ஜியோ ரூ.399 போஸ்ட்பெய்டு திட்டம் தேர்வு செய்தால் ரூ.1597 மதிப்பிலான அட்டகாசமான நன்மை லாபம்..
இந்த வருடம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் Jio போஸ்ட்பெய்டு பிளஸ் திட்டம் என்ற பெயரில் மூன்று புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. Jio போஸ்ட்பெய்டு பிளஸ் திட்டத்தின் கீழ் அதிக நன்மையுடன் கிடைக்கும் மிகவும் மலிவான திட்டம் என்றால் அது ரூ. 399 திட்டம் தான். இந்த திட்டத்தை நீங்கள் தேர்வு செய்தால் உங்களுக்கு மொத்தமாக ரூ.1597 மதிப்பிலான சேவைகள் இலவசமாகக் கிடைக்கிறது. அவை என்ன என்பதை விளக்கமாகப் பார்க்கலாம்.

200 ஜிபி டேட்டா ரோல் ஓவர் நன்மை
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த போஸ்ட்பெய்டு பிளஸ் திட்டங்கள், இந்தியாவினுள் எந்த நெட்வொர்க்குடனும் அழைப்பு மேற்கொள்ளும் வசதியுடன் FUP இல்லாத வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையை வழங்குகிறது. இத்துடன் 200 ஜிபி டேட்டா ரோல் ஓவர் நன்மை, ஃபேமிலி ஆட் ஆன்ஸ் மற்றும் நெட்பிலிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் போன்ற OTT சந்தாக்களும் இத்துடன் கிடைக்கிறது. இன்னும் பட்டியலில் சில நன்மைகளும் உள்ளது அதைத் விரிவாக பார்க்கலாம்.

ரூ. 399 திட்டத்திலும் பாதுகாப்பு வைப்பு கட்டணம்
Jio போஸ்ட்பெய்டு பிளஸ் திட்டத்தின் பிரீமியம் திட்டமான ரூ. 1,499 பற்றி நாங்கள் சமீபத்தில் எழுதியது போல, ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டம் ரூ. 399 திட்டத்திலும் பாதுகாப்பு வைப்பு கட்டணம் உள்ளது என்பதை மறக்கவேண்டாம். இத்திட்டத்தின் அனைத்து நன்மைகளையும் இப்போது விரிவாக தெரிந்துகொள்ளலாம். இத்திட்டம் போஸ்ட்பெய்டு பயனர்களுக்கு FUP எல்லை இல்லாத வரம்பற்ற குரல் அழைப்பு சேவையை வழங்குகிறது.

ரூ. 399 திட்டத்தின் முழு நன்மை விபரம்
இத்திட்டம் மாதத்திற்கு 75 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இத்துடன் 200 ஜிபி வரையிலான டேட்டா ரோல் ஓவர் வசதியையும் வழங்கி, தினமும் 100 SMS நன்மையையும் வழங்குகிறது. தெரியாதவர்களுக்கு, இத்திட்டத்தின் கீழ் ஜியோ வழங்கும் டேட்டா நிறைவடைந்ததும் ஒவ்வொரு 1 ஜிபி டேட்டா பயனுக்கும் ரூ. 10 வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் நம்பமுடியாத வகையில் மூன்று OTT சந்தாக்களின் கூடுதல் நன்மையும் உங்களுக்குக் கிடைக்கிறது.

நம்ப முடியாத OTT சந்தாக்களின் கூடுதல் நன்மை
இந்த ரூ. 399 போஸ்ட்பெய்ட் திட்டத்துடன் மட்டும் ஜியோவின் ஃபேமிலி ஆட் ஆன்ஸ் நன்மை வழங்கப்படவில்லை. இருப்பினும், OTT சந்தாக்களின் கூடுதல் நன்மை இருக்கிறது. இத்திட்டத்தைத் தேர்வு செய்யும் பயனர்களுக்கு நெட்ஃபிக்ஸ் மொபைல் சாந்த இலவசமாகக் கிடைக்கிறது. இத்துடன் ஒரு வருட இலவச அமேசான் பிரைம் சந்தா மற்றும் இலவச டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி உறுப்பினர் சந்தாவும் கிடைக்கிறது.

இத்துடன் இந்த இலவச நன்மையும் இருக்கிறதா?
மூன்றாம் தரப்பு OTT பயன்பாடுகளுடன், ஜியோவின் சொந்த OTT பயன்பாடுகளான JioTV மற்றும் JioCinema சந்தாவும் ரூ.399 திட்டத்துடன் இலவசமாகக் கிடைக்கிறது. இந்த திட்டத்துடன் திருப்பப் பெறக்கூடிய பாதுகாப்பு வைப்புத்தொகையாக ரூ.500 வசூலிக்கப்படுகிறது.

1597 ரூபாய்க்கு மேல் லாபம்
கூடுதலாக, புதிய பயனர்கள் ஜியோ பிரைம் சந்தா சலுகைகளுக்கு ரூ. 99 செலுத்த வேண்டும். இருப்பினும், இத்திட்டம் உங்களுக்கு 1597 ரூபாய்க்கு மேலான சேவைகளை இலவசமாக வழங்குகிறது.
ரூ. 1597 மதிப்பிலான சேவைகள் என்ன என்பதன் விளக்கம், நெட்ஃபிக்ஸ் மொபைல் திட்டத்திற்கு மட்டும் மாதத்திற்கு ரூ. 199 செலவாகும்.

செலவைவிட நன்மை மட்டுமே அதிகம்
மேலும் பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் நெட்ஃபிக்ஸ் உள்ளடக்கத்தைக் கூடுதல் செலவில்லாமல் பார்க்க அனுமதிக்கிறது. ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் உறுப்பினர் சாந்தாவின் விலை ரூ .999 ஆகும். டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி ஒரு வருட சந்தாவின் விலை ரூ .399 ஆகும். எப்படி பார்த்தாலும் இந்த திட்டத்துடன் உங்களுக்கு செலவைவிட நன்மை மட்டுமே அதிகம் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications