இன்னும் 3 நாளில் ஜியோபோன் 5ஜி அறிமுகமா? உண்மை தானா? அப்போ தீபாவளி இந்த மாசம் தானா?

|

ஜியோ நிறுவனம் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கும் புதிய ஜியோபோன் 5ஜி சாதனம் ஜூன் 24 ஆம் தேதி நிறுவனத்தின் அமைக்கப்பட்ட வருடாந்திர பொதுக் கூட்டத்தில் (ஏஜிஎம்) 2021 இல் அறிமுகம் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான அறிக்கைகள் முற்றிலும் மாறுபட்ட கதையைப் பரிந்துரைத்தது. தற்பொழுது மீண்டும் இந்த புதிய ஜியோபோன் 5ஜி சாதனம் ஜூன் 24 ஆம் தேதி அறிமுகமாக வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

 கூகிள்-ஜியோ 5 ஜி ஸ்மார்ட்போனில்

இந்த ஆண்டு தீபாவளியைச் சுற்றி 5 ஜி ஜியோபோன் அறிமுகமாகும் என்று கடந்த வார ஊடக அறிக்கைகள் தெரிவித்திருக்கிறது. எனவே, வரவிருக்கும் கூகிள்-ஜியோ 5 ஜி ஸ்மார்ட்போனில் நாம் கைகளில் பெற இன்னும் சில மாதங்களே உள்ளது என்று நாங்கள் முன்பு கூறியிருந்தோம். இந்த வார தொடக்கத்தில், கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து 5 ஜி ஸ்மார்ட்போனை விரைவில் இந்திய நுகர்வோருக்காக அறிமுகப்படுத்துவதாகத் தெரிவித்திருக்கிறார்.

ஜியோ-கூகிள் 5 ஜி ஸ்மார்ட்போன் அல்லது

ஜியோ-கூகிள் 5 ஜி ஸ்மார்ட்போன் அல்லது ஜியோபோன் 5 ஜி சாதனம் இந்த ஆண்டின் அக்டோபர் மாதம் அல்லது நவம்பர் மாதங்களில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கபட்டிருந்த நிலையில், சமீபத்திய தகவல் வரும் வாரத்தில் நடைபெறும் ஜியோவின் கலந்தாய்வு கூட்டத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இது இந்த ஆண்டு தீபாவளியைச் சுற்றி அறிமுகம் செய்யப்படும் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜியோபோன் 5ஜி இந்த வாரத்தில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணா ஒரே போனில் 2 WhatsApp கணக்கு பயன்படுத்த ஆசையா? கஷ்டம் இல்லாமல் ஈஸியா யூஸ் பண்ணலாம்.. இதோ.!கண்ணா ஒரே போனில் 2 WhatsApp கணக்கு பயன்படுத்த ஆசையா? கஷ்டம் இல்லாமல் ஈஸியா யூஸ் பண்ணலாம்.. இதோ.!

நிறுவனம் அதிகாரப்பூர்வமாக

இந்த தகவலை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதிகாரப்பூர்வ தகவல் விவரங்களை ஜியோ அல்லது கூகிள் வெளியிடும் வரை காத்திருக்குமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். ஜியோவின் 5 ஜி ஸ்மார்ட்போன் தற்போது "டிக்சன் டெக்னாலஜிஸ், ஃப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ் டெக்னாலஜிஸ், யுடிஎல் நியோலின்க்ஸ் மற்றும் விங்டெக் மொபைல்கள்" ஆகியவற்றின் உற்பத்தி வசதிகளில் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக வளர்ச்சிக்கு நெருக்கமானவர்கள் கூறியதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றது.

ன் 5 ஜி ஸ்மார்ட்போன் ஏற்கனவே R&D

ஜியோபோன் 5 ஜி ஸ்மார்ட்போன் ஏற்கனவே R&D ஆராய்ச்சி கட்டத்தை கடந்துள்ளது என்பதையும் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. ஜியோபோன் 5 ஜி விலையை அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. சமீபத்திய தகவல்களின்படி, வரவிருக்கும் கூகுள்-ஜியோ 5 ஜி ஸ்மார்ட்போனின் விலை $ 50க்கு கீழே இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய மதிப்பின் படி சுமார் ரூ. 3,650 என்ற விலையை நெருங்குகிறது.

இந்த திட்டத்தில் கூ

தோராயமாகப் பார்க்கும் போது இந்த தொலைபேசியின் விலை ரூ. 3500 ஆக இருக்கலாம். இந்த 5 ஜி ஜியோபோன் விரைவில் தொடங்கலாம் என்பதனால், இதற்கான முன்பதிவை நிறுவனம் விரைவில் துவங்குவதற்கு வாய்ப்புகள் அதிகமுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது. ஜியோவின் 5 ஜி சாதனத்திற்கான மென்பொருளை மேம்படுத்துவதற்காக இந்த திட்டத்தில் கூகிள் கைகோர்த்துள்ளது. அதே நேரத்தில் விங்டெக் நிறுவனம் வன்பொருளை வடிவமைக்கும் என்று வளர்ச்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

 ஸ்மார்ட்போனி

சம்பந்தப்பட்ட பிற விற்பனையாளர்கள் ஸ்மார்ட்போனின் இணைப்பு அம்சங்களில் பணிபுரிவார்கள் என்று அறிக்கை மேலும் தெரிவிக்கிறது. ஜியோபோன் 5ஜி சாதனத்தின் சோதனைகள் நடைபெற்று வருவதால், வெளியீட்டுத் தேதி இன்னும் உறுதியாகவில்லை. இந்த நிகழ்வில் ஜியோவின் புதிய லேப்டாப் சாதனமும் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த புதிய லேப்டாப் பற்றிய கசிவுகளும் இந்த வாரத்தில் வெளியாகியுள்ளது. எது எப்படியாக இருந்தாலும் இன்னும் மூன்று தினங்களில் நமக்கு முழு விபரமும் தெரிந்துவிடும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Reliance Jio's new 5G phone is being expected to launch on June 24 in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X