Jio-வுக்கு கும்புடு.. Vi-க்கு சல்யூட்.. 100GB டேட்டா.. 3 சிம் இணைப்பு.. அளவில்லா 5G.. எந்த திட்டம் என்ன விலை?
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மற்றும் வோடபோன் ஐடியா (Vi) ஆகிய இரண்டு முன்னணி டெலிகாம் ஆபரேட்டர்கள், இப்போது அதன் பயனர்களுக்கு ஒரு சூப்பர் திட்டத்தை வழங்கியுள்ளது. உண்மையில், ஜியோவைவிட, Vi ஒரு படி மேலே சென்று நன்மைகளை வாரி வழங்கியுள்ளது.
இந்தியாவின் முன்னணி டெலிகாம் ஆப்பரேட்டரான ஜியோ (Jio) மற்றும் மூன்றாவது பெரிய டெலிகாம் ஆப்பரேட்டராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் வோடபோன் ஐடியா (Vi) இப்போது அதன் பயனர்களுக்கு ஒரு சிறப்பான போஸ்ட்பெய்டு திட்டத்தை ரூ.700 விலைக்குள் வழங்கி வருகிறது. இதில் ஜியோ நிறுவனம் ஒரு போஸ்ட்பெய்டு திட்டத்துடன் 3 கூடுதல் இணைப்பை வழங்குகிறது.

ரூ.700 விலை புள்ளிக்குள் கிடைக்கும் பெஸ்ட் போஸ்ட்பெய்டு திட்டம்: (Best Postpaid Plan Under Rs 700):
தலா வெறும் ரூ.99 விலையில் 3 புதிய சிம் இணைப்பை பெறுவதோடு ஒவ்வொரு சிம் கார்டிற்கும் 5ஜிபி டேட்டா நன்மையை 100ஜிபி பிரைமரி சிம் டேட்டாவுடன் ஜியோ இப்போது வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு புறம் இருக்க, Vi போஸ்ட்பெய்ட் திட்டம் எந்த வரைமுறையும் இல்லாமல், அன்லிமிடெட் டேட்டா நன்மையை வழங்குகிறது.
டேட்டாவின் அளவு பற்றிய கவலையே இல்லாமல், இரவு, பகல், மாலை, அதிகாலை என்று எந்நேரமும் டேட்டா பயன்பாட்டை சூப்பர் ஸ்பீட் வேகத்தில் அனுபவிக்க விரும்புவோருக்கு இந்த திட்டம் சிறப்பானது. சரி, இப்போது இந்த 2 நிறுவனங்களும் என்ன விலையில், என்னென்ன நன்மைகளை அதன் போஸ்ட்பெய்டு திட்டத்தின் கீழ் வழங்குகிறது என்று பார்க்கலாம்.
ரிலையன்ஸ் ஜியோ ரூ.699 போஸ்ட்பெய்டு திட்டம்: (Jio Rs 699 Postpaid Plan):
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டத்தில் 100ஜிபி டேட்டா நன்மை (100GB data), அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை (Voice calls) மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மை (SMS) போன்றவற்றை வழங்குகிறது. இந்த திட்டத்தில் பயனர்கள் 3 கூடுதல் சிம்களையும் பெறலாம். ஒவ்வொன்றும் மாதத்திற்கு ரூ.99 என்ற கட்டணத்துடன் செயல்படும். ஒவ்வொரு கூடுதல் சிம்மிற்கும் 5ஜிபி மாதாந்திர டேட்டா வழங்கப்படும்.

இந்த திட்டத்துடன் இணைந்த கூடுதல் நன்மைகளாக நெட்ஃபிளிக்ஸ் மொபைல் சந்தா (Netflix Mobile Subscription), அமேசான் பிரைம் (Amazon Prime), ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற நன்மைகளும் கிடைக்கிறது. இந்த திட்டம் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் வழங்குகிறது. எனவே, உங்களிடம் 5ஜி ஃபோன் இருந்தால், நீங்கள் 5ஜி கவரேஜ் வட்டத்தில் இருந்தால், இலவச 5ஜி நன்மையை அனுபவிக்கலாம்.
வோடபோன் ஐடியா ரூ 701 போஸ்ட்பெய்டு திட்டம்: (Vi Rs 701 Postpaid Plan):
வோடபோன் ஐடியாவின் ரூ.701 திட்டமானது அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நம்மை, அன்லிமிடெட் டேட்டா (Unlimited data) மற்றும் மாதத்திற்கு 3000 எஸ்எம்எஸ் போன்றவற்றை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் நீங்கள் பயன்படுத்தக்கூடிய டேட்டா அளவுக்கு வரம்பு இல்லை. இந்த திட்டத்தின் கூடுதல் பலன்கள் 1 மாத இலவச ஹங்காமா மியூசிக் (Hungama Music) சந்தாவுடன் வருகிறது.
விஐ மூவீஸ் & டிவி (Vi Movies & TV) மற்றும் Vi கேம்ஸ் (Vi Games), ஆறு மாதங்களுக்கு அமேசான் பிரைம் (Amazon Prime), டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), சோனிலைவ் (SonyLIV) 12 மாதங்களுக்கு, சன் நெக்ஸ்ட் (SunNXT), ஸ்விகீ (Swiggy), ஈஸிடைனர் (EazyDiner), நார்தன் (Norton) மற்றும் ஈஸிமை ட்ரிப் (EaseMyTrip) போன்ற நன்மைகளை பெறுகிறது.
இதில் ஜியோ 100GB என்ற ஒரு கட்டுப்பாட்டு டேட்டா நன்மையை வழங்குகிறது. ஆனால், Vi உங்களுக்கு அன்லிமிடெட் டேட்டா நன்மையை வழங்குகிறது. உங்கள் தேவைக்கேற்ற திட்டத்தை நீங்களே தேர்வு செய்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








