Home
News

அம்பானிக்கு பெரிய மனசு தான்.! கம்மி விலை திட்டத்தில் கூடுதல் டேட்டாவை வழங்கிய Jio.!

ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அசத்தலான திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது ஜியோ நிறுவனம். குறிப்பாக ஜியோ நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

அதேபோல் ஜியோ நிறுவனம் இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் 5ஜி சேவையை வழங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜியோ நிறுவனத்தின் கம்மி விலை திட்டத்தில் கூடுதல் டேட்டா சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது அந்த கம்மி விலை ஜியோ திட்டம் மற்றும் அதன் நன்மைகளைப் பார்ப்போம்.

கம்மி விலை திட்டத்தில் கூடுதல் டேட்டாவை வழங்கிய Jio.!

MySmartPrice அறிவித்த தகவலின்படி, ஜியோ நிறுவனத்தின் ரூ.61 திட்டம் தான தற்போது கூடுதல் டேட்டா நன்மையை வழங்கி உள்ளது. முதலில் இந்த திட்டம் ஒரு டேட்டா பேக் (Jio Data Pack) திட்டம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது இந்த ஜியோ ரூ.61 திட்டம் ஆனது முன்பு 6ஜிபி டேட்டா நன்மையை மட்டுமே வழங்கியது. ஆனால் தற்போது தற்போது இந்த திட்டத்தில் 10ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

எனவே ஜியோ பயனர்கள் ரூ.61 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் இப்போது 10ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ரீசார்ஜ் திட்டம் எந்த ஒரு வேலிடிட்டியுடன் வரவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இதற்கான அர்த்தம், இந்த திட்டம் உங்களுடைய பேசிக் ரீசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டியுடன் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜியோ வழங்கும் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.

கம்மி விலை திட்டத்தில் கூடுதல் டேட்டாவை வழங்கிய Jio.!

ஜியோ ரூ. 299 திட்டம் இந்த திட்டம்: உங்களுக்குத் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வெறும் 299 ரூபாய் விலையில் வழங்குகிறது ஜியோ. இந்த திட்டம் உங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் தினசரி 100 SMS நன்மைகளுடன் வருகிறது. இந்த ரீசார்ஜ் திட்டம் 28 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது. கூடுதல் இலவச நன்மைகளாக இத்துடன் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioClouds நன்மைகள் கிடைக்கிறது.

ஜியோ ரூ 349 ப்ரீபெய்ட் திட்டம் ஒவ்வொரு நாளும் 2.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதன் மொத்த டேட்டா பலன் 75 ஜிபி ஆகும். இந்தத் திட்டம் அணைத்து நெட்வொர்க்கிற்கான அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மைகளையும், தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்குகிறது. இது 30 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது. இத்துடன் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றிற்கான அணுகலும் கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.

ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் அணைத்து நெட்வொர்க்கிற்கான அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை வழங்குகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை கிடைக்கிறது. இத்திட்டம் தினமும் 2.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் 90 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. மொத்தமாக இந்த திட்டம் 225 ஜிபி டேட்டாவை தருகிறது. இத்துடன் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றிற்கான அணுகலும் கிடைக்கிறது.

கம்மி விலை திட்டத்தில் கூடுதல் டேட்டாவை வழங்கிய Jio.!

ஜியோ ரூ.2023 திட்டமானது 252 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டம் தினசரி 2.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மொத்தமாக இந்த திட்டமானது மொத்தம் 630ஜிபி டேட்டா வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக வரம்பற்ற குரலழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பாராட்டு சந்தா என அனைத்து நன்மைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Reliance Jio's Rs 61 Plan Now Offers Extra Data Benefit: Check Full Details Here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X