சைலன்ட்-ஆ தூக்கிட்டாங்க.. இனிமேல் இந்த நன்மை.. உங்களோட ஜியோ ரீசார்ஜில் கிடைக்காது.. என்னது அது?
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) அதன் அனைத்து ப்ரீபெய்ட் (Prepaid) திட்டங்கள் மற்றும் போஸ்ட்பெய்ட் (Postpaid) திட்டங்களிலும் அணுக கிடைத்த நன்மை ஒன்றை சத்தமில்லாமல் நீக்கியுள்ளது. அதென்ன நன்மை? அது ஏன் நீக்கப்பட்டது? என்கிற விவரங்கள் இதோ:
ஜியோ திட்டங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது ஜியோ செக்யூரிட்டி (Jio Security) பலன்களே ஆகும். இது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெயிட் திட்டங்களில் இருந்து மட்டுமல்ல, ஜியோசெக்யூரிட்டி ஆப் ஆனது கூகுள் பிளே ஸ்டோரில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது. (தற்போதைக்கு) இது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது; இருப்பினும் கூடிய விரைவில் அங்கிருந்தும் அகற்றப்படும்.

ஜியோ செக்யூரிட்டி நன்மை ஏன் நீக்கப்பட்டது? ஜியோ செக்யூரிட்டி ஆனது எதிர்பார்த்த அளவிற்கு, நுகர்வோர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகவில்லை என்பதே உண்மை. இருப்பினும் இது பெரும்பாலான ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் கூடுதல் நன்மையாக வழங்கப்பட்டது; தற்போது திடீரெனெ காணாமல் அடிக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் நீக்கமானது, ஜியோ செக்யூரிட்டியை விட சிறந்த ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கான, ஜியோ நிறுவனத்தின் ஒரு மூலோபாய நடவடிக்கையாக கூட இருக்கலாம். ஆனால் அதுகுறித்து எந்த தகவலும் இல்லை என்பதால், ஜியோவிடம் இருந்து புதிய பாதுகாப்பு சேவையொன்று அறிமுகமாகும் என்று அதிகம் எதிர்பார்க்காமல் இருப்பதே நமக்கெல்லாம் நல்லது.
ஜியோ செக்யூரிட்டியால் ஒரு ஜியோ யூசருக்கு என்ன பயன்? நீங்கள் பாதுகாப்பற்ற வைஃபை நெட்வொர்க்குடன் கனெக்ட் ஆகும் போதெல்லாம், ஜியோ செக்யூரிட்டி ஆப் ஆனது அதைப்பற்றி உங்களுக்கு தெரிவிக்கும். மேலும் நீங்கள் கனெக்ட் ஆகியுள்ள நெட்வொர்க்கில் ஏதேனும் சைபர் தாக்குதல்களுக்கான ஆபத்து உள்ளானதா இல்லையா என்பதையும் தெரிவிக்கும்.
ஒட்டுமொத்தமாக இது உங்களுடைய எல்லா தரவுகளையும் பாதுகாப்பாக வைத்திருக்க அனுமதிக்கும். தற்போது இந்த நன்மை நீக்கப்பட்டுள்ளதால், இனிமேல் மேற்கண்ட பாதுகாப்பு நன்மைகள் எதுவுமே உங்களுக்கு கிடைக்காது. எனவே அனைத்து ஜியோ பயனர்களும் (ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெயிட்) சற்றே கவனமாக இருக்கும்படி பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
ரிலையன்ஸ் ஜியோவின் இணையதளத்தில் இருந்தும் ஜியோ செக்யூரிட்டியின் வலைப்பக்கம் (Jio Security Website) நீக்கப்பட்டுள்ளது. இது ஜியோ சந்தாதாரர்கள் மத்தியில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும். இது பெரிதாக கண்டுகொள்ளப்படாமல் போவதற்கும் அதிக வாய்ப்புள்ளது.
ஒருவேளை ஜியோ பயனர்கள் இதை ஒரு முக்கியமான "இழப்பாக" கருதினால், ஜியோ செக்யூரிட்டி ஆப் ஆனது கூகுள் பிளே ஸ்டோர், ப்ரீபெய்ட் திட்டங்கள், போஸ்ட்பெய்ட் திட்டங்கள் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவின் இணையதளத்தில் மீண்டும் வருமா இல்லையா என்பதையும் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








