4ஜிபி மெமரி; 2எம்பி கேம் உடன் ரூ.500/-க்கு ஜியோ 4ஜி வோல்ட் போன்கள்.!

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி வோல்ட் அம்சம் கொண்ட தொலைபேசியில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் மற்றும் அதன் வெளியீட்டு தேதிகள் உள்ளிட்ட 5 முக்கியமான விடயங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

|

இப்போவா.?? அப்போவா.? என்று நம்மை பல மாதங்களாய் அலைகழித்துக் கொண்டிருக்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 4ஜி வோல்ட் மொபைல் போன்கள் பற்றிய பேச்சு மீண்டும் நகரங்களுக்கும் கிளம்பியுள்ளது. அதற்கு காரணம் ஜியோ தொலைதொடர்பு நிறுவனம் தனது 4ஜி அம்சம் கொண்ட மொபைல்களை சில நாட்களாகவே அறிமுகப்படுத்தும் என்ற எதிர்ப்பார்ப்பு தான் காரணம்.

ஜியோ 4ஜி சிம் அறிமுகமான காலகட்டத்தில் மற்றும் அதற்கு பின்னர் வெளியான தகவல்கள் போலின்றி இம்முறை சில நம்பகமான விவரங்களை பெற முடிகிறது. அதற்காக இந்த தகவல்களை அதிகாரப்பூர்வமான தகவலாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும் கூட, எதிர்பார்க்கப்படும் வெளியீட்டு தேதி மற்றும் சாதனத்தின் முக்கியமான அம்சங்கள் விவரக்குறிப்புகளில் இருந்து இதன் வெளியீடு மிகவும் நெருக்கமாக உள்ளதென்பதை நாம் உணர முடிகிறது.

இந்த மாத இறுதியில்

இந்த மாத இறுதியில்

வெளியான விவரங்களின் கீழ் இக்கருவி இந்த மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாதம் வெளியாகலாம் ஆகமொத்தம் 2017-ஆம் ஆண்டுக்குள் நகர்வுகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ நெட்வொர்க் சேவையானது அதன் புதிய மொபைல் கட்டண கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ள தருணத்தில் அதன் 4ஜி வோல்ட் போன் சார்ந்த விலை பற்றிய தகவல்கள் மற்றும் வதந்திகள் கூடுதல் எதிர்பார்ப்புகளை கிளப்புகின்றன என்றே கூறலாம்.

10-11 லட்சம் என்ற எண்ணிக்கையில்

10-11 லட்சம் என்ற எண்ணிக்கையில்

தற்போது வெளியாகியுள்ள ஒரு புதிய அறிக்கையானது, ஜியோ 4ஜி வோல்ட் போன் ஆனது ரூ.500/- என்ற விலை நிர்ணயம் கொண்ட கருவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இந்த 4ஜி அம்சம் கொண்ட போன்கள் முதல் கட்டமாக 10-11 லட்சம் என்ற எண்ணிக்கையில் சந்தைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

மேலும் ஜியோ நிறுவனம் அதன் லைஃப் 4ஜி ஸ்மார்ட்போன்களில் அறிமுகப்படுத்திய அதே மூலோபாயத்தின் கீழ் இந்த 4ஜி வோல்ட் கருவிகளை கொண்டு செல்லலாம். அப்படியாக ரிலையன்ஸ் ஜியோ 4ஜி வோல்ட் அம்சம் கொண்ட தொலைபேசியில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் மற்றும் அதன் வெளியீட்டு தேதிகள் உள்ளிட்ட 5 முக்கியமான விடயங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

சோதனை

சோதனை

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஆண்டு பொதுக் கூட்டத்தில் 4ஜி வோல்ட் ன்களை அறிமுகப்படுத்தும் அறிவிப்பு செய்யப்படலாம். இந்நிகழ்வு இந்த ஆண்டு ஜூலை 21-ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது. அறிமுகம் செய்யப்படும் இக்கருவிகள் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் சில்லறை கடைகளில் விற்பனை செய்யப்படும். சென்னை மற்றும் இதர மையங்களில் ஏற்கனவே 4ஜி வசதி கொண்ட அதன் மொபைலை நிறுவனம் சோதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

ரூ.500/- என்ற விலை நிர்ணயம் சற்று உண்மையாக இருக்க கூடும் என்ற போதிலும், முந்தைய அறிக்கைகள் இயக்கருவி ரூ.1,800/- வரம்பில் இருக்கக்கூடும் என்று தெரிவித்திருந்தன. மறுபக்கம் இவ்வளவு மலிவானதாக இருக்காது, ஜியோ நிறுவனம் இக்கருவிகளை ரூ.1,300 - ரூ.1,500/- என்ற வரம்பில் அறிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சேமிப்பு விரிவாக்க ஆதரவு

சேமிப்பு விரிவாக்க ஆதரவு

ஜியோ 4ஜி அம்சம் கொண்ட போன் 512 எம்பி ரேம் உடன் வரவுள்ளதுடன், 4 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மற்றும் சேமிப்பு விரிவாக்க ஆதரவுக்கான எஸ்டி அட்டை ஸ்லாட் ஆகியவைகளையும் கொண்டிருக்கும். மேலும் தொலைபேசி ஒரு 2 மெகாபிக்சல் கேமரா கோட்னு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சாதனங்கள் வைஃபை இயலுமைப்படுத்தப்பட்டு, அருகிலுள்ள களத் தகவல்தொடர்பு (என்எப்சி) தொழில்நுட்பத்துடன் வருகின்றன, இது டிஜிட்டல் பரிவர்த்தனைகளையும் செய்ய பயனருக்கு உதவும்.

இந்திய மொபைல் சந்தை

இந்திய மொபைல் சந்தை

ஜியோவின் நெட்வொர்க் முற்றிலும் 4ஜி வோல்ட்-இல் இருக்கும்போது, 4ஜி வோல்ட் செயல்படுத்தப்பட்ட போன், எதிர்பார்த்த வரம்பைச் சுற்றி விலை நிர்ணயம் பெற்றால் இது இந்திய மொபைல் சந்தையின் இயக்கவியலை மிகப்பெரிய அளவில் பாதிக்கும். ரிலையன்ஸ் ஜியோ, ஏற்கனவே இந்தியாவில் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது, மற்றும் அதன் வளர்ச்சி மெதுவாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வரையறுக்கப்பட்ட தொலைபேசி

வரையறுக்கப்பட்ட தொலைபேசி

லாவா மற்றும் மைக்ரோமேக்ஸ் போன்ற நிறுவனங்கள் சமீபத்தில் அதன் 4ஜி திறன் கொண்ட தொலைபேசிகளை தொடங்கின. ஆனால், அந்த சாதனங்கள் ரூ.3,000/- மற்றும் அதற்கு மேலான விலை வரம்பில் விற்கப்படுகின்றன. ஜியோவின் 4ஜி வோல்ட் ஒரு 4ஜி வோல்ட் அம்சம் கொண்டு வரையறுக்கப்பட்ட தொலைபேசி என்பதையும் மற்றும் இது நுகர்வோருக்கான சிறந்த அனுபவத்தை வழங்காது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

Best Mobiles in India

English summary
Reliance Jio Rs 500 phone: From launch date to features, 5 things to expect from the 4G VoLTE feature phone. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X