ரிலையன்ஸ் 4ஜி : அதுக்கு என்ன ஜி.??

Written By:

இந்தியாவில் மற்ற நிறுவனங்கள் ஏற்கனவே 4ஜி சேவையை வழங்கி வரும் நிலையில் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் 4ஜி சேவையை துவங்கி விட்டது.

முழுமையான சேவை வழங்கப்படவில்லை என்றாலும் பொது மக்கள் பயன்படுத்தும் சோதனை சேவை மட்டும் துவங்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ரிலையன்ஸ்

1

தொலைதொடர்பு சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 4ஜி சேவைகள் பொது மக்கள் சேவைக்கு சோதனை அடிப்படையில் துவங்கப்பட்டுள்ளது.

அழைப்பு

2

இந்த சேவையை மக்கள் பயன்படுத்த ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியரின் அழைப்பு அவசியமாகும்.

லைஃப்

3

இதோடு ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகளில் விற்பனை செய்யப்பட்டும் LYF கைப்பேசியை வாங்க வேண்டும். இதன் விலை ரூ.5,599 துவங்கி ரூ.19,499 வரை கிடைக்கின்றது.

திட்டம்

4

இந்த திட்டத்தின் கீழ் ரிலையன்ஸ் குழுமத்தில் பணியாற்றும் எந்த ஊழியரும் ஜியோவின் 4ஜி சிம் மற்றும் LYF கைப்பேசியை வாங்க அதிகபட்சம் 10 பேரிடம் அழைப்பு விடுக்க முடியும்.

கனெக்ஷன்

5

இதற்கான இணைப்பில் எல்லையில்லா (அன்லிமிட்டெட்) 4ஜி மொபைல் இண்டர்நெட் மற்றும் போல் அழைப்பு சேவை சுமார் 90 நாட்களுக்கு வழங்கப்படும். இந்த சேவையை துவங்க ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும்.

செயலி

6

இந்த கட்டணமானது ஜியோவின் 4ஜி மொபைல் செயலிகளான ஜியோ ப்ளே, ஜியோ ஆன் டிமான்ட், ஜியோமேக், ஜியோபீட்ஸ், ஜியோ டிரைவ் போன்றவைகளுக்கு 90 நாட்களுக்கு பயன்படுத்த முடியும்.

சோதனை

7

4ஜி சோதனையை தற்சமயம் வரை சுமார் 5 லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர் என ரிலையன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிகம்

8

இந்த சேவை வரும் மாதங்களில் சோதனையில் இருந்து வணிக ரீதியாக விரிவுப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

9

ஏன்டா.. இதையெல்லாம் கூடவா 'விட்டு வைக்க' மாட்டீங்க..!!

'நெருப்புடா' : இந்திய புவியிடங்காட்டி சேவை.!!

முகநூல்

10

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Reliance Jio Starts 4G service for public Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்