ஜியோவின் அடுத்த சர்ப்ரைஸ் : 2ஜி, 3ஜி, 4ஜி, லேப்டாப் பயனாளிகளுக்கு குஷி.!
முதல் திட்டமானது பொதுவான எல்லா டாங்கில் பயனர்களுக்கும் மற்றும் இரண்டாவது திட்டம் மடிக்கணினி, 2ஜி / 3ஜி தொலைபேசி, டேப்லெட் பயனர்களுக்கும் ஏற்றதாக இருக்கும்.
"அவ்ளோதான்ப்பா.. ஒருவழியாக ஜியோ புயல் அடித்து ஓய்ந்து விட்டது" என்று நினைக்க தொடங்கும் போதெல்லாம் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் எதாவதொரு ஒரு புத்தம் புதிய ஆக்கிரமிப்பு சலுகையை கொண்டு வருவது வழக்கமான ஒரு செயலாகிவிட்டது.
அப்படியாக ஜியோ நிறுவனம் முதன்முறையாக அதன் 4ஜி சேவை மற்றும் 4ஜி பயனர்களை மீறிய திட்டங்களை தொகுத்துள்ளது. இதன் கீழ் 4ஜி பயனர்கள் மட்டுமின்றி 2ஜி, 3ஜி, 4ஜி, லேப்டாப், டேப்லெட் பயனாளிகளுக்கும் சலுகைகள் கிடைக்கின்றன. அது என்னென்ன திட்டங்கள்.? அதன் நன்மைகள் என்னென்ன.?? என்பதை பற்றிய விவரங்கள் இதோ.!

கடும் போட்டி
100% கேஷ்பேக் சலுகைகளின்கீழ் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோஃபை 4ஜி ரவுட்டர் ஒன்று அறிமுகப்படுத்தபட்டுள்ளது. இதர இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மேலும் கடும் போட்டியை வழங்கும் நோக்கத்த்தில் முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ நிறுவனத்தின் சொந்தமான டாங்கிள்கள், டேட்டாகார்ட் மற்றும் வைஃபை ரவுட்டர்கள் பெருவாரியான மக்களிடம் சென்று அடையும் முயற்சியாக இது கருதப்படுகிறது.

100% கேஷ்பேக்
இந்த சலுகையில் கீழ் ஜியோ நிறுவனம் முதல் திட்டத்தின் கீழ் இரண்டு திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்குகிறது. இதன் கீழ் பயனர்கள் 100% பரிமாற்ற (கேஷ்பேக்) வாய்ப்பை பெறுவார்கள்.

எந்தவொரு ஜியோ டிஜிட்டல் ஸ்டோர்
இதற்கு வாடிக்கையாளர்கள் தங்களிடம் ஏற்கனவே உள்ள எந்தவொரு டேட்டா கார்ட், டாங்கிள் அல்லது ஹாட்ஸ்பாட் ரவுட்டரையும் எந்தவொரு ஜியோ டிஜிட்டல் ஸ்டோர் அல்லது ஜியோ கேர் ஸ்டோரிலும் கொடுத்து சாதனத்தை மாற்றி ரூ.2010/- மதிப்புள்ள 4ஜி டேட்டாவை பெற்றுக்கொள்ளலாம்.

இலவச சேவை
மேலும் ஜியோஃபை ரூட்டரைப் பெறுவதற்காக வாடிக்கையாளர்கள் ரூ.1999/- செலுத்த வேண்டும், பின்னர் கட்டாய ரீசார்ஜ் ஆக ரூ.408/- அதாவது ரூ.309 + ரூ.99/- ஜியோ ப்ரைம் மெம்பர் சேவை கட்டணம்) நிகழ்த்த வேண்டும். இது இது நாட்களுக்கு ஜியோவின் வழக்கமான இலவச சேவைகளை வழங்கும்.

கட்டாய ரீசார்ஜ்
கேஷ்பேக் சலுகையில் கீழ் ரூ.2010/- மதிப்பிலான 4ஜி டேட்டா வேண்டாம் என்ற வாடிக்கையாளர்கள் பூஜ்ய செலவில் ஜியோஃபை ரவுட்டரை பெற முடியும். இருப்பினும், ரூ.408/- கட்டாய ரீசார்ஜ் என்பது சேவையைப் பெறுவதற்காக பயனர்கள் செலுத்தியே ஆகவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தரவு இணைப்பு
இரண்டாவது திட்டத்தின் கீழ், ரூ. 408/- (ரூ 309 + ரூ99) என்ற முதல் கட்டாயத் தொகைக்கு பிறகு ரூ.1999/-க்கு பயனர்கள் ஜியோஃபை பெறலாம். ஆனால், அவர்கள் ரூ.1005/-க்கான 4ஜி டேட்டாவை ரூ.994/-க்கு பெறலாம். இந்தத் திட்டத்திற்கான பயனர்கள் தங்களின் தற்போதைய தரவு இணைப்புகளை பரிமாற்ற வேண்டிய அவசியமில்லை.

2ஜி / 3ஜி
ஜியோ வழங்கும் முதல் திட்டமானது பொதுவான எல்லா டாங்கில் பயனர்களுக்கும் சிறப்பான ஒரு திட்டமாகும் மற்றும் இரண்டாவது திட்டம் மடிக்கணினி பயனர்களுக்கும், 2ஜி / 3ஜி தொலைபேசி பயனர்களுக்கும், டேப்லெட் பயனர்களுக்கும் ஏற்றதாக இருக்கும்.

நான்கு சாதனங்கள்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திடம் தற்போது ஜியோஃபை 1 ரவுட்டர், ஜியோஃபை 2 ரவுட்டர், ஜியோஃபை 3 ரவுட்டர் மற்றும் ஜியோஃபை டாங்கில் என மொத்தம் நான்கு சாதனங்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications