Home
News

Jio SIM காட்டில் மழை.. 336 நாட்களுக்கு ரூ.145 மாத செலவுல வாய்ஸ் ஒன்லி திட்டம்.. அன்லிமிடெட் வாய்ஸ், எஸ்எம்எஸ்!

வருகிற அக்டோபர் 21ஆம் தேதிக்குள் 28 நாட்கள், 30 நாட்கள் அல்லது மாதாந்திர வேலிடிட்டி கொண்ட வாய்ஸ் ஒன்லி திட்டங்களை கொடுக்க ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இதில் ஏர்டெல், முதல் நிறுவனமாக 28 நாட்கள், 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட வாய்ஸ் ஒன்லி திட்டங்களை (Voice Only Plan) கொடுத்துவிட்டது.

ஆனால், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா இன்றளவும் கொடுக்கவில்லை. அக்டோபர் 21ஆம் தேதிக்குள் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால், 28 நாட்கள் வேலிடிட்டியுடன் ரூ.185 விலைக்கு ஏர்டெல் நிறுவனம் வாய்ஸ் ஒன்லி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஆனால், ஏற்கனவே அதே 28 நாட்கள் வேலிடிட்டியை ஜியோ ரூ.189 விலைக்கு கொடுக்கிறது.

Jio SIM காட்டில் மழை.. 336 நாட்களுக்கு ரூ.145 மாத செலவுல வாய்ஸ் ஒன்லி!

இதில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மட்டுமல்லாமல், 2 ஜிபி டேட்டாவும் கிடைக்கிறது. இருப்பினும், வாய்ஸ் ஒன்லி திட்டத்தை பெற வேண்டுமானால், ரூ.448 விலைக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இதில் 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. அதேபோல மாதத்துக்கு ரூ.145 செலவில் கிடைக்கும் ரூ.1748 திட்டத்தில் 336 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.1748 ப்ரீபெய்ட் திட்டம் (Reliance Jio Rs 1748 Prepaid Plan): இந்த வாய்ஸ் ஒன்லி திட்டத்துக்கு 336 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். அதாவது, 28 நாட்கள் கணக்கில் 12 மாதங்கள் வேலிடிட்டி கொடுக்கப்படும். ஆகவே, ஒரு 28 நாட்களுக்கு செலவாகும் தொகையை கணக்கிட்டால், ரூ.145 மட்டுமே கஸ்டமர்களுக்கு தேவைப்படுகிறது.

ஆகவே, ஜியோ நிறுவனமானது, 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கொடுக்கும் வாய்ஸ் ஒன்லி திட்டத்தை அறிமுகம் செய்யும்பட்சத்தில் அதன் விலை ரூ.150 முதல் ரூ.160 வரையில் மட்டுமே இருக்க வாய்ப்புள்ளது. இப்போது, ரிலையன்ஸ் ஜியோ ரூ.1748 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் சலுகையை பார்க்கலாம். இதில் 3600 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.

வேலிடிட்டி கிடைக்கும் நாட்கள் வரையில் அன்லிமிடெட் லோக்கல் (Unimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Calls) செய்து கொள்ளலாம். ஜியோடிவி (JioTV) சந்தா மற்றும் ஜியோஏஐகிளவுட் (JioAICloud) சலுகை கிடைக்கும். இருப்பினும், இதில் ப்ரீமியம் சலுகைகள் கிடைக்காது. இப்போது, 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட வாய்ஸ் ஒன்லி திட்டத்துக்கு செல்லலாம்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.448 ப்ரீபெய்ட் திட்டம் (Reliance Jio Rs 448 Prepaid Plan): இந்த வாய்ஸ் ஒன்லி திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். அதாவது, 28 நாட்கள் வீதம் 3 மாதங்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படும். இந்த நாட்களில் முந்தைய திட்டத்தில் பார்த்த அதே சலுகைகள் கிடைக்கும். எஸ்எம்எஸ்கள் மட்டும், 1000 ஆக கிடைக்கும்.

மற்றபடி அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்யலாம். ஜியோடிவி (JioTV) சந்தா மற்றும் ஜியோஏஐகிளவுட் (JioAICloud) ஆப்களில் ப்ரீ வெர்ஷனை பயன்படுத்தி கொள்ளலாம். இப்போதைக்கு இந்த 2 திட்டங்கள் மட்டுமே வாய்ஸ் ஒன்லி பேக்கின் கீழ் கிடைக்கின்றன. கம்மியான வேலிடிட்டியில் ஓரிரு நாட்களில் புதிய திட்டங்கள் வரலாம்.

Best Mobiles in India

English summary
Reliance Jio Rs 1748 Prepaid Plan Comes With 336 Days Validity Unlimited Voice Calling And 3600 SMS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X