Home
News

நாங்கள் இந்த திட்டத்தில் இலவச சலுகையை அறிவிக்கவில்லை: இப்படிக்கு ஜியோ.!

பொதுவாக பெரும் நிறுவனங்கள் சார்பில் அறிவிக்கப்படும் சலுகைகள் மற்றும் தள்ளுபடி போன்றவை அந்நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சார்பில் தற்சமயம் புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது, அது என்னவென்றால் ரூ.399 விலை சலுகையை இலவசமாக வழங்குவதாக வாட்ஸ்ஆப் செயலியில் குறுந்தகவல் வேகமாக பகிரப்படுகிறது.

நாங்கள் இந்த திட்டத்தில் இலவச சலுகையை அறிவிக்கவில்லை: இப்படிக்கு ஜியோ.

இவ்வாறு பகிரப்படும் வாட்ஸ்ஆப் குறுந்தகவல்களில் ரிலையன்ஸ் ஜியோ பெயர் பயன்படுத்தப்பட்டு அதில் ரூ.399 திட்டதில் பயனர்களுக்கு இலவசமாக பல சலுகை வழங்கப்படுகிறது என்றும், பின்பு ஐபிஎல் 2019 போட்டி தொடரில்
மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் இந்த சலுகை வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

20,000 ஜியோ பயனர்களுக்கு மட்டுமே

20,000 ஜியோ பயனர்களுக்கு மட்டுமே

குறிப்பாக இச்சலுகை 20,000 ஜியோ பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால்
உண்மை என்வென்றால் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.399 திட்டதில் இலவச சலுகையை வழங்கவில்லை. இதற்குமுன்பு ஜியோ நிறுவனத்தை வைத்து பல்வேறு ஊழல்கள் அரங்கேறி இருக்கின்றன. முன்னதாக ஜியோ மொபைல் டவர் ஊழல் மற்றும் ஜியோ டி.டி.ஹெச். இணைப்பு உள்ளிட்டவை சார்ந்து வெளியான போலி தகவல்களால் இந்தியா முழுக்க பலர் பாதிக்கப்பட்டன, அதேபோல் தற்சமயம் இந்த ஜியோ ரூ.399 திட்டதில் இலவச சலுகையை வழங்கியுள்ளதாக ஏமாற்றியுள்ளனர்.

வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப்

மேலும் வாட்ஸ்ஆப் செயலியில் வெளிவந்த போலி குறுந்தகவலின் படி பயனர் முதலில் தங்களது பெயர் மற்றும் ஜியோ மொபைல் நம்பரை பதிவிட வேண்டும். பின்பு மும்பை இந்தியன்ஸ் அணியின் பேனர் இடம்பெற்றிருக்கும் வலைப்பக்கம் ஒன்று திறக்கிறது. இந்த பக்கத்தில் குறுந்தகவலை வாட்ஸ்அப் செயலியில் பத்து பேருக்கு ஃபார்வேர்டு செய்யக் கோருகிறது. இவ்வாறு செய்யும் பட்சத்தில் பயனர் தங்களது விவரங்களை போலி தளத்திற்கு பறிக்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதை கவனத்தில் வைக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ வலைதளங்களில் அறிவிக்கப்படும்

அதிகாரப்பூர்வ வலைதளங்களில் அறிவிக்கப்படும்

பொதுவாக பெரும் நிறுவனங்கள் சார்பில் அறிவிக்கப்படும் சலுகைகள் மற்றும் தள்ளுபடி போன்றவை அந்நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி

பின்பு வாட்ஸ்ஆப் செயலியில் இதுபோன்று வரும் குறுந்தகவல்களை எதிர்கொள்ளும் போது சம்மந்தப்பட்ட நிறவனங்களின் வலைதளங்களில் சென்று சலுகை மற்றும் இதர விவரங்களை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு சந்தேகங்களை தெளிவுப்படுத்திக்
கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Reliance-Jio-Rs-399-recharge-IPL-offer-is-fake: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X