வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி: ஜியோ குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்கள் நிறுத்தம்- ஆரம்ப விலை இதுதான்!

|

ஜியோ போன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.100-க்கு குறைந்த விலை ரீசார்ஜ் திட்டமான இரண்டு திட்டங்களை நீக்கியதன் மூலம் இப்போது மலிவு விலை ரீசார்ஜ் திட்டமாக ரூ.75 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆல்-இன்-ஒன் திட்டம்

ஆல்-இன்-ஒன் திட்டம்

ஜியோ நிறுவனம் தனது ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு என்று ஆல்-இன்-ஒன் All-in-One திட்டங்களை அறிமுகம் செய்தது. மேலும் அன்மையில் ஜியோ நிறுவனம் இலவச அழைப்புகள் கிடையாது எனக் கூறி, நிமிடத்திற்கு 6பைசா என்கிற கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று தெரிவித்தது.

நான்கு ப்ரீபெய்ட் திட்டம்

நான்கு ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனம் ரூ.222, ரூ.333, ரூ.444 மற்றும் ரூ.555 என்கிற நான்கு ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்தது இந்நிறுவனம், இந்த திட்டங்கள அனைத்தும் 1000 ஆப் நெட் நிமிடங்கள் மற்றும் டேட்டா சலுகையுடன் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் முதல் AR வெளியீட்டு நிகழ்வில் OnePlus நோர்ட் ஜூலை 21 தேதி அறிமுகம்!உலகின் முதல் AR வெளியீட்டு நிகழ்வில் OnePlus நோர்ட் ஜூலை 21 தேதி அறிமுகம்!

குறைந்த விலை ரீசார்ஜ் திட்டம்

குறைந்த விலை ரீசார்ஜ் திட்டம்

இருப்பினும் ஜியோ போன் பயனர்களுக்கான குறைந்த விலை ரீசார்ஜ் திட்டமானது தற்போது ரூ.75 முதல் தொடங்குகிறது. முன்னதாக ரூ.100-க்கு கீழ் வழங்கி வந்த ரூ.49 மற்றும் ரூ.69 திட்டங்கள் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரூ.49 விலையில் வழங்கும் திட்டம்

ரூ.49 விலையில் வழங்கும் திட்டம்

ரூ.49 விலையில் வழங்கும் திட்டத்தில் 2ஜிபி 4 ஜி தரவு 25 எஸ்எம்எஸ் வழங்குவதோடு வரம்பற்ற ஜியோ டூ ஜியோ அழைப்புகளும் பிற நெட்வொர்க் அழைப்புகளுக்கு 250 எஃப்யூபி நிமிட அழைப்புகளும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

ரூ.69 திட்டம் நிறுத்தம்

ரூ.69 திட்டம் நிறுத்தம்

அதேபோல் ரூ.69 திட்டத்தில் ஜியோ 7 ஜிபி தரவு நாள் ஒன்றுக்கு 500 எம்பி டேட்டா சலுகையோடடு 25 எஸ்எம்எஸ்களும் ஜியோ டூ ஜியோ வரம்பற்ற அழைப்புகளோடு சில பாராட்டு சந்தாக்களையும் வழங்கியது.

ஆரம்ப விலை ரூ.75

ஆரம்ப விலை ரூ.75

இந்த நிலையில் குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்கள் இரண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து தற்போது மலிவு விலை திட்டமாக ரூ.75 திட்டம் உள்ளது. இதன்மூலம் வழங்கும் திட்டம் குறித்து பார்க்கலாம்.

ரூ.75 ரீசார்ஜ் திட்டம்

ரூ.75 ரீசார்ஜ் திட்டம்

ஜியோபோன் வாடிக்கையாளர்கள் ரூ.75-திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 3ஜிபி டேட்டா, ஜியோ-டு-ஜியோ இலவச அழைப்புகள், ஜியோ அல்லாத (மற்ற நெட்வர்க்) எண்களுக்கு 500நிமிட குரல் அழைப்புகளை வழங்குகிறது.

ரூ.125-ரீசார்ஜ் திட்டம்

ரூ.125-ரீசார்ஜ் திட்டம்

ஜியோபோன் வாடிக்கையாளர்கள் ரூ.125-திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 14ஜிபி டேட்டா, ஜியோ-டு-ஜியோ இலவச அழைப்புகள், ஜியோ அல்லாத (மற்ற நெட்வர்க்)எண்களுக்கு 500நிமிட குரல் அழைப்புகளை வழங்குகிறது.

 ரூ.155-ரீசார்ஜ்

ரூ.155-ரீசார்ஜ்

ஜியோபோன் வாடிக்கையாளர்கள் ரூ.155-திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 28ஜிபி டேட்டா, ஜியோ-டு-ஜியோ இலவச அழைப்புகள், ஜியோ அல்லாத (மற்ற நெட்வர்க்) எண்களுக்கு 500நிமிட குரல் அழைப்புகளை வழங்குகிறது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மேட் இன் இந்தியா டிவி பட்டியல்! அடேங்கப்பா இவ்வளவு பிரண்டா இருக்கு?இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மேட் இன் இந்தியா டிவி பட்டியல்! அடேங்கப்பா இவ்வளவு பிரண்டா இருக்கு?

 ரூ.185-ரீசார்ஜ்

ரூ.185-ரீசார்ஜ்

ஜியோபோன் வாடிக்கையாளர்கள் ரூ.185-திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 56ஜிபி டேட்டா, ஜியோ-டு-ஜியோ இலவச அழைப்புகள், ஜியோ அல்லாத (மற்ற நெட்வர்க்) எண்களுக்கு 500நிமிட குரல் அழைப்புகளை வழங்குகிறது.மேலும் ஜியோ நிறுவனம் வழங்கும் இந்த திட்டத்தில் ரூ.75, ரூ.125, ரூ.155 மற்றும் ரூ.185 திட்டங்கள் 28நாட்கள் செல்லுபடியாகும்.

Best Mobiles in India

English summary
Reliance jio stops its popular Rs.49 and Rs.69 plans

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X