Home
News

1.1 TB டேட்டா; 100 Mbps வேகம்; ஜியோபைபர் சேவையின் விலை விவரங்கள் வெளியானது.!

இந்நிலைப்பாட்டில், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதன் பிராட்பேண்ட் சேவை பற்றிய புதிய விவரங்கள் வெளியாகி உள்ளது.

By Muthuraj

ஜியோவின் அதிரடியான நுழைவால், ஆயிரம், இரண்டாயிரம் என்கிற விகிதத்தில் ஆபர்களை வழங்கிய பார்தி ஏர்டெல் நிறுவனம், இன்று நூறு ரூபாய்க்கும் ஐம்பது ரூபாய்க்கும் இறங்கி வந்து, தன்னிடம் இருக்கும் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொண்டுள்ளது. பார்தி ஏர்டெல்லுக்கு மட்டுமல்ல, வோடபோன் இந்தியா, ஐடியா செல்லுலார், டாடா டோகோமோ, பிஎஸ்என்எல் உட்பட அனைத்து இந்திய டெலிகாம் சேவை வழங்குநர்களின் கதியும் இது தான்.!

1.1 TB டேட்டா; 100 Mbps வேகம்; ஜியோபைபர் சேவையின் விலை விவரங்கள்.!

இந்நிலைப்பாட்டில், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதன் பிராட்பேண்ட் சேவை பற்றிய புதிய விவரங்கள் வெளியாகி உள்ளது. கூறப்படும் பிராட்பேண்ட் சேவையானது, ஜியோ 4ஜி சேவையை போன்றே, கற்பனைக்கு எட்டாத டேட்டா நன்மைகளையும், நம்பமுடியாத பிராட்பேண்ட் வேகத்தையும் வழங்குகிறது. அது சார்ந்த விரிவான விவரங்கள் இதோ.!

அதாவது 1100 ஜிபி அளவிலான டேட்டா.!

அதாவது 1100 ஜிபி அளவிலான டேட்டா.!

பிராட்பேண்ட் திட்டங்கள் மற்றும் வரம்பற்ற திட்டங்களின் மேல் மக்களுக்கு இருக்கும் ஆர்வத்தை மனதிற் கொண்டு, ரிலையன்ஸ் ஜியோ, அதன் பிராட்பேண்ட் சேவையின் இறுதிக்கட்ட சோதனையை நெருங்கியுள்ளது. வெளியான தகவலின்படி, ஜியோபைபர் (JioFiber) என்று அழைக்கப்படும் இந்த பிராட்பேண்ட் சேவையானது மொத்தம் 1.1டிபி அளவிலான டேட்டாவை வழங்கும், அதாவது 1100 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும்.

100 Mbps என்கிற வேகத்திலான அகலப்பட்டை இணைப்புகளை வழங்கும்.!

100 Mbps என்கிற வேகத்திலான அகலப்பட்டை இணைப்புகளை வழங்கும்.!

கூடுதல் சுவாரசியம் என்னவெனில் ஆரம்ப காலத்தில் இருந்தே கூறப்பட்டது போன்றே, ஜியோபைபர் திட்டமானது 100 Mbps என்கிற வேகத்திலான அகலப்பட்டை இணைப்புகளை வழங்கும். அதுசார்ந்த அதிகாரபூர்வமான அறிவிப்பை ஜியோ மிக விரைவில் அறிவிக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அது நிகழ்த்த மறுநொடியே சந்தையில் மிக தீவிரமான போட்டிகள் தலையெடுக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

இந்த திட்டம் சார்ந்த விளக்கம் ஒன்றும் வெளியாகியுள்ளது.!

இந்த திட்டம் சார்ந்த விளக்கம் ஒன்றும் வெளியாகியுள்ளது.!

ஆரம்பத்தில் வெளியான தகவாலானது, ஜியோபைபர் சேவையானது 100 Mbps வேகத்தின் கீழ் 100ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் என்று கூறியது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலோ எதிர்பார்த்ததை விட 10 மடங்கு அதிக டேட்டாவை வழங்கும் என்று கூறுகிறது. இந்த சிறிய குழப்பத்தை தீர்க்கும் வண்ணம், இந்த திட்டம் சார்ந்த விளக்கம் ஒன்றும் வெளியாகியுள்ளது.

ஒரு மாதத்திற்கு 25 முறை என்கிற விகிதத்தின் கீழ் 40ஜிபி அளவிலான டேட்டா.!

ஒரு மாதத்திற்கு 25 முறை என்கிற விகிதத்தின் கீழ் 40ஜிபி அளவிலான டேட்டா.!

அந்த விளக்கத்தின் படி ஜியோபைபர் திட்டமானது, பைபர்-டூ-தி-ஹோம் (FTTH) பிராட்பேண்ட் திட்டத்தின் கீழ் 100 Mbps அளவிலான வேகத்தின் கீழ், முதலில் 100ஜிபி அளவிலான டேட்டாவை மட்டுமே வழங்கும். பின்னர், ஒரு மாதத்திற்கு 25 முறை என்கிற விகிதத்தின் கீழ் கூடுதலாக 40ஜிபி அளவிலான டேட்டாவை அணுகுவதற்காக வாய்ப்பு வழங்கப்படுமாம். இந்த கணக்கின் கீழ், மொத்தம் 1.1 டிபி அளவிலான டேட்டா அணுக கிடைக்கும். சுருக்கமாக கூறினால், சேவைக்கான இணைப்பை செயல்படுத்தப்படும் போது, ஜியோவிடம் இருந்து 100 ஜிபி மட்டுமே கிடைக்கும்.

வட்டி-அல்லாத திரும்பப்பெறக்கூடிய பாதுகாப்பு வைப்பு

வட்டி-அல்லாத திரும்பப்பெறக்கூடிய பாதுகாப்பு வைப்பு

தொகையை செலுத்த வேண்டியது இருக்கும்.!
இதுவொரு இலவச சேவை அல்ல என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இன்னும் சொல்லப்போனால், மிக மலிவான விலைக்கு சேவைகள் என்கிற ரிலையன்ஸ் ஒரு வழக்கமான பாணியானது, ஜியோபைபர் சேவையில் இடம்பெறாது என்றே கூறலாம். ஆம், வெளியான தகவல் உண்மையெனில், ஜியோபைபர் இணைப்பு பெற, ரூ.4,500 என்கிற வட்டி-அல்லாத திரும்பப்பெறக்கூடிய பாதுகாப்பு வைப்பு தொகையை செலுத்த வேண்டியது இருக்கும். இந்த சேவையின் ஒரு பகுதியாக, ஜியோ ரவுட்டர் ஒன்றும் நிறுவப்படும், இந்த ரவுட்டர் ஒரு செட் டாப் பாக்ஸ் ஆகவும் பணியாற்றும் வாய்ப்புள்ளது.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)
'தன்னை' பின்பற்ற வைக்கும்.!

'தன்னை' பின்பற்ற வைக்கும்.!

கூடிய விரைவில் அறிமுகமாவுள்ள ஜியோ நிறுவனத்தின் பிராட்பேண்ட் சேவையான ஜியோபைபர் (JioFiber) ஆனது, அதன் 4ஜி சேவையை போலவே துவக்கத்திலேயே பார்தி ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் போன்ற பிராட்பேண்ட் சேவையை இடையூறு செய்யும், பின்னர் ஒட்டுமொத்த பிராட்பேண்ட் துறையையும் பின்பற்ற வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Reliance Jio to Step in the Fibre Broadband Market With 100 Mbps Connection and 1.1TB FUP. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X