுக்கப்பட்ட வட்டத்தில் குறிப்பிட்ட அளவிலான ஸ்பெக்ட்ரத்தை குறிவைக்க முடியும்.

மனிதகுலம் இதுவரை கண்டிராத கோணத்தில் கிரகம் 5! மூன்று நிலவுகளை காட்டிய James Webb Space Telescope!மனிதகுலம் இதுவரை கண்டிராத கோணத்தில் கிரகம் 5! மூன்று நிலவுகளை காட்டிய James Webb Space Telescope!

5ஜி ஏலத்தின் பிளாக்கில் ரூ.4.3 லட்சம் கோடியா?

5ஜி ஏலத்தின் பிளாக்கில் ரூ.4.3 லட்சம் கோடியா?

அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் அதன் டெபாசிட் அடிப்படையில் 1,650 தகுதி புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் வரும் ஜூலை 26ம் தேதி தொடங்க உள்ளது. மொத்தம் 72 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் பிளாக்கில் போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் குறைந்தபட்சமாக ரூ.4.3 லட்சம் கோடி பிளாக்கில் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு குறைந்த ஃபிரிக்குவென்சி ரேடியோ அலைகளுக்கு ஏலம் நடத்தப்படும்.

என்னென்ன ஃபிரிக்குவென்சி ரேஞ்கள் கிடைக்கப்போகிறது?

என்னென்ன ஃபிரிக்குவென்சி ரேஞ்கள் கிடைக்கப்போகிறது?

இதில் 600 மெகா ஹெர்ட்ஸ், 700 மெகா ஹெர்ட்ஸ், 800 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 2300 மெகா ஹெர்ட்ஸ் போன்றவை குறைந்த ஃபிரிக்குவென்சி கீழ் வரும். அதேபோல், 3300 மெகாஹெர்ட்ஸ் மிட் ரேஞ் ஃபிரிக்குவென்சிக்குள் வரும். ஹை-ஃபிரிக்குவென்சி பிரிவில் 26 மெகாஹெர்ட்ஸ் ரேடியோ அலைகளுக்கு ஏலம் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை 26 ஆம் தேதி நடைபெறும் ஏலத்தில் எந்தெந்த நிறுவனங்களை எந்தெந்த ஃபிரிக்குவென்சியில் 5ஜியை தேர்வு செய்கிறது என்பதைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறது.

கம்மி கரண்ட் பில்லுடன் சில்லுனு காத்து வேணுமா? வந்தாச்சு புதிய Xiaomi ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஃபேன் 2!கம்மி கரண்ட் பில்லுடன் சில்லுனு காத்து வேணுமா? வந்தாச்சு புதிய Xiaomi ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஃபேன் 2!

இந்த 13 இந்திய நகரங்களில் தான் முதல் 5ஜி

இந்த 13 இந்திய நகரங்களில் தான் முதல் 5ஜி

5ஜி இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற கேள்விக்கான பதில் என்னவாக இருக்கிறது என்று இப்போது பார்க்கலாம். இந்திய நகரங்களில் உள்ள முக்கியமான நகரங்களில் மட்டும் முதற்கட்டமாக 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி, வருகின்ற 2022 ஆம் ஆண்டில் 5G சேவையுடன் இணைப்பு கிடைக்கப்போகும் முக்கிய நகரங்களின் பட்டியலில் 13 இந்திய நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.

6G சேவைக்கு சைலெண்டாக தயாராகிறதா இந்தியா?

6G சேவைக்கு சைலெண்டாக தயாராகிறதா இந்தியா?

இந்த பட்டியலின் தகவல் படி, இந்தியாவின் முக்கிய நகரங்களான கொல்கத்தா, பெங்களூர், குருகிராம், புனே, காந்திநகர், டெல்லி, மும்பை, ஹைதராபாத், லக்னோ, சென்னை, அகமதாபாத், சண்டிகர் மற்றும் ஜாம்நகர் ஆகிய 13 நகரங்களுக்கு முதலில் 5ஜி சேவை கிடைக்கப்போகிறது. தற்போது நடத்தப்படும் 5G சோதனைகளை வைத்து, 6G உடன் தொடர்புடைய தொழில்நுட்பங்களுக்கான ஆரம்ப ஆராய்ச்சியை விரைவில் இந்தியா துவங்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Reliance Jio Submits Rs 14000 Crore As Earnest Money Deposit Ahead Of India's 5G Auction

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X