Home
News

Cheap ஆன Price-ல Jio SIM கார்ட்டை ஆக்டிவ் ஆக வைத்திருக்க விருப்பமா? அம்பானி கொடுக்கும் 6 ஆப்ஷன்ஸ்!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது, ஃபீச்சர் ஃபோன் பயனர்கள், பட்ஜெட்டை கருத்தில் கொள்ளும் வாடிக்கையாளர்கள், அதிக டேட்டா பயன்படுத்துபவர்கள், கேமர்கள் மற்றும் ஓடிடி ஆர்வலர்கள் என கிட்டத்தட்ட அனைவருக்கும் ஏற்றவாறு, 28-நாள் செல்லுபடியாகும் பல்வேறு திட்டங்களுடன் ஒரு பன்முக ப்ரீபெய்ட் போர்ட்ஃபோலியோவை தொடர்ந்து வழங்கி வருகிறது.

அது 2026 ஜூன் மாதத்தில் தொடரவுள்ளது. ஜியோவிடம் இப்போது 28-நாள் சர்வீஸ் வேலிடிட்டி வழங்கும் 13 ரீசார்ஜ் திட்டங்கள் உள்ளன. இது ரூ.123 4ஜி ஃபீச்சர் ஃபோன் திட்டத்தில் தொடங்கி ரூ.545 ஜியோகேம்ஸ் திட்டம் வரை செல்கிறது. அவைகளில் ரூ.350 க்குள் என்கிற பட்ஜெட்டில் வரும் 6 திட்டங்களின் பட்டியல் இதோ:

Cheap ஆன Price-ல Jio SIM கார்ட்டை ஆக்டிவ் ஆக வைத்திருக்க விருப்பமா?

1. ஜியோ ப்ரீபெய்ட் ரூ.123 திட்டம்:
பேக் வகை: 4ஜி ஃபீச்சர் ஃபோன் பிளான்
முக்கிய நன்மைகள்: வரம்பற்ற வாய்ஸ் கால்கள், 300 எஸ்எம்எஸ் (மொத்தம்), ஒரு நாளைக்கு 0.5ஜிபி டேட்டா (மொத்தம் 14ஜிபி).
செல்லுபடி காலம்: 28 நாட்கள்
சந்தாக்கள் மற்றும் பலன்கள்: ஜியோசாவன் மற்றும் ஜியோடிவி சந்தா.
ஒரு நாளுக்கான பயனுள்ள விலை: ரூ.4.39

2. ஜியோ ப்ரீபெய்ட் ரூ.189 திட்டம்
பேக் வகை: வேல்யூ பிளான்
முக்கிய பலன்கள்: வரம்பற்ற வாய்ஸ் கால்கள், 300 எஸ்எம்எஸ் (மொத்தம்), 2ஜிபி மொத்த டேட்டா.
செல்லுபடி காலம்: 28 நாட்கள்
சந்தாக்கள் மற்றும் பலன்கள்: ஜியோடிவி மற்றும் ஜியோஏஐக்ளவுட் சந்தா.
ஒரு நாளுக்கான பயனுள்ள விலை: ரூ.6.75

3. ஜியோ ப்ரீபெய்ட் ரூ.196 திட்டம்
பேக் வகை: ஐசிஆர் பிளான் (இன்டர்-சர்க்கிள் ரோமிங்/நேஷனல் ரோமிங்)
முக்கிய நன்மைகள்: 2 ஜிபி ஐசிஆர் டேட்டா, 1000 நிமிடங்கள் ஐசிஆர் வாய்ஸ், 1000 ஐசிஆர் எஸ்எம்எஸ்
செல்லுபடி காலம்: 28 நாட்கள்
பின் குறிப்பு: பிஎஸ்என்எல்நெட்வொர்க்கில் இணைந்த பிறகு ஐசிஆர் ரீசார்ஜ் செயல்படும். இந்த திட்டம் தற்போது ஜியோ மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது
ஒரு நாளுக்கான பயனுள்ள விலை: ரூ.7.00

4. ஜியோ ப்ரீபெய்ட் ரூ.299 திட்டம்
பேக் வகை: பாப்புலர் பிளான்
முக்கிய நன்மைகள்: வரம்பற்ற வாய்ஸ் கால்கள் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா (மொத்தம் 42 ஜிபி)
செல்லுபடி காலம்: 28 நாட்கள்
ஒரு நாளுக்கான நடைமுறை விலை: ரூ.10.68

சந்தாக்கள் மற்றும் நன்மைகள்: ஜியோ டிவி மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் சந்தா. ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினியின் 18 மாத ப்ரோ பிளான், 5000 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ், நானோ பனானா மற்றும் பல நன்மைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. கூகுள் ஜெமினி சலுகையின் பலன்களை தொடர்ந்து பயன்படுத்த, பயனர் சலுகை காலம் முழுவதும் ரூ.299 அல்லது அதற்கு மேற்பட்ட விலையுள்ள 1.5ஜிபி/நாள் திட்டத்தில் தொடர்ந்து ஆக்டிவ் ஆக இருக்க வேண்டும்.

5. ஜியோ ப்ரீபெய்ட் ரூ.329 திட்டம்
பேக் வகை: ஜியோசாவன் ப்ரோ பிளான்
முக்கிய நன்மைகள்: வரம்பற்ற வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா (மொத்தம் 42 ஜிபி)
செல்லுபடி காலம்: 28 நாட்கள்
பயனுள்ள தினசரி விலை: ரூ 11.75

சந்தாக்கள் மற்றும் நன்மைகள்: ஜியோ டிவி மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் சந்தா. ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினியின் 18 மாத ப்ரோ பிளான், 5000 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ், நானோ பனானா மற்றும் பல நன்மைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. கூகுள் ஜெமினி சலுகையின் பலன்களை தொடர்ந்து பயன்படுத்த, பயனர் சலுகை காலம் முழுவதும் ரூ.299 அல்லது அதற்கு மேற்பட்ட விலையுள்ள 1.5ஜிபி/நாள் திட்டத்தில் தொடர்ந்து ஆக்டிவ் ஆக இருக்க வேண்டும்.

6. ஜியோ ப்ரீபெய்ட் ரூ.349 திட்டம்
பேக் வகை: பாப்புலர் பிளான், ட்ரூ 5ஜி அன்லிமிடெட் பிளான், என்ட்ரி-லெவல் அன்லிமிடெட் 5ஜி பிளான்
முக்கிய நன்மைகள்: வரம்பற்ற வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா (மொத்தம் 56ஜிபி) + தகுதியான சந்தாதாரர்களுக்கு வரம்பற்ற 5ஜி டேட்டா.
செல்லுபடி காலம்: 28 நாட்கள்
பயனுள்ள தினசரி விலை: ரூ 12.46

சந்தாக்கள் மற்றும் நன்மைகள்: ஜியோ டிவி மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் சந்தா. ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினியின் 18 மாத ப்ரோ பிளான், 5000 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ், நானோ பனானா மற்றும் பல நன்மைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. கூகுள் ஜெமினி சலுகையின் பலன்களை தொடர்ந்து பயன்படுத்த, பயனர் சலுகை காலம் முழுவதும் ரூ.349 அல்லது அதற்கு மேற்பட்ட விலையுள்ள 1.5ஜிபி/நாள் திட்டத்தில் தொடர்ந்து ஆக்டிவ் ஆக இருக்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
Reliance Jio SIM Card Users 6 Recharge Options Under Rs 350 With 28 Days Validity in June 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X