Home
News

அசத்திட்டீங்க அம்பானி.. மோடி போட்டு பார்த்த Jio Glass-ன் விலை என்ன? அதில் என்ன ஸ்பெஷல்?

ஒருவழியாக.. இந்திய மொபைல் காங்கிரஸ் 2023 நிகழ்வில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது மிக்ஸ்டு ரியாலிட்டி கிளாஸ் ஆன ஜியோ கிளாஸை (Jio Glass) காட்சிப்படுத்தியது. நினைவூட்டும் வண்ணம் இது கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த ரோலிங் 43வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது

கடந்த ஆண்டு நடந்த எம்டபுள்யூசி 2022 நிகழ்வில் கலந்து கொண்ட இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, இந்த ஜியோ கிளாஸை பயன்படுத்தி, 5ஜி சேவையின் தேவைகளை பற்றி அறிந்து கொண்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்தே ஐஎம்சி 2023 நிகழ்வில் ஜியோ கிளாஸ் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மோடி போட்டு பார்த்த Jio Glass-ன் விலை என்ன? அதில் என்ன ஸ்பெஷல்?

இந்நேரத்திற்கு.. உண்மையில் இந்த ஜியோ கிளாஸ் என்றால் என்ன? இதன் கிளாஸின் பயன்கள் என்ன? இது என்னென்ன அம்சங்களை வழங்குகிறது? இதன் விலை நிர்ணயம் என்ன? இது எப்போது முதல் விற்பனைக்கு வரும்? எங்கே வாங்குவது? போன்ற கேள்விகள்.. உங்களுக்குள் எழுந்திருக்கும். அதற்கான பதில்கள் இதோ:

ஜியோ கிளாஸ் என்றால் என்ன? ஜியோ கிளாஸ் என்பது ஒரு மிக்ஸ்டு ரியாலிட்டி (Mixed Reality - MR) கிளாஸ் ஆகும். அதாவது இது ஆக்மென்ட் ரியாலிட்டி (Augmented Reality - AR) ) மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி (Virtual Reality - VR) ஆகியவற்றின் கலவையாகும்.

எம்ஆர் என்பது ஒரு யூசர் என்விராய்ன்மென்ட் (User environment) ஆகும், இதில் பிஸிக்கல் ரியாலிட்டி (Physical reality) மற்றும் டிஜிட்டல் கன்டென்ட் (Digital content ) ஆகியவைகள் ரியல்-வோர்ல்ட் மற்றும் விரச்சுவல் பொருள்களுடன் (Real-world and Virtual objects) தொடர்பு கொள்ள உதவும் வகையில் இணைக்கப்படுகின்றன.

ஒரு பயனரை முற்றிலும் டிஜிட்டல் சூழலில் மூழ்கடிக்கும் விர்ச்சுவல் ரியாலிட்டி அல்லது பிஸிக்கல் சூழலின் மேல் டிஜிட்டல் கன்டென்ட்டை அடுக்கி வைக்கும் ஆக்மென்ட்டட் ரியாலிட்டி (ஏஆர்) போலல்லாமல், மிக்ஸ்டு ரியாலிட்டி ஆனது யதார்த்தமான டிஜிட்டல் மற்றும் நிஜ உலக அமைப்புகளில் இரண்டற கலக்கும் அனுபவத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது.

எந்த யூகங்களும் இல்லாமல், ஜியோ கிளாஸ் அந்த முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு எம்ஆர் கிளாஸ் ஆகும். இது எக்ஸ்ஆர் எக்ஸ்பீரியன்ஸ் மற்றும் ஹார்ட்வேர்களை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்ற டெசெராக்ட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. டெசராக்ட் நிறுவனமானது முதலில் எம்ஐடியின் மீடியா ஆய்வகத்திற்கு சொந்தமானதாக இருந்தது, பின்னர் கடந்த 2019ல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸால் கையகப்படுத்தப்பட்டது.

மோடி போட்டு பார்த்த Jio Glass-ன் விலை என்ன? அதில் என்ன ஸ்பெஷல்?

ஜியோ கிளாஸின் முக்கிய அம்சங்கள்: சுமார் 75 கிராம் எடையுள்ள ஜியோ கிளாஸில் இரண்டு லென்ஸ்கள் கொண்ட மெட்டல் ஃப்ரேம் உள்ளது. யூ.எஸ்.பி-சி கேபிள் வழியாக பயனர்கள் ஜியோ கிளாஸை தங்கள் ஸ்மார்ட்போன்களுடன் இணைக்க முடியும், இதே கேபிள் ஜியோ கிளாஸின் பவர் சோர்ஸ் ஆக இருக்கும் என்றும், இது வயர்லெஸ் ஆதரவை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோ கிளாஸ் ஆனது கனெக்ட் செய்யப்படும் ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவை 100 இன்ச் ஆக விரிவுபடுத்துகிறது. அதாவது இதுவொரு விர்ச்சுவல் டிஸ்பிளேவை உருவாக்குகிறது. ஒவ்வொரு கண்ணுக்கும் 1080பி டிஸ்பிளே அணுக கிடைக்கும். மேலும் ஜியோ கிளாஸின் பக்கங்களில் இரண்டு ஸ்பீக்கர்களும் உள்ளன. இது ஸ்பேஷியல் ஆடியோவிற்கான பில்ட்-இன் ஆதரவுடன் வரும் என்றும் கூறப்படுகிறது.

ஜியோ கிளாஸ் விலை மற்றும் விற்பனை: இந்தியாவில் ஜியோ கிளாஸின் விலை குறித்து பல ஊகங்கள் உள்ளன. இருப்பினும் இந்த டிவைஸின் சரியான விலை குறித்து ஜியோ நிறுவனம் இதுவரை எந்த தகவலையும் பகிரவில்லை. ஜியோ கிளாஸ் இன்னும் செயல்பாட்டில் உள்ள தயாரிப்பாக தெரிகிறது. ஆகையால் இதன் வெளியீடு மற்றும் விற்பனை குறித்தும் எந்த தகவல்களும் இல்லை.

ஜியோ கிளாஸ் ஆரம்ப அணுகல் திட்டம்: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது ஜியோ கிளாஸின் இரண்டு பதிப்புகளை அறிமுகப்படுத்தும் என்று கூறப்படுகிறது. இது பொதுவான நுகர்வோர்கள் மற்றும் பிற நிறுவனங்களை இலக்காக கொண்டு அறிமுகமாகும். டெஸராக்ட் நிறுவனம் அதன் இணையதளத்தில் ஜியோகிளாஸ் எண்டர்பிரைசிற்கான ஆரம்ப அணுகல் திட்டத்தை இயக்குகிறது.

"முன்கூட்டிய அணுகலின் வழியாக சமூகத்தின் ஒரு பகுதியாக இருங்கள் மற்றும் ஜியோகிளாஸ் எண்டர்பிரைஸின் ஒப்பிடமுடியாத ஆற்றலுடன் உங்கள் பணியிடத்தை மறுவரையறை செய்யுங்கள்" என்று டெசெராக்டின் இணையதளம் கூறுகிறது. இந்த ஜியோ கிளாஸை வாங்க ஆர்வமுள்ளவர்கள் அவர்களின் பெயர், அலுவலக மின்னஞ்சல், நிறுவனத்தின் பெயர், நிறுவனத்தின் வகை மற்றும் பல விவரங்களை உள்ளீட்டு முன்கூட்டிய அணுகல் திட்டத்தில் சேரலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Reliance Jio Showcased Its Mixed Reality Glasses Jio Glass in IMC 2023 All You Need to Know
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X