150 மில்லியனுக்கு குறி வைக்கும் ஜியோ பீச்சர் போன்

|

சமீபத்தில் வெளியாகியுள்ள CLSA அறிக்கையின் படி, ரிலையன்ஸ் ஜியோ 4ஜி பீச்சர் போன்கள் 150 மில்லியன் வாடிக்கையாளர்களை குறிவைக்கும் என தெரிவித்துள்ளது. இது 15-17 சதவிகிதம் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இதனால் புதிய பீச்சர்போனின் விலையை ரூ.500 - 1000 வரை நிர்ணயம் செய்யும் என்றும் கூறப்படுகிறது.

150 மில்லியனுக்கு குறி வைக்கும் ஜியோ பீச்சர் போன்

இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 4ஜி பீச்சர்போன் ஜியோ சிம் கார்டு வசதியை மட்டும் கொண்டிருந்தாலும் வோல்ட்இ மற்றும் இதர செயலிகளை இயக்கும் வசதியை கொண்டிருக்கும். தற்சமயம் விற்பனை செய்யப்படும் பீச்சர்போன்களை விட அதிநவீன தொழில்நுட்பம் கொண்டிருப்பந்தாலும், இதன் விலை ரூ.500 - 1000 வரை நிர்ணயம் செய்யப்படலாம்.

இந்தியாவில் இன்னமும் ஸ்மார்ட்போன்களை விட பீச்சர்போனின் விற்பனை அதிகம் நடைபெறுகிறது. 2017 நிதியாண்டில் மொத்தம் 136 மில்லியன் பீச்சர்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன, ஆனால் இதே காலகட்டத்தில் 113 மில்லியன் ஸ்மார்ட்போன்களே விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கூடுதலாக 100 மில்லியன் வாடிக்கையாளர்கள் ஜியோவின் சந்தை பங்குகள் 19-20 சதவிகிதமாக இருக்கிறது, இது ஐடியா செல்லுலார் நிறுவனத்தை விட அதிகம் ஆகும். நாட்டின் மூன்றாவது பெரிய நிறுவனமாக ஐடியா செல்லுலார் இருக்கிறது.

இந்திய டெலிகாம் சந்தையின் வருவாய் 7 சதவிகிதம் வரை குறையும் என CLSA அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்ற நிலை 2019 நிதியாண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
According to a new report by brokerage firm CLSA, Reliance Jio's upcoming 4G feature phone will target 150 million users.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X