Home
News

பிராட்பேண்ட் உடன் சேர்த்து டிஷ் டிவி; ஒரே கல்லுல 2 மாங்காய்; ஜியோ அதிரடி.!

ஜியோபைபர் சேவையானது, எப்போது அறிமுகம் ஆகும்.? அதன் விலை நிர்ணயம் என்னவாக இருக்கும்.? அதன் நன்மைகள் என்ன.?

By Muthuraj

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திடம் இருந்து போதுமான அளவில் 4ஜி டேட்டா மற்றும் அழைப்பு நன்மைகள் கிடைக்கும் நிலைப்பாட்டில், ஜியோ சமீபத்தில் அதன் ஜியோ போஸ்ட்பெயிட் (JioPostPaid) என்று பெயரிடப்பட்ட புதிய போஸ்ட்பெயிட் திட்டத்தை அறிவித்திருந்தது.

பிராட்பேண்ட் உடன் டிஷ் டிவி; ஒரே கல்லுல 2 மாங்காய்; ஜியோ அதிரடி.!

இனி வரிசையான முறையில் போஸ்ட்பெயிட் திட்டங்கள் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலைப்பாட்டில், ஜியோவிடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் பிராட்பேண்ட் சேவையான ஜியோபைபர் பற்றியதொரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஜியோபைபர் சேவையானது, எப்போது அறிமுகம் ஆகும்.? அதன் விலை நிர்ணயம் என்னவாக இருக்கும்.? அதன் நன்மைகள் என்ன.? போன்ற விவரங்கள் வெளியாகியுள்ளன.

எப்போது அறிமுகம் ஆகும்.?

எப்போது அறிமுகம் ஆகும்.?

ஜியோவின் பிராட்பேண்ட் சேவையான ஜியோபைபர், இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அறிமுகம் ஆகும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. ஆங்காங்கே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஜியோபைபர் சேவையானது, ஒருவழியாக வணிக ரீதியாக வெளியாகவுள்ளதை இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இணைய வேகம் என்ன.? எங்கெல்லாம் அறிமுகம் ஆகும்.?

இணைய வேகம் என்ன.? எங்கெல்லாம் அறிமுகம் ஆகும்.?

பைபர்-ஆப்டிக்-அடிப்படையிலான பிராட்பேண்ட் சேவையான ஜியோபைபர், 100Mbps என்கிற அதிகபட்ச வேகத்தையும், 40Mbps என்கிற குறைந்தபட்ச வேகத்தையும் வழங்கும் என்பது கொடுத்தால் சுவாரசியம். மும்பை, டெல்லி, கொச்சி, போபால், சண்டிகர் போன்ற நகரங்களில் உட்பட, இந்தியாவின் 20 நகரங்களில் ஜியோபைபர் நேரடியாக அ றிமுகம் ஆகும்.

கேபிள் வழங்குநர்களுடனும் போட்டியிடும், எப்படி.? எதனால்.?

கேபிள் வழங்குநர்களுடனும் போட்டியிடும், எப்படி.? எதனால்.?

கூறப்படும் ஜியோபைபர், இணைய நெறிமுறை தொலைக்காட்சி (Internet Protocol Television - IPTV) சேவைகளுடன் தொகுக்கப்படும். ஆகி இது பிராட்பேண்ட் நிறுவனங்களுடன் மட்டும் போட்டியிடாது. டாடா ஸ்கை, Videocon D2H, ஏர்டெல் DTH மற்றும் டிஷ் டிவி போன்ற செயற்கைக்கோள் கேபிள் வழங்குநர்களுடனும் போட்டியிடும் என்று அர்த்தம்.

ரவுட்டர் இல்லை, ஸ்மார்ட் டிவைஸ்; ஏன்.?

ரவுட்டர் இல்லை, ஸ்மார்ட் டிவைஸ்; ஏன்.?

ஜியோபைபரின் ரவுட்டர் ஆனது, ஆப்டிகல் நெட்வொர்க் டெஸ்டினேஷன் (ONT) பாக்ஸ் என்று அழைக்கப்படும். ஏனெனில் அதுவொரு ஸ்மார்ட் நெட்வொர்க்கிங் டிவைஸ் ஆக இருக்கும். அதாவது அனைத்து சேவைகளையும் ஒன்றாக வழங்கும் என்று அர்த்தம்.

இரண்டு முதல் எட்டு லேன் போர்ட்கள்.!

இரண்டு முதல் எட்டு லேன் போர்ட்கள்.!

ஜியோபைபர் சேவையை பெற பயனர்களின் வீடுகளில் நிறுவப்படும் ONT பாக்ஸ் ஆனது, ஒரு டிவி அல்லது வேறு சாதனத்துடன் இணைக்கக்கூடிய ஆப்டிகல் ஃபைபர்-அவுட் போர்ட்களைக் கொண்டிருக்கும். இது 4K வீடியோ பின்னணி மற்றும் ஆன்லைன் கேமிங் போன்ற உயர் வேக தரவு நுகர்வு செயல்பாடுகளை இயக்கும். ONT பாக்ஸ்களில் அதன் மாதிரிகளை பொறுத்து இரண்டு முதல் எட்டு லேன் போர்ட்கள் வரை இடம்பெறலாம்.

வரம்பற்ற வாய்ஸ் மற்றும் டேட்டா நன்மைகள் கிடைக்குமா.?

வரம்பற்ற வாய்ஸ் மற்றும் டேட்டா நன்மைகள் கிடைக்குமா.?

தற்போதைய மொபைல் திட்டங்களைப் போன்றே வரம்பற்ற வாய்ஸ் மற்றும் டேட்டா நன்மைகள் கிடைக்குமா.? என்று கேட்டால் நிச்சயமாக கிடைக்கும். ஜியோபைபர் சேவையை பெறுவதற்கு, பயனர்கள் ரூ.4500/- என்கிற வைப்புத் தொகையை செலுத்த வேண்டும். பின்னர் அணுக கிடைக்கும் JioFiber பிராட்பேண்ட் திட்டங்கள் வரம்பற்றதாக இருக்கும். 1Gbps இணைய வேகத்தை வழங்குவதற்கான ஒரு சிறப்புத் திட்டத்தை பயனர்கள் பெற முடியும்.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)
ஜியோ போஸ்ட்பெயிட் ரூ.199/-ன் நன்மைகள் என்ன.?

ஜியோ போஸ்ட்பெயிட் ரூ.199/-ன் நன்மைகள் என்ன.?

முன்னர் அறிமுகமான ஜியோ போஸ்ட்பெயிட் (JioPostPaid) திட்டமானது மாதம் ரூ.199/- என்கிற செலவை கொண்டுள்ளது. டேட்டா நன்மை மட்டுமின்றி, இந்த திட்டத்தின் கீழ், இந்தியா முழுவதுமான ரோமிங் உட்பட வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்கும் இந்த திட்டத்திற்கு எந்தவொரு பாதுகாப்பு வைப்பு நிதியும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டேட்டா நன்மையை பொறுத்தவரை, ரூ.199/- ஆனது மொத்தம் 25 ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவை வழங்குகிறது. முன்னர் குறிப்பிடப்படி இதன் செல்லுபடியாகும் காலம் - ஒரு மாதம் ஆகும். வாய்ஸ் மற்றும் டேட்டா நன்மைளுடன் சேர்த்து, இந்த ஜியோ போஸ்ட்பெயிட் திட்டமானது, அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு நிமிடத்திற்கு 50 பைசா என்ற விகிதத்தில் சர்வதேச அழைப்புகளை செய்யும் விருப்பத்தையும் அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேலுக்கு.?

பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேலுக்கு.?

அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு அழைப்பு நன்மைகளை வழங்கினாலும் கூட, மற்ற நாடுகளுக்கு நிகழ்த்தப்படும் அழைப்பு கட்டண விகிதங்கள் அதிகமாக உள்ளன. குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு நிமிடத்திற்கு 6 ரூபாய் என்கிற கட்டணம் வசூலிக்கப்படும். நிறுவனத்தின் இந்த புதிய போஸ்ட்பெயிட் திட்டமானது, "ஸீரோ-டச்" திட்டம் என்று அழைக்கப்படுகிறது. "ஸீரோ-டச்" - என்பதின் அதிகாரபூர்வமான அர்த்தம் என்ன என்பதில் தெளிவு இல்லை. ஒருவேளை, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்வதற்கு, எந்தவொரு பாதுகாப்பு வைப்பு நிதியும் தேவையில்லாத திட்டம் மற்றும் "ப்ரீ-ஆக்டிவேட்டட்" திட்டம் என்பதால் இந்த பெயரை பெற்று இருக்கலாம்.

ஏர்டெல் மற்றும் வோடபோனுக்கு செக் மேட்.!

ஏர்டெல் மற்றும் வோடபோனுக்கு செக் மேட்.!

தற்போது வரையிலாக ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற நிறுவனங்களின் போஸ்ட்பாய்ட் திட்டங்களைப் பயன்படுத்துகின்ற நுகர்வோர் இலக்காக கொண்டு களம் காணும் இந்த ரூ.199/- ஆனது, ஏர்டெல் மற்றும் வோடபோனை ஒருவழி செய்து விடும் என்றே தோன்றுகிறது. ஏனெனில், ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் மலிவான போஸ்ட் திட்டமானது ரூ.499/-க்கு தான் தொடங்குகிறது. ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.499/- ஆனது இன்ஃபினிட்டி பிளான்கள் என்று அழைக்கபட மறுகையில் உள்ள வோடபோன் திட்டங்கள் ஆனது ரெட் பிளான்ஸ் என்று அழைக்கபடுகிறது. இந்த இரண்டு வகையான திட்டங்களிலுமே ரோமிங் அழைப்புகளுக்கு கூடுதல் கட்டணம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ஜியோவின் ரூ.199/- ஆனது குறைந்த செலவில் கிடைக்கிக்கூடிய மிகச்சிறந்த போஸ்ட்பெயிட் ரீசார்ஜ் திட்டாக திகழும் என்பதில் சந்தேகமே இல்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Reliance Jio's JioFiber broadband service to go live by December. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X