மலிவு விலை திட்டங்களில் கூடுதல் டேட்டா நன்மையை வழங்கிய ஜியோ நிறுவனம்.!

|

ஜியோ நிறுவனம் தொடர்ந்து சிறப்பான சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. இந்நிறுவனம் அண்மையில் மற்ற நெட்வொர்க்குகளுக்கு அழைத்தால் விதிக்கப்பட்ட கட்டணம் ரத்து செய்துள்ளதாகவும், இனி எல்லா அழைப்புகளையும் இலவசமாக மேற்கொள்ளலாம் என்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தெரிவித்தது.

கொரோனா வைரஸ் காரணமாக

அதேபோல் இந்த கொரோனா வைரஸ் காரணமாக பெரும்பாலான மக்கள் இன்னும் வீட்டிலிருந்து வேலை செய்து வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் மக்களிடம் இணைய பயன்பாடு சற்று அதிகரித்துள்ளது என்றுதான் கூறவேண்டும். இதை மனதில் வைத்து ஜியோ நிறுவனம் மலிவான விலையில் சிறந்த 4ஜி டேட்டா வவுச்சர் சலுகைகளை வழங்கியுள்ளது.

ஜியோவின் மலிவான 4ஜி டேட்டா வவுச்சரின் ஆரம்ப

அதுவும் ஜியோவின் மலிவான 4ஜி டேட்டா வவுச்சரின் ஆரம்ப விலை ரூ.11 ஆக உள்ளது. மேலும் நிறைய டேட்டா வவுச்சர்களை கொண்டுள்ளது இந்நிறுவனம். இப்போது ரூ.100-க்குள் கிடைக்கும் ஜியோவின் அசத்தலான 4ஜி டேட்டா வவுச்சர் திட்டங்களும் மற்றும் அதில் வழங்கப்படும் சலுகைகள் பற்றியும் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஜியோவின் 11 ரூபாய் 4ஜி வவுச்சர்

ஜியோவின் 11 ரூபாய் 4ஜி வவுச்சர்

ஜியோவின் 11 ரூபாய் 4ஜி வவுச்சர் ஆனது முன்பு 400 எம்பி டேட்டாவை மட்டுமே வழங்கியது. ஆனால் இப்போது இந்த வவுச்சரில் 800 எம்பி டேட்டா வழங்க்கப்படுகிறது.

ஜியோவின் ரூ.21 4ஜி டேட்டா வவுச்சர்

ஜியோவின் ரூ.21 4ஜி டேட்டா வவுச்சர்

ஜியோ நிறுவனம் வழங்கும் 21 ரூபாய் 4ஜி டேட்டா வவுச்சர் ஆனது வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப் எச்சரிக்கை: இதை செய்யாவிட்டால் வாட்ஸ்அப் கணக்கு டெலீட்டாகும்- தனியுரிமை கொள்கை மற்றும் விதிகள்!வாட்ஸ்அப் எச்சரிக்கை: இதை செய்யாவிட்டால் வாட்ஸ்அப் கணக்கு டெலீட்டாகும்- தனியுரிமை கொள்கை மற்றும் விதிகள்!

 ஜியோவின் ரூ.51 4ஜி டேட்டா வவுச்சர்

ஜியோவின் ரூ.51 4ஜி டேட்டா வவுச்சர்

ஜியோவின் ரூ.51 4ஜி டேட்டா வவுச்சர் ஆனது முன்பு 4 ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்கியது. ஆனால் இப்போது இந்த வவுச்சரில் 6 ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது.

ஜியோவின் ரூ.101 4ஜி டேட்டா வவுச்சர்

ஜியோவின் ரூ.101 4ஜி டேட்டா வவுச்சர்

ஜியோவின் ரூ.101 4ஜி டேட்டா வவுச்சர் ஆனது முன்பு 6 ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்கியது. ஆனால் இப்போது இந்த வவுச்சரில் 12 ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது.

ஸ்ட்பெய்டு பிளஸ் திட்டத்தின்

அதேபோல Jio போஸ்ட்பெய்டு பிளஸ் திட்டத்தின் கீழ் அதிக நன்மையுடன் கிடைக்கும் மிகவும் மலிவான திட்டம் என்றால் அது ரூ. 399 திட்டம் தான். இந்த திட்டத்தை நீங்கள் தேர்வு செய்தால் உங்களுக்கு மொத்தமாக ரூ.1597 மதிப்பிலான சேவைகள் இலவசமாகக் கிடைக்கிறது. அவை என்ன என்பதை விளக்கமாகப் பார்க்கலாம்.

ரூ. 399 திட்டத்தின் முழு நன்மை விபரம்

ரூ. 399 திட்டத்தின் முழு நன்மை விபரம்

இத்திட்டம் மாதத்திற்கு 75 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இத்துடன் 200 ஜிபி வரையிலான டேட்டா ரோல் ஓவர் வசதியையும் வழங்கி, தினமும் 100 SMS நன்மையையும் வழங்குகிறது. தெரியாதவர்களுக்கு, இத்திட்டத்தின் கீழ் ஜியோ வழங்கும் டேட்டா நிறைவடைந்ததும் ஒவ்வொரு 1 ஜிபி டேட்டா பயனுக்கும் ரூ. 10 வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் நம்பமுடியாத வகையில் மூன்று OTT சந்தாக்களின் கூடுதல் நன்மையும் உங்களுக்குக் கிடைக்கிறது.

 நம்ப முடியாத OTT சந்தாக்களின் கூடுதல் நன்மை

நம்ப முடியாத OTT சந்தாக்களின் கூடுதல் நன்மை

இந்த ரூ. 399 போஸ்ட்பெய்ட் திட்டத்துடன் மட்டும் ஜியோவின் ஃபேமிலி ஆட் ஆன்ஸ் நன்மை வழங்கப்படவில்லை. இருப்பினும், OTT சந்தாக்களின் கூடுதல் நன்மை இருக்கிறது. இத்திட்டத்தைத் தேர்வு செய்யும் பயனர்களுக்கு நெட்ஃபிக்ஸ் மொபைல் சாந்த இலவசமாகக் கிடைக்கிறது. இத்துடன் ஒரு வருட இலவச அமேசான் பிரைம் சந்தா மற்றும் இலவச டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி உறுப்பினர் சந்தாவும் கிடைக்கிறது.

இத்துடன் இந்த இலவச நன்மையும் இருக்கிறதா?

இத்துடன் இந்த இலவச நன்மையும் இருக்கிறதா?

மூன்றாம் தரப்பு OTT பயன்பாடுகளுடன், ஜியோவின் சொந்த OTT பயன்பாடுகளான JioTV மற்றும் JioCinema சந்தாவும் ரூ.399 திட்டத்துடன் இலவசமாகக் கிடைக்கிறது. இந்த திட்டத்துடன் திருப்பப் பெறக்கூடிய பாதுகாப்பு வைப்புத்தொகையாக ரூ.500 வசூலிக்கப்படுகிறது.

1597 ரூபாய்க்கு மேல் லாபம் கூடுதலாக, புதிய பயனர்கள் ஜியோ பிரைம் சந்தா சலுகைகளுக்கு ரூ. 99 செலுத்த வேண்டும். இருப்பினும், இத்திட்டம் உங்களுக்கு 1597 ரூபாய்க்கு மேலான சேவைகளை இலவசமாக வழங்குகிறது. ரூ. 1597 மதிப்பிலான சேவைகள் என்ன என்பதன் விளக்கம், நெட்ஃபிக்ஸ் மொபைல் திட்டத்திற்கு மட்டும் மாதத்திற்கு ரூ. 199 செலவாகும்.

மேலும் பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் நெட்ஃபிக்ஸ் உள்ளடக்கத்தைக் கூடுதல் செலவில்லாமல் பார்க்க அனுமதிக்கிறது. ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் உறுப்பினர் சாந்தாவின் விலை ரூ .999 ஆகும். டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி ஒரு வருட சந்தாவின் விலை ரூ .399 ஆகும். எப்படி பார்த்தாலும் இந்த திட்டத்துடன் உங்களுக்கு செலவைவிட நன்மை மட்டுமே அதிகம் கிடைக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Reliance Jio's Best Affordable 4G Vouchers! What are the benefits.!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X