Home
News

ஜியோசினிமாவின் 'ஸ்மார்ட் டவுன்லோட் ஆப்ஷன்' விளக்கமும்-பயன்பாடும்.!

ஜியோ தமது வாடிக்கையாளர்களுக்காக புதிய சலுகையினை ஜியோசினிமா ஆப் மூலம் 'ஹாப்பி ஹவர்ஸ்' என்ற பெயரில் வழங்குகிறது.

By Ilamparidi

ஜியோ அறிவித்த நாள் முதலே தம்மைப்போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தனது சலுகைகள் வாயிலாக பெருத்த போட்டியாக இருந்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இப்போது 'ஹாப்பி ஹவர்ஸ்' என்ற சலுகையின் மூலம் அதிகாலை 2 முதல் 5 மணி வரை எந்த வரையறையுமின்றி டேட்டா வினை உபயோகிக்க இயலும்.

நாள் ஒன்றுக்கு 1ஜிபி என்ற வரையறைக்குள் இது உட்படாது என்பதே இதன் சிறப்பம்சமாகும்.
அதுகுறித்த தகவல்கள் கீழே.

ஜியோ:

ஜியோ:

ஜியோவிற்கென்று தனியான அறிமுகம் ஏதும் தேவையில்லை.தொலைத்தொடர்புத் துறையில் தாம் கால் பதித்த நாள் முதல் வாய்ஸ்கால்,டேட்டா,மெசேஜ் உள்ளிட்ட எல்லாச் சேவைகளையும் இலவசமாக வழங்கி குறைந்த நாட்களுக்குள் அதிகப்படியான வாடிக்கையாளர்களை தம் பக்கம் ஈர்த்தது இந்த ஜியோ.

சலுகைகள்:

சலுகைகள்:

துவக்கத்தில் எந்த வரையறையுமின்றி தனது வாடிக்கையாளர்கள் வாய்ஸ் கால் டேட்டா மெசேஜ் உள்ளிட்ட சேவைகளையும் இலவசமாக வழங்கி வந்தது.இதன் காரணமாக பெரும்பாலானோர் ஜியோவின் வாடிக்கையாளர்களாக மாறிப்போயினர்.சென்ற ஆண்டின் இறுதியோடு இந்த சலுகைகள் முடிவடைந்த நிலையில் அதனை இந்த ஆண்டின் மார்ச் இறுதி வரை நீட்டித்தது.

வரையறை:

வரையறை:

புத்தாண்டுக்கான ஜியோ சலுகையில் வாய்ஸ் கால்,மெசேஜ்,இவற்றினைத் தவிர்த்து டேட்டா சலுகையில் புதிய மாற்றம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அது யாதெனில் ஜியோவின் வாடிக்கையாளர்கள் நாள் ஒன்றுக்கு 1ஜிபி வரையிலுமே 4ஜி வேகத்தில் இலவசமாக பயன்படுத்த இயலும்.அதற்கு மேல் உபயோகித்தால் 4ஜி வேகமானது குறைக்கப்படும்.இந்த நடைமுறையானது இப்போது செயல்பாட்டில் உள்ளது.

ஜியோ சினிமா:

ஜியோ சினிமா:

ஜியோ சிம் அறிமுகத்தின் போதே ஜியோ சினிமா,ஜியோ மியூசிக்,மகாசைன் உள்ளிட்ட ஆப்ஸ்களும் அறிமுகப்படுத்தப்பட்டன.இவற்றில் அவற்றின் பெயருக்கேற்றாற்போல் பாடல்கள்,திரைப்படங்கள் உள்ளிட்டவை தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றை ஜியோ வாடிக்கையாளர்கள் இலவசமாக பயன்படுத்தவோ,தரவிறக்கவோ இயலும்.இந்த டேட்டா வரையறைக்கு முன்பு வரையிலும் அவ்வாறே பயன்படுத்தி வந்தனர். ஆனால் அதற்குப்பிறகு குறைந்த டேட்டா வசதியினைக் கொண்டு இவற்றை முழுமையாக பயன்படுத்த இயலவில்லை அதாவது ஒரு திரைப்படத்தினை முழுக்கையாக தரவிறக்க இயலவில்லை.

ஹாப்பி ஹவர்:

ஹாப்பி ஹவர்:

இந்த சூழலில் ஜியோ தனது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. என்னவெனில் ஜியோ சினிமா ஆப்பில் உள்ள திரைப்படங்கள்,பாடல்கள்,மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் அதிகாலை 2 மணி முதல் 5மணி வரை எந்த டேட்டா வரையறையுமின்றி பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதேயாகும்.

ஜியோவின் இதுபோன்ற அதிரடி அறிவிப்புகளால் அதன் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சிகொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

பேஸ்புக்,யூட்யூப் உள்ளிட்டவற்றில் வீடியோ லைவ் செய்வது எப்படி.?

Best Mobiles in India

English summary
Reliance Jio’s JioCinema Adds Smart Download Option: What Is It and How Can You Use It.Read more about this in Tamil Gizbot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X