Home
News

Jio பயனர்களுக்கு 1 வருடத்திற்கு 1 முறை மட்டும் ரீசார்ஜ்.! பெஸ்டான 1 வருட திட்டம் இது தான்.!

இந்தியாவின் நம்பர் ஒன் டெலிகாம் ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோ, அதன் பயனர்களுக்கு வருடாந்திர அல்லது நீண்ட கால செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்கி வருகிறது. இந்த திட்டங்களின் ஆகச்சிறந்த சிறப்பே, இவற்றை நீங்கள் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் ரீசார்ஜ் செய்தால் போதும். 365 நாட்களுக்கு ரீசார்ஜ் பற்றிய நினைப்பே இல்லாமல் ஜாலியாக மொபைல் சேவையை பயன்படுத்தலாம். உங்களுக்காக Jio-வில் கிடைக்கும் பெஸ்ட் 1 வருடத் திட்டங்களை இங்குப் பட்டியலிட்டுள்ளோம்.

1 வருட வேலிடிட்டி உடன் கிடைக்கும் ரீசார்ஜ் திட்டங்கள்

1 வருட வேலிடிட்டி உடன் கிடைக்கும் ரீசார்ஜ் திட்டங்கள்

ஜியோ மூன்று திட்டங்களை நீண்ட கால செல்லுபடி உடன் வழங்குகிறது. இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், 2 ரீசார்ஜ் திட்டங்கள் 365 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது. மற்றொரு திட்டம் 11 மாதம் செல்லுபடியாகும் வகையில் வெறும் 336 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த 3 ரீசார்ஜ் திட்டங்களும் நீண்ட கால திட்டம் என்பதனால் இதன் விலை ரூ. 3000-க்கு கீழ் இருக்கும். இந்த திட்டங்கள் அனைத்துமே சிறந்த நன்மைகளை வழங்குகிறது.

3 ரீசார்ஜ் திட்டங்களுக்கு இடையில் என்ன வித்தியாசம்?

3 ரீசார்ஜ் திட்டங்களுக்கு இடையில் என்ன வித்தியாசம்?

இந்த 3 ரீசார்ஜ் திட்டங்களுக்கு இடையில் விலை வேறுபாடு மிகவும் குறைவாகவே இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. முன்பே சொன்னது போல், இந்த ரீசார்ஜ் திட்டத்தில், சில வருடாந்த வேலிடிட்டியுடன் வருகின்றன. அதே சமயம் ஒன்று மட்டும் தோராயமாக 11 மாத வேலிடிட்டியுடன் வருகிறது. இந்தத் திட்டங்கள் அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு டேட்டா மற்றும் குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகின்றன.

ஜியோ ரூ. 2545 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்

ஜியோ ரூ. 2545 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்

இந்த ரீசார்ஜ் திட்டம் தான் 11 மாத வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டம் சரியாக 336 நாள் செல்லுபடியுடன் வருகிறது. இந்த திட்டம், அதன் பயனர்களுக்குத் தினமும் 1.5 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த ரீசார்ஜ் திட்டம் தினமும் 100 ஸ்ம்ஸ் நன்மை மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மையை வழங்குகிறது. இது தவிர, கூடுதல் நன்மைகளாக இதில் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud போன்ற நன்மைகளும் கிடைக்கிறது.

ஜியோ ரூ. 2897 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ. 2897 ப்ரீபெய்ட் திட்டம்

இந்த திட்டம் 365 நாட்கள், அதாவது 1 முழு வருட வேலிடிட்டியை வழங்குகிறது. இந்த திட்டம் அதன் செல்லுபடியாகும் காலத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் அதன் பயனர்களுக்கு தினமும் 100 SMS நன்மையை வழங்குவதோடு, அன்லிமிடெட் அழைப்பு நன்மையையும் வழங்குகிறது. இத்துடன் கூடுதல், நன்மைகளாக JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud போன்ற நன்மைகளும் கிடைக்கிறது.

ஜியோ ரூ. 2999 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ. 2999 ப்ரீபெய்ட் திட்டம்

இருப்பதிலேயே, மிகச் சிறந்த திட்டம் என்றால், அது இந்த ரூ.2999 ரீசார்ஜ் திட்டம் தான். இந்த திட்டம் உங்களுக்கு 365 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டம் தினமும் 2.5ஜிபி டேட்டாவை ஒரு வருடம் முழுக்க தடையின்றி வழங்குகிறது. இந்த திட்டம் அன்லிமிடெட் அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 SMS நன்மை போன்றவற்றை வழங்குகிறது. இதில் கூடுதல் நன்மைகள் அதிகமாக இருக்கிறது.

இந்த ரீசார்ஜ் திட்டங்களில் எது பெஸ்ட்?

இந்த ரீசார்ஜ் திட்டங்களில் எது பெஸ்ட்?

இந்த திட்டம் Disney+ Hotstar, JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud 75GB போனஸ் டேட்டா மற்றும் Ajio, Netmeds Ixigo, Reliance Digital மற்றும் JioSaavn Pro போன்ற நன்மையுடன் வருகிறது. இத்திட்டத்துடன் சேர்க்கப்பட்டுள்ள டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா ஆண்டுக்கு ரூ.499 செலவாகும். இது ஒரு மொபைல் சந்தா என்பதை நினைவில் கொள்ளவும். ரூ.2897 மற்றும் ரூ.2999 திட்டங்களுக்கு இடையே அதிக விலை வித்தியாசம் இல்லை. நீங்கள் ரூ.2897 திட்டத்திற்குச் செல்ல நினைத்தால் ரூ.2999 சிறந்த தேர்வாகும்.

Best Mobiles in India

English summary
Reliance Jio Rs 2999, Rs 2897 and Rs 2545 Plans Under Rs 3000 Comes With 1 Year Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X