Home
News

என்ஜாய்: ரூ.11/- முதல் ரூ.101/- வரை ஜியோ வழங்கும் Extra Data திட்டங்கள்.!

இந்த ஆட்-ஆன் திட்டங்களை ரீசார்ஜ் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் வலைத்தளத்தை அணுகலாம் அல்லது ஜியோ பயன்பாடு வழியாகவும் ரீசார்ஜ் செய்யலாம்.

By Muthuraj

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்த ஜியோபோனிற்கான ரூ.49/- திட்ட கட்டணத்துடன் சேர்த்து நான்கு புதிய ஆட்-ஆன் திட்டத்தை அறிவித்ததை நாம் அனைவரும் அறிவோம். இருப்பினும் கூட அந்த திட்டங்கள் வழங்கும் கூடுதல் தரவு நன்மை பற்றிய எந்தவொரு விவரத்தையும் நிறுவனம் வெளிப்படுத்தவில்லை.

ரூ.11/- முதல் ரூ.101/- வரை ஜியோ வழங்கும் Extra Data திட்டங்கள்.!

ரூ.11, ரூ.21, ரூ.51 மற்றும் ரூ.101/- ஆகிய நான்கு டேட்டா பூஸ்டர்களின் நன்மைகள் நேற்று ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளிப்படுத்தப்பட்டது. இந்த ஆட்-ஆன் திட்டங்களை ரீசார்ஜ் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் வலைத்தளத்தை அணுகலாம் அல்லது ஜியோ பயன்பாடு வழியாகவும் ரீசார்ஜ் செய்யலாம்.

தனிப்பட்ட செல்லுபடியாகும் காலம் இல்லை.

தனிப்பட்ட செல்லுபடியாகும் காலம் இல்லை.

ரூ.21/- ஆட்-ஆன் திட்டமானது இப்போது 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவையும், ரூ.51/- ஆனது 3ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவையும் மற்றும் ரூ.101/- ஆனது 6ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவையும் வழங்குகிறது. இந்த அனைத்து ஆட்-ஆன் திட்டங்களும் உங்களின் முதன்மை திட்டங்களின் செல்லுபடி காலம் வரை செல்லுபடியாகும். அதாவது இவைகளுக்கென்ற தனிப்பட்ட செல்லுபடியாகும் காலம் இல்லை.

மொத்த டேட்டா நன்மை

மொத்த டேட்டா நன்மை

எடுத்துக்காட்டாக, நீங்கள் ஜியோவின் ரூ.149/- திட்டத்தை ரீசார்ஜ் செய்திருந்தால் உடன் ரூ.101/- என்கிற ஆட்-ஆன் திட்டத்தையும் ரீசார்ஜ் செய்தால் ரூ.149/-ன் நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி அளவிலான டேட்டாவுடன் சேர்த்து - ரூ.149/-ன் மொத்த டேட்டா நன்மையில்- கூடுதலாக 6ஜிபி டேட்டாவை பெறலாம்.

ஐந்து தரவு பூஸ்டர் தொகுப்பு

ஐந்து தரவு பூஸ்டர் தொகுப்பு

இந்த டேட்டா பூஸ்டர் தொகுப்புகள் ஜியோபோன் பயனர்களுக்கு பொருந்தாமல் போனால், நிறுவனம் புதிய பூஸ்டர் தொகுப்புகளை அறிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, ஜியோவின் ஐந்து தரவு பூஸ்டர் தொகுப்புகளாக ரூ.11, ரூ.51, ரூ.91, ரூ.201, மற்றும் ரூ.301/- ஆகியவைகள் திகழ்ந்தன.

பார்தி ஏர்டெல் ரூ.193/- என்கிற ப்ரீபெயிட் ஆட்-ஆன்

பார்தி ஏர்டெல் ரூ.193/- என்கிற ப்ரீபெயிட் ஆட்-ஆன்

இப்போது அவைகள் நான்கு திட்டங்கலாக நிறுவனம் குறைத்துள்ளதோடு, அவற்றை மலிவாக்கவும் செய்துள்ளது. பார்தி ஏர்டெல் நிறுவனமும் அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில் ரூ.193/- என்கிற ப்ரீபெயிட் ஆட்-ஆன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. அது பிரதான திட்டத்தின் டேட்டா நன்மைகளுக்கு மேல் கூடுதலாக 1ஜிபி டேட்டா வழங்குகிறது.

தனிப்பட்ட திட்டங்கள் அல்ல

தனிப்பட்ட திட்டங்கள் அல்ல

இந்த அனைத்து டேட்டா ஆட்-ஆன் திட்டங்களும் தனிப்பட்ட திட்டங்கள் அல்ல, உங்களின் நிலையான ப்ரீபெய்ட் திட்டத்தின் மேல் ரீசார்ஜ் செய்ய உகந்த பூஸ்டர் வகை திட்டங்களாகும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். உடன் மேலும் பல டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Reliance Jio’s Data Add-On Pack of Rs 101 to Offer 6GB of Data Without Voice Benefits. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X