Home
News

எங்கிட்ட வந்துதான் ஆகனும்.. ரூ.545 க்கு யாரும் கொடுக்காத சலுகை.. கிளவுட் கோமிங்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்!

இந்திய டெலிகாம் மார்க்கெட்டில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மட்டுமே கிளவுட் கேமிங் சலுகைகளை கொடுத்து வருகிறது. இதில் ஜியோ ரூ.545 திட்டமானது அதிகமாக ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது. டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகளுடன் கேமிங் சலுகைகளும் கொடுக்கப்பட்டு உள்ளதால், கஸ்டமர்களிடையே அதிக வரவேற்பு பெற்று வருகிறது. இந்த கேமிங் திட்டத்தின் முழு சலுகை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

கிளவுட் கேமிங்கை பெற விரும்பும் கஸ்டமர்களுக்கு அதிவேக டேட்டா தேவைப்படும். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திடம் அன்லிமிடெட் 5 ஜி டேட்டா கிடைப்பதால், இது சாத்தியமாகிறது. ஸ்மார்ட்போனில் மட்டுமல்லாமல் டிவி, லேப்டாப் போன்றவற்றிலும் இந்த கிளவுட் கேமிங்கை அணுகலாம். அதேபோல வழக்கமாக கிடைக்கும் சலுகைகளையும் ஸ்மார்ட்போனில் பெற்று கொள்ளலாம்.

எங்கிட்ட வந்துதான் ஆகனும்.. ரூ.545 க்கு யாரும் கொடுக்காத சலுகை!

ரிலையன்ஸ் ஜியோ ரூ. 545 திட்டம் (Reliance Jio Rs 545 Plan): 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. கூடுதலாக 5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஆகவே மொத்தமாக 61 ஜிபி டேட்டாவை இந்த திட்டத்தில் பெற்று கொள்ளலாம். இது 4ஜி வேகத்தில் கிடைக்கும் டேட்டாவாக இருக்கிறது. இதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும்.

மேலும், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெறும் கஸ்டமர்களுக்கு இலவசமாக 5ஜி டேட்டா கொடுக்கப்படும். இந்த டேட்டா கிளவுட் கேமிங்குக்கு போதுமானதாக இருக்கும். இதுபோக அன்லிமிடெட் லோக்கல் எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை செய்து கொள்ளலாம். தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளலாம். இப்போது, கிளவுட் கேமிங் சலுகைகளுக்கு வருவோம்.

இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு ஜியோகேம்ஸ் கிளவுட் (JioGames Cloud) மற்றும் ஃபேன்கோட் சந்தா (FanCode Subscription) கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த சந்தாவை 28 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். கிளவுட் கேமிங் சலுகையாக இருப்பதால், ஸ்மார்ட்போன் மட்டுமல்லாமல், பிசி, லேப்டாப் அல்லது ஜியோ செட்-டாப் பாக்ஸ் (Jio set-top Box) ஆகியவற்றிலும் அணுக முடியும்.

இதில் 500+ ஹை டெபனிஷன் பிரீமியம் கேம்கள் (High Definition Premium Games) கொடுக்கப்பட்டு உள்ளன. இதை டவுன்லோட் செய்து பயன்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. நேரடியாக ஆன்லைனில் விளையாடி கொள்ளலாம். பிரத்யேகமாக பிஜிஎம்ஐ ஸ்கின் (BGMI Skin) கூப்பன் கொடுக்கப்படும். ஃபேன்கோட் சந்தாவை ஜியோ டிவி மொபைல் ஆப் (JioTV Mobile App) வழியாக பயன்படுத்தலாம்.

இந்த கேமிங் சலுகைகளுக்கு அடுத்து ஜியோ ஸ்பெஷல் ஆஃபர் (Jio Special Offer) சலுகைகள் கிடைக்கின்றன. இதில் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் & டிவி (JioHotstar Mobile & TV) சந்தா கிடைக்கிறது. இந்த சந்தா மூன்று மாதங்களுக்கு கிடைக்கும். மேலும், ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) அணுகலும் இந்த திட்டத்துக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் 50 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கிறது.

மேலும், அண்மையில் சேர்க்கப்பட்ட கூகுள் ஜெமினி ப்ரோ (Google Gemini Pro) சந்தாவை ஜியோ கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இதில் 2000 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும். நானோ பனானா அணுகல்களும் கிடைக்கும். இந்த சந்தாவை 18 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும். ரூ.35,100 மதிப்பில் இந்த சந்தா கொடுக்கப்பட்டு இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Reliance Jio Rs 545 Plan With 28 Days Validity 2GB Daily Data Check Gaming Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X