அம்பானி போட்டப்போடு.. மாசம் ரூ.158 போதும்.. 12 மாசத்துக்கு ஒரே ரீசார்ஜ்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 24 ஜிபி டேட்டா!
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) அடிமட்ட விலைக்கு திட்டங்களை கொடுப்பது மட்டுமல்லாமல், அதை 4ஜி வேகத்தில் வழங்கி வருகிறது. இப்போது, மாதத்துக்கு வெறும் ரூ.158 செலவில் 12 மாதங்களுக்கான வேலிடிட்டியை கொடுப்பது மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), லம்ப்-சம் டேட்டா (Lump-sum data), எஸ்எம்எஸ் (SMS) மற்றும் ஓடிடி (OTT) சலுகைகளை வழங்கி ஜியோ கஸ்டமர்களை (Jio Customers) அறக்க பறக்க செய்துள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் (Prepaid Plan) சலுகைகளை பார்ப்போம்.
டெலிகாம் நிறுவனங்களில் வேலிடிட்டி அதிகமாக கொடுக்கப்படும் திட்டங்களின் மாதாந்திர செலவானது மிகவும் கம்மியாகவே இருக்கும். அதாவது, நீங்கள் மாதத்துக்கு ரீசார்ஜ் செய்வதைவிட வருடத்துக்கு ரீசார்ஜ் செய்தால், தொகையில் மாற்றம் இருக்கும். அதிலும், வாய்ஸ் கால்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் திட்டங்கள் அடிமட்ட விலைக்கே கொடுக்கப்படும்.

இப்போது, பார்க்கப்போகும் திட்டமும் அப்படித்தான். வெறும் வாய்ஸ் கால்களுக்கு மட்டுமல்லாமல், சிம் கார்டு ஆக்டிவையும் வருடம் முழுவதும் அடிமட்ட விலைக்கு கொடுக்கிறது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 28 நாட்கள் வீதம் 12 மாதங்களுக்கும் வாய்ஸ் கால்கள் சலுகை கொடுக்கப்படும். அதேபோல டேட்டாவும், எஸ்எம்எஸ் சலுகைகளும் கிடைக்கும்.
ரிலையன்ஸ் ஜியோ ரூ 1899 திட்டம் சலுகைகள் (Reliance Jio Rs 1899 Plan Offers): ஜியோ வேல்யூ திட்டங்களில் (Jio Value Plans) இது வருடாந்திர திட்டம் கிடைக்கிறது. அதாவது, 336 நாட்களுக்கு சலுகைகளை பெற்று கொள்ள முடியும். இந்த நாட்களில் டேட்டா சலுகை மட்டும் குறைவாக இருக்கும். அதாவது, 336 நாட்களுக்கும் 24 ஜிபி லம்ப்-சம் டேட்டா சலுகை மட்டுமே கிடைக்கும்.
இந்த 24 ஜிபி டேட்டாவை வேலிடிட்டி நாட்களுக்கு முன்பே பயன்படுத்தி விட்டாலும், ஜியோ கஸ்டமர்களுக்கு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை கொடுக்கப்படும். இந்த லம்ப்-சம் டேட்டாவை போலவே எஸ்எம்எஸ் சலுகையும் மொத்தமாகவே கிடைக்கிறது. 3600 எஸ்எம்எஸ்கள் செய்து கொள்ள கிடைக்கும். இதை தேவைக்கு ஏற்ப அனுப்பி கொள்ளலாம்.
இந்த மலிவு விலை வருடாந்திர திட்டத்தில் வாய்ஸ் கால்களுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் கிடையாது. அதாவது, 336 நாட்களிலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ள முடியும். அதேபோல 336 நாட்களுக்கும் சிம் கார்டு ஆக்டிவாக இருக்கும். அதுவும் அடிமட்ட விலைக்கு பெற்று கொள்ளலாம்.
இந்த சலுகைகளே விலைக்கு ஏற்ப இருந்தாலும், கூடுதலாக பல்வேறு சலுகைகளை இந்த திட்டம் கொடுக்கிறது. அதாவது, ஜியோ கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும், ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ சினிமா (Jio Cinema) ஆகிய ஆப்களின் சந்தாவையும் வருடம் முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு ரூ.1899 விலையென்றாலும், மாத செலவு வெறும் ரூ.158ஆக இருக்கிறது.
ஆகவே, இது நீண்ட கால வேலிடிட்டியில் நல்ல லாபத்தை தரக்கூடியாத திட்டமாகவே பார்க்கப்படுகிறது. இதேபோல மாதத்துக்கு கிடைக்கும் வேல்யூ திட்டம் வேண்டுமானால், ரூ.189 மதிப்பில் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டத்துக்கு கஸ்டமர்கள் செல்லலாம். இந்த திட்டத்திலும் மலிவான விலைக்கு டேட்டா குறைவாகும், வாய்ஸ் கால்கள் சலுகை அதிகமாகவும் கிடைக்கிறது.
இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்கள் கிடைக்கிறது. அதேபோல ரோமிங் வாய்ஸ் கால்களையும் செய்து கொள்ளலாம். 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. 300 எஸ்எம்எஸ் சலுகை வருகிறது. மேலும் ஜியோ ஆப்களின் சந்தா கொடுக்கிறது. 28 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படும்.


Click it and Unblock the Notifications