தீபாவளிக்கு முன்பு Jio வைத்த டுவிஸ்ட்: ஸ்ரீநாத்ஜி கோவிலில் ஆகாஷ் அம்பானி அறிவிப்பு!

|

ரிலையன்ஸ் ஜியோ 5ஜி உள்கட்டமைப்புக்காக ரூ.2 லட்சம் கோடி வரை முதலீடு செய்திருக்கிறது. இந்த ஆண்டு டெல்லி, மும்மை, கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த ஜியோ இலக்கு வைத்திருக்கிறது. தீபாவளி பண்டிகையையொட்டி எதிர்பார்த்த அறிவிப்பை ஜியோ தலைவர் ஆகாஷ் அம்பானி ராஜஸ்தானில் ராஜ்சமந்தில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் வைத்து அறிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவை

ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவை

இந்தநிலையில் ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக சனிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.ரிலையன்ஸ் ஜியோ தீபாவளி பண்டிகையையொட்டி 5ஜி சேவை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி தற்போது ஜியோ தலைவர் ஆகாஷ் அம்பானி ராஜஸ்தானில் ராஜ்சமந்தில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் இருந்து சேவைகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து இந்த ஆண்டு டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்ய ஜியோ நிறுவனம் இலக்கு வைத்திருக்கிறது.

2023க்குள் நாடு முழுவதும் 5ஜி

2023க்குள் நாடு முழுவதும் 5ஜி

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, தனது 5ஜி சேவையை டிசம்பர் 2023க்குள் நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு பகுதிகளிலும் விரிவுப்படுத்த திட்டமிட்டிருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி சேவை தான் இந்த நகரங்களிலும் கிடைக்கிறதே என்று தோன்றலாம். ஆனால் அது சோதனை கட்டம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

1 ஜிபிபிஎஸ்-க்கும் அதிகமான பதிவிறக்க வேகம்

1 ஜிபிபிஎஸ்-க்கும் அதிகமான பதிவிறக்க வேகம்

ரிலையன்ஸ் ஜியோ மும்பை, கொல்கத்தா மற்றும் வாரணாசி ஆகிய மூன்று நகரங்களின் தலைநகரில் 5ஜி சேவைகளுக்கான பீட்டா சோதனையை தொடங்கி இருக்கிறது. அந்த பகுதியில் உள்ள பயனர்கள் 1 ஜிபிபிஎஸ்-க்கும் அதிகமான பதிவிறக்க வேகத்தை பெறுகின்றனர்.

இதையடுத்து நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் சோதனை இல்லாமல் முழுமையான 5ஜி சேவை வழங்க திட்டமிட்டிருக்கிறது. முழு நகரத்தில் உள்ள மக்களும் படிப்படியாக 5ஜி சிக்னலைப் பெறத் தொடங்குவார்கள். 2023க்குள் நாடு முழுவதும் 5ஜி சேவைக் கிடைக்கும் என ஜியோ உறுதியளித்திருக்கிறது.

புது சிம்கார்ட் தேவையில்லை

புது சிம்கார்ட் தேவையில்லை

ஜியோ 5ஜி சேவை பெறுவதற்கு புது சிம்கார்ட் எல்லாம் தேவையில்லை. தற்போது பயன்படுத்தும் 4ஜி சிம்கார்ட்டின் மூலமாகவே 5ஜி சேவையை பெறலாம். ஆனால் 5ஜி போன் என்பது மிக கட்டாயம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

உங்கள் போனில் ஜியோ 5ஜி இணைப்பு கிடைக்கும் என்று உறுதி செய்யப்பட்டிருந்தால், ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபருடனான ரீசார்ஜ் திட்டத்துக்கு நீங்கள் மேம்பட வேண்டும். எந்தெந்த திட்டத்தில் ஜியோ 5ஜி சேவை கிடைக்கும் என்று பார்க்கலாம்.

ஜியோ ரூ.399 திட்டம்

ஜியோ ரூ.399 திட்டம்

5ஜி நெட்வொர்க் உடன் 1 Gbpsக்கு அதிகமான டேட்டா உடன் இந்த திட்டம் கிடைக்கிறது. இதில் தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்புகள் உள்ளிட்ட நன்மைகளும் கிடைக்கிறது. Netflix, Amazon Prime மற்றும் Disney+ Hotstar உள்ளிட்ட ஓடிடி சந்தா அணுகலும் இலவசமாக கிடைக்கிறது. வீடியோவை 5ஜி வேகத்தில் ஸ்ட்ரீம் செய்யலாம்.

ஜியோ ரூ.599 திட்டம்

ஜியோ ரூ.599 திட்டம்

இந்த போஸ்ட்பெய்ட் திட்டமானது நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகிய ஓடிடி சந்தா அணுகலை வழங்குகிறது. கூடுதலாக வரம்பற்ற குரல் அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் கூடுதல் ஜியோ சிம் ஆகிய நன்மைகளை வழங்குகிறது.

ஜியோ ரூ.799 திட்டம்

ஜியோ ரூ.799 திட்டம்

ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டத்தின் கீழ் ஜியோ வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் அமேசான் பிரைம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் நெட்பிளிக்ஸ் ஆகிய ஓடிடி அணுகல்கள் இலவசமாக அனுப்பப்படுகிறது.

ஜியோ ரூ.999 திட்டம்

ஜியோ ரூ.999 திட்டம்

போஸ்ட்பெய்ட் திட்டமானது குடும்ப ரீசார்ஜ் திட்டமாகும். இதன் கீழ் 3 ஜியோ சிம்கள், வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் என பல நன்மைகள் வழங்கப்படுகிறது. அதேபோல் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Reliance Jio's twist ahead of Diwali: jio Chairman Akash Ambani announcement at Srinathji Temple

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X