மலிவு விலையில் களமிறங்கும் ரிலையன்ஸ் ஜியோவின் 5 ஜி சேவை.!

குறைந்த காலத்தில் நாட்டில் முன்னணி நெட்வொர்க் என்று பெயர் எடுத்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். மேலும் அதிகப்படியான வாடிக்கையாளர்களையும் தன் பக்கம் ஈர்த்துள்ளது. 4 ஜி சேவையில் வாடிக்கையாளர்களுக்கு

|

குறைந்த காலத்தில் நாட்டில் முன்னணி நெட்வொர்க் என்று பெயர் எடுத்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். மேலும் அதிகப்படியான வாடிக்கையாளர்களையும் தன் பக்கம் ஈர்த்துள்ளது.

4 ஜி சேவையில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அதிரடியாக சலுகைகளை வழங்கி வருகின்றது ஜியோ நிறுவனம். இந்நிலையில் ஜியோ பொது மக்களிடம் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, ஜியோ ஜிகா பைபர் சேவையும் துவங்கியுள்ளது.

மலிவு விலையில் களமிறங்கும் ரிலையன்ஸ் ஜியோவின்  5 ஜி சேவை.!

இந்நிலையில், இந்தியாவில் முதன் முதலில் 5 ஜி சேவையையும் 2019-20ம் ஆண்டிற்கு அமல்படுத்தும் நோக்கில் ஜியோ நிறுவனம் களத்தில் குதித்துள்ளது. மேலும் அதுவும் மலிவான விலையில் என்பது தனிச்சிறப்பாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜியோ நிறுவனம்:

ஜியோ நிறுவனம்:

ஜியோ நிறுவனம் துவங்கி 2 ஆண்டுகள் ஆகிறது. ஏராளமான வாடிக்கையாளர்களை இந்நிறுவனம் தன் பக்கம் ஈர்த்துள்ளது. மேலும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றது. இந்தியாவில் நெ.1 நெட்வொர்க் ஆகும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது ஜியோ நிறுவனம்.

 4 ஜியில் கலக்கல் :

4 ஜியில் கலக்கல் :

ஜியோ நிறுவனம் தற்போது வரை மலிவு விலையில் அளவில்லா லோக்கல், எஸ்டிடி கால்களும், இலவச மிஸ்டுகால் அலர்ட், காலர் டியூன், ரோமிங் ப்ரீ, தினமும் 100 எஸ்எம்எஸ், 2 ஜிபி டேட்டா உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றது. அவ்வபோது ஏராளமான சலுகைகளையும் இந்நிறுவனம் அறிவித்து பொது மக்களை கவர்ந்து வருகின்றது.
பொது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதால் ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து, ஜியோ ஜிகா பைபர் நிறுவனத்தையும் துவங்கியுள்ளது.

 மலிவு விலையில் 5 சேவை:

மலிவு விலையில் 5 சேவை:

இந்நிலையில், ஜியோ நிறுவனம் மலிவு விலையில் 5ஜி சேவை துவங்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் 40 கோடி பேர் பீச்சர் போன்கள் பயன்படுத்துவதால் 5 ஜி சேவையும் மலிவு விலையில் வழங்க முடியும் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சேவையின் கட்டணம் அதிகரிப்படாது என்று ஜியோ நிறுவன தலைவர் மேத்யூ உம்மன் தெரிவித்தார். டெலிகாம் நிறுவனங்கள் புதுமையை புகுத்தவில்லை எனில், கடுமையான சூழலை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும்.

2019ம்-20ம் ஆண்டில் சேவை:

2019ம்-20ம் ஆண்டில் சேவை:

5ஜி பயன்பாடு குறித்து பேசும் போது, 2019-20ம் ஆண்டுகளில் 5ஜி சூழல் தயார் நிலையில் இருக்கும், எனினும் 5ஜி தொழில்நுட்பம் கொண்ட விலை குறைந்த சாதனங்களின் பயன்பாடு இந்தியாவில் 2021ம் ஆண்டு வாக்கில் அதிகரிக்கும் என அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் 5ஜி புதிய தொழில்நுட்பம் என்ற வகையில் டெலிகாம் சந்தை மட்டுமின்றி ஒவ்வொரு துறையையும் மாற்றியமைக்கும் என ஜியோ தலைவர் மேத்தியூ உம்மன் தெரிவித்தார்.

ஸ்வீடன் நாட்டு டெலிகாம் உபகரணங்கள்:

ஸ்வீடன் நாட்டு டெலிகாம் உபகரணங்கள்:

இந்த வகையில் ஜியோ நிறுவனம் ஸ்வீடன் நாட்டு டெலிகாம் உபகரணங்களை உற்பத்தி செய்யும் எரிக்சன் நிறுவனத்தின் 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஓட்டுனர் இன்றி இயங்கும் காரினை சோதனை செய்தது.

குறைந்த கட்டணம்:

குறைந்த கட்டணம்:

4ஜி தொழில்நுட்பத்துடன் ஒப்பிடும் போது 5ஜி தொழில்நுட்பத்திற்கான கட்டணம் குறைவாகவே இருக்கும் என எரிக்சன் நிறுவனத்தின் இந்தியா, தென்கிழக்கு ஆசியா, ஒசியானா மற்றும் நுன்சினோ மிர்டிலோ பகுதிகளுக்கான தலைவர் தெரிவித்தார்.

Best Mobiles in India

English summary
Reliance Jio says affordable 5G devices in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X