நக்கல்யா உனக்கு.. Airtel கஸ்டமர்களுக்கு லவ்வர்ஸ் டே மெசேஜ் அனுப்பிய Jio.. கூட அந்த நம்பரையும் அனுப்பி இருக்கு!
கடந்த சில வருட பாரம்பரியத்தை தொடரும் வண்ணம், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஏர்டெல் நிறுவனத்திற்கு காதலர் தின மெசேஜை அனுப்பியுள்ளது. ஆனால் இம்முறை ஜியோ நிறுவனத்தின் காதலர் தின மெசேஜானது ஏர்டெல் நிறுவனத்திற்கானது அல்ல ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கானது!
2024 ஆம் ஆண்டுக்கான காதலர் தின வாழ்த்தில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது ஏர்டெல்லின் பிராட்பேண்ட் சேவையான எக்ஸ்ஸ்ட்ரீம் சேவையின் பயனர்களை டேக் செய்துள்ளது. முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட எக்ஸ் தளம் வழியாக, ஏர்டெல் பயனர்கள் தங்கள் உறவுகளில் "சிகப்பு" கொடிகளை புறக்கணிக்க வேண்டாம் என்று ஜியோ ட்வீட் செய்துள்ளது.

மேலும் ஏர்டெல்லின் எக்ஸ்ஸ்ட்ரீம் சேவையின் கீழ் உள்ள பயனர்கள், ரிலையன்ஸ் ஜியோவின் சேவைக்கு செல்லுமாறு அழைப்பு விடுத்துள்ளது."அன்புள்ள @airtelindia பயனர்களே, இந்த காதலர் தினத்தில் உங்கள் உறவில் உள்ள 'சிகப்பு' கொடிகளை புறக்கணிக்காதீர்கள். உங்கள் 'எக்ஸ்' ஸ்ட்ரீமில் இருந்து செல்ல வேண்டிய நேரம் இது. இதோ எங்களுடைய எண் 60008-60008. ஒருவேளை என்னை அழைக்கவும். #காதலர் தின வாழ்த்துக்கள் #அன்புடன்ஜியோ" என்று ரிலையன்ஸ் ஜியோ பதிவிட்டுள்ளது.
ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் என்பது ஃபைபர் கனெக்ஷன், ஏர்ஃபைபர் கனெக்ஷன் மற்றும் ஓடிடி சேனல்களை உள்ளடக்கிய ஏர்டெல்லின் பிராட்பேண்ட் சேவையாகும். ஏர்டெல் நிறுவனத்தின் இந்த சேவையில் ஏதேனும் சிக்கல்களை (அதாவது சிகப்பு கொடிகளை சந்தித்தால்) அவர்கள் எங்கள் சேவைக்கு வரலாம் என்று ளை ரிலையன்ஸ் ஜியோ நேரடியாக அழைப்பு விடுத்துள்ளது.

முகேஷ் அம்பானி தலைமனையிலான ரிலையன்ஸ் ஜியோ இப்படி செய்வது இது ஒன்றும் முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒரு கவிதை மூலம் பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய 2 நிறுவனங்களையும் வம்பிற்கு இழுத்தது.
ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியவை குறிவைத்து, "ரோஜாக்கள் சிவப்பாக இருக்கும், வயலட் நீலமாக இருக்கும், ஒருமுறை சிம் ஸ்லாட் 2-வில் பக்கத்து வீட்டுக்காரராக இருந்த நீங்கள், இப்போது எங்கே இருக்கிறீர்கள்?" என்று ரிலையன்ஸ் ஜியோ பதிவிட்டு இருந்தது. இந்த ஆண்டு, ஒரு பெரிய வித்தியாசம் என்னவென்றால், ரிலையன்ஸ் ஜியோவானது வோடபோன் ஐடியா நிறுவனத்தை குறிவைக்கவில்லை!

உண்மையில் ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரீபெயிட் சேவை பக்காவாக உள்ளது. அதனால் தான் ஜியோ நிறுவனம் அதன் பிராட்பேண்ட் சேவையை கேலி செய்துள்ளது. சமீபத்தில் தான் ஏர்டெல் நிறுவனம் அதன் ரூ.49 டேட்டா பேக் (Data Pack) திட்டத்தின் நன்மைகளை திருத்தயது. தற்போது இந்த திட்டம் முன்பை விட 3 மடங்கு அதிக டேட்டாவை வழங்குகிறது. முன்னதாகஇது 1 நாள் வேலிடிட்டியின் கீழ் 6ஜிபி அளவிலான ஹை-ஸ்பீட் டேட்டாவை வழங்கியது.
திருத்தத்திற்கு பின்னர், ஏர்டெல் ரூ.49 டேட்டா பேக்கின் கீழ் 20ஜிபி அளவிலான எஃப்யுபி (FUP - Fair Usage Policy) டேட்டா கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட டேட்டா லிமிட் தீர்ந்த பிறகு, இந்த திட்டத்தின் கீழ் 64கேபிபிஎஸ் என்கிற அளவிலான இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் டேட்டா கிடைக்கும். அதாவது இதுவொரு அன்லிமிடெட் டேட்டா பிளான் ஆகும்.
ரூ.49 டேட்டா பேக் மீது நிகழ்த்தப்பட்டுள்ள இந்த திருத்தத்துடன், ஏர்டெல் இப்போது 2 அன்லிமிடெட் டேட்டா பேக்குகளை தன்வசம் கொண்டுள்ளது: முதலாவதாக - 2 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வரும் ரூ.99 டேட்டா பேக்; இரண்டாவதாக 1 நாள் என்கிற வேலிடிட்டி உடன் வரும் ரூ.49 டேட்டா பேக்!
போட்டியாளரான ஜியோ நிறுவனத்திடம் 7 வகையான டேட்டா பூஸ்டர்கள் உள்ளன: ரூ.15 (1ஜிபி), ரூ.19 (1.5ஜிபி), ரூ.25 (2ஜிபி), ரூ.29 (2.5ஜிபி), ரூ.61 (6ஜிபி), ரூ.121 (12ஜிபி) மற்றும் ரூ.222 (50ஜிபி) பிளான்கள். அனைத்து 7 திட்டங்களுமே வெவ்வேறு டேட்டா நன்மைகளை வழங்குகின்றன; ஆனால் வேலிடிட்டியை பொறுத்தவரை உங்களுடைய ஆக்டிவ் பிளானுடன் ஒற்றுப்போகும்.


Click it and Unblock the Notifications








