ஜியோ நிறுவனத்தின் JioMeet.! எப்போது அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்.!

|

கொரோனா உலகளவில் அதிக பாதிப்பு ஏற்படுத்திவிட்டது என்றுதான் கூறவேண்டும்,மேலும் இந்த சமயத்தில் வீடியோ அழைப்பு பயன்பாடுகள் அதிகரித்து வருகிறது என்றுதான் கூறவேண்டும், இந்நிலையில் வீடியோ கான்பரன்சிங் நுட்பத்தில் காலடி எடுத்து வைக்க ரிலையன்ஸ் ஜியோ முடிவு செய்துள்ளது.

செல்ல தயாராக உள்ளது

இதுதொடர்பான அறிவிப்பில் ரிலையன்ஸ் ஜியோ வீடியோ கான்பரன்சிங் இடத்திற்கு செல்ல தயாராக உள்ளது, வீடியோகான்பரன்சிங் பயன்பாட்டை விரைவில் கொண்டுவர திட்டமிட்டுள்ளது என இந்நிறுவனம் வியாழக்கிழமை ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஒத்துழைப்பு பயன்பாடாக இருக்கும்

குறிப்பாக Jio Meet எனப்படும் பயன்பாடு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் வீடியோ கான்பரன்சிங் மற்றும் ஒத்துழைப்பு
பயன்பாடாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக ZOOM செயலி
சிக்கியதிலிருந்து இந்தியா வீடியோ கான்பரன்சிங் பயன்பாடுகளுக்கான வேட்டையில் ஈடுபட்டுள்ளது. ஆனால்தற்போது நாட்டில் உள்ள வீடியோ கான்பரன்சிங் பயன்பாட்டின் பெருக்கத்தைப் பார்த்து, இடைவெளிகளை நிரப்பவும், அதன்
சொந்த வீடியோ வழங்கும் பயன்பாட்டைக் கொண்டு வரவும் ஜியோ விரும்புவதாக தெரிகிறது.

வோடபோன் ஐடியா வழங்கும் 2ஜிபி இலவச டேட்டா.! யாருக்கெல்லாம் கிடைக்கும்? செக் செய்வது எப்படி?வோடபோன் ஐடியா வழங்கும் 2ஜிபி இலவச டேட்டா.! யாருக்கெல்லாம் கிடைக்கும்? செக் செய்வது எப்படி?

 JioMeet என்பது

வெளிவந்த தகவலின் அடிப்படையில், JioMeet என்பது பல தனித்துவங்களைக் கொண்ட தனம் என்று கூறப்பட்டுள்ளது, இது உண்மையில் எந்தவொரு சாதனம், எந்தவொரு இயக்க முறைமையிலும் வேலை செய்யும் திறனைக் கொண்டுள்ளது, மேலும் இது ஒரு முழுமையான ஒத்துழைப்பைச் செய்யம் திறனைக் கொண்டுள்ளது என்று ஜியோ இன்ஃபோகாம் மூத்த தலைவர்பங்கஜ் பவார் தெரிவித்துள்ளார்.

மட்டுப்படுத்தாது

மேலும் இந்த JioMeetபயன்பாடு வழக்கமான வீடியோ வழங்கும் பயன்பாடாக இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார், பின்பு திறம்பட இந்த ஒத்துழைப்பு ஒரு பொதுவான வீடியோ கான்பரன்சிங் பயன்பாட்டிற்கு மட்டுப்படுத்தாது, என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஆன்லைனில் மருத்துவர்களுடன் கலந்தாலோசித்து மருந்துகளைப் பெறவதற்கு கூட இந்த சேவை பயன்படும் எனக் கூறப்படுகிறது.

எனவும் தெரிவித்துள்ளது

இந்த JioMeet ஆனது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஒரு காட்சி வகுப்பறையை உருவாக்க அனுமதிக்கும்கல்வி தளங்களுடன் ஒத்துழைக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது, இந்த பயன்பாட்டை கொண்டு மாணவர்கள்
பணிகளை சமர்ப்பிக்கலாம் மற்றும் தளத்தை பயன்படுத்தி மெய்நிகர் சோதனைகளை மேற்கொள்ளலாம் எனவும்தெரிவித்துள்ளது.

புதிய வசதி

விரைவில் ஜியோ நிறுவனத்தின் இந்த புதிய வசதி வெளிவரும் என பவார் மேற்கொள் காட்டியுள்ளார், மேலும் சிறந்தபாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும், மேலும் JioMeet இயங்குதளத்தின் கேள்விகள் பக்கத்தில் உள்ள தகவல்களின்படி சுமார் 100 பேர் ஒரே அழைப்பில் சேர அனுமதிக்கும்.

நான்கு முதல் எட்டு

கூகுள் நேற்று தனது பிரீமியம் மீட் பயன்பாட்டை ஜிமெயில் கணக்குகள் உள்ள அனைத்து பயனர்களுக்கும் இலவசமாக்கியது. கூகுள் மீட் பயன்பாடு ஒரே அழைப்பில் 100 பங்கேற்பாளர்களை அனுமதிக்கிறது. மேலும் பேஸ்புக் நிறுவனமும் மெசஞ்சர் ரூம்ஸ் என்று அழைக்கப்படும் அதன் சொந்த வீடியோ கான்பரன்சிங் தளத்தை கொண்டு வந்தது, இது 50 பேரை அழைப்பின் ஒரு பகுதியாக இருக்க அனுமதிக்கும். செய்தியிடல் பயன்பாடு வாட்ஸ்அப்பும் வீடியோ அழைப்பில் பங்கேற்பாளர்களின் வரம்பை நான்கு முதல் எட்டு வரை உயர்த்தியது. இந்த வரிசையில் ஜியோ தனது புதிய வசதியை களமிறக்க உள்ளது.

Best Mobiles in India

English summary
Reliance Jio’s hand at video-conferencing: Jio Meet app coming soon: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X