Home
News

கற்பனைக்கு எட்டாத திருத்தம்: இனி 4ஜிபி/நாள் வழங்கும் ஜியோ; Goodbye ஏர்டெல்.!

இன்று முதல் ஜியோ ரூ.299/- ஆனது அதே 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம், நாள் ஒன்றிற்கு 3 ஜிபி அளவிலான அதிவேக தரவை வழங்கும்.

By Muthuraj

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் திருத்தப்பட்ட குடியரசு தின 2018 திட்டங்களானது அதன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க தொடங்கியுள்ள நிலைபப்பாட்டில் மேலுமொரு இன்ப அதிர்ச்சியை ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

கற்பனைக்கு எட்டாத திருத்தம்: இனி 4ஜிபி/நாள் வழங்கும் ஜியோ.!

மூலம்: டெலிகாம்டால்க்.இன்ஃபோ

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் மேலும் இரண்டு பிரதான திட்டங்களானது திருத்தத்தின் கீழ் இடம்பெற்றுள்ளன. அதாவது ரூ.509/- மற்றும் ரூ.299/- ஆகிய இரண்டு திட்டங்களும் அதிரடியான திருத்தத்தை பெற்றுள்ளது. அதென்ன திருத்தம்.? இனி இந்த திட்டங்களின் நன்மைகள் என்ன.? உடன் இந்த திட்டங்களின் முந்தைய நன்மைகள் என்ன என்பதை விரிவாக காண்போம்.

ரூ.509/- திட்டமானது இனி

ரூ.509/- திட்டமானது இனி

திருத்தம் கண்டுள்ள ரூ.509/- திட்டமானது இனி நாள் ஒன்றிற்கு 4ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். மறுகையில் உள்ள ரூ.299/- ஆனது ரீசார்ஜ் செய்யப்பட்ட தேதியில் இருந்து ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான தரவை வழங்கும்.

28 நாட்களுக்கு செல்லுபடி

28 நாட்களுக்கு செல்லுபடி

இந்த திட்டங்களின் மீது ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் ஜியோ வலைத்தளத்திற்கு அல்லது மைஜியோ பயன்பாட்டிற்கு சென்று ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஜியோவின் புதிய திட்டமான ரூ.299/- ஆனது கடந்த டிசம்பரில் அறிமுகமானது எனதும் இந்த திட்டம் ஆரம்பத்தில் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் நாள் ஒன்றிற்கு 2 ஜிபி அளவிலான தரவை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

56ஜிபி டேட்டாவில் இருந்து 84ஜிபி

56ஜிபி டேட்டாவில் இருந்து 84ஜிபி

ஆனால் இன்று முதல் ஜியோ ரூ.299/- ஆனது அதே 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம், நாள் ஒன்றிற்கு 3 ஜிபி அளவிலான அதிவேக தரவை வழங்கும். ஆக இதன் மொத்த தரவு நன்மையானது 56ஜிபி டேட்டாவில் இருந்து 84ஜிபி டேட்டாவாக மாறியுள்ளது.

ரூ.299/- திட்டமானது

ரூ.299/- திட்டமானது

தரவு நன்மைகளுடன் சேர்த்து ஜியோ ரூ.299/- திட்டமானது, அதன் செல்லுபடியாகும் காலம் வரையிலான வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளையும் வழங்குமென்பதும் குறிப்பிடத்தக்கது.

"கற்பனைக்கு எட்டாத" 4ஜிபி

மற்றொரு திருத்தப்பட்ட திட்டமான ரிலையன்ஸ் ஜியோ ரூ.509/- இனி 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் நாள் ஒன்றிற்கு "கற்பனைக்கு எட்டாத" 4ஜிபி அளவிலான தரவை வழங்குகிறது. ஆக இதன் ஒட்டுமொத்த டேட்டா நன்மையானது இனி 112 ஜிபி ஆகும்.

வரம்பற்ற குரல் அழைப்புகள்

வரம்பற்ற குரல் அழைப்புகள்

ஜியோ ரூ.299/- திட்டத்தை போலவே தரவு நன்மைகளுடன் சேர்த்து ஜியோ ரூ.509/- திட்டமானது, அதன் செல்லுபடியாகும் காலம் வரையிலான வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளையும் வழங்கும்.

காம்போ (டேட்டா + வாய்ஸ்)

காம்போ (டேட்டா + வாய்ஸ்)

இந்த இரண்டு காம்போ (டேட்டா + வாய்ஸ்) திட்டங்களின் சிறந்த பகுதி என்னவெனில், இவைகள் வரம்பற்ற தரவு நன்மை வழங்கும் திட்டங்களாகும். அதாவது தினசரி டேட்டா வரம்பு (முறையே 3ஜிபி மற்றும் 4ஜிபி/நாள்) முடிந்த பிறகும் கூட வாடிக்கையாளர்கள் 64 கேபிபிஎஸ் வேகத்திலான டேட்டாவை அனுபவிக்கலாம்.

ரிலையன்ஸ் ஜியோபோன் ரூ.153/- திட்டம்

ரிலையன்ஸ் ஜியோபோன் ரூ.153/- திட்டம்

ஸ்மார்ட்போன் பயனர்களுக்கான நிலையான கட்டணத் திட்டங்களைத் தவிர்த்து, சமீத்தில் ஜியோபோன் பயனர்களுக்கான ரூ.153/- திட்டம் அறிவிக்கப்பட்டது. ஜியோபோனிற்கான ரூ.153/- ஆனது இப்போது ஒரு நாளைக்கு 1.5 ஜிஇ அளவிலான தரவை அளிக்கிறது. ஆக இதன் மொத்த தரவு நன்மை 42 ஜிபி என்று உயர்த்தப்பட்டுள்ளது.

28 நாட்களுக்கு செல்லுபடி

28 நாட்களுக்கு செல்லுபடி

மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டமானது தரவு நன்மைகளுடன் சேர்த்து அதன் செல்லுபடியாகும் காலம் வரையிலான வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளையும் வழங்கும்.

ரூ.49/- திட்டம்

ரூ.49/- திட்டம்

சமீபத்தில் தான் ரூ.153/- திருத்தப்பட்டது. ஆரம்பத்தில் நாள் ஒன்றிற்கு 500எம்பி அளவிலான டேட்டாவை வழங்கியது பின்னர் 1ஜிபி வழங்கும் வண்ணம் மாற்றியமைக்கப்பட்டது. இது தவிர ஜியோபோன் பயனர்களுக்கு ரூ.49/- திட்டமும் வாங்க கிடைக்கும். அது வரம்பற்ற குரல் அழைப்புகளையும் 1 ஜிபி அளவிலான அதிவேக தரவையும் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Reliance Jio’s Rs 509 Prepaid Plan Now Offers 4GB Data Per Day for 28 Days. Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X