ஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா! இது தெரியாம போச்சே இத்தனை நாளா!
தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களின் ப்ரீபெய்ட் போர்ட்ஃபோலியோக்களை நீங்கள் பார்த்தால், அவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று நிறைய ஒற்றுமையுடன் ஒத்திருக்கும். இருப்பினும், எல்லா தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களிடையேயும், ஒரு சில நிறுவனங்கள் மட்டும் சற்று வித்தியாசமாக இருக்கும் அப்படியான நிறுவனம் தான் ரிலையன்ஸ் ஜியோ.

இலவசம் இனி கிடையாது என்று முன்பு கூறப்பட்டது
தொலைத்தொடர்பு நிறுவனங்கள், கடந்த டிசம்பர் மாதம் தங்கள் சேவைக்கான புதிய விலை உயர்வு பட்டியலை வெளியிட்டது. முன்னதாகவே முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இனிமேல் மற்ற நெட்வொர்க் அழைப்புகள் இலவசம் கிடையாது என்று அறிவித்து, நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் கட்டாயம் வசூலிக்கப்படும் என்று கூறி வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஐயூசி நிமிட ரீசார்ஜ் திட்டங்கள்
தீடிர் கட்டண உயர்வினால் ஜியோ பயனர்கள் கடுப்பாகினர், அவர்களைச் சமாளிக்க ஜியோ நிறுவனத்தின் ஐயூசி அழைப்பு நிமிடங்களுக்கான ரீசார்ஜ் திட்டங்களை நிறுவனம் அறிமுகம் செய்தது. புதிய விலை நிர்ணய திட்டங்களில் இலவச ஐயூசி அழைப்பு நிமிடங்களையும் ஜியோ வழங்கியது என்று நமக்கு தெரியும், இதனால் முன்னதாக அறிவிக்கப்பட்ட ஐயூசி நிமிட ரீசார்ஜ் திட்டங்களை அனைவரும் மறந்துவிட்டனர்.

ஜியோவின் ரூ.10 ரீசார்ஜ் திட்டம்
ஜியோ விலை உயர்வுக்கு முன்பு அறிமுகம் செய்த ஐயூசி நிமிட ரீசார்ஜ் திட்டங்களில் மிக முக்கியமான திட்டம் ஜியோவின் ரூ.10 ரீசார்ஜ் திட்டம் தான். இந்த திட்டத்தில் பயனர்களுக்கு மறைமுகமாக இலவச டேட்டாவை ஜியோ நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த ரூ.10 ரீசார்ஜ் திட்டத்தின் படி ரூ.10 மதிப்புள்ள ஐ.யூ.சி பேச்சு நேரத்தை மட்டுமல்லாமல் 1 ஜிபி அளவிலான டேட்டாவையும் ஜியோ வழங்குகிறது.

ரூ.11 விலையில் கிடைக்கும் டேட்டா வவுச்சர்
ஜியோ வழங்கும் FUP வரம்புகளைத் தாண்டிய பின், மீண்டும் டேட்டா சேவையைப் பயன்படுத்த விரும்பும் பயனர்களில் பெரும்பாலான பயனர்களுக்கு ரூ.11 விலையில் கிடைக்கும் டேட்டா வவுச்சர்களை மட்டுமே தெரிந்திருக்கும்.

400எம்பி மட்டுமே வழங்கப்படுகிறது
இந்த திட்டத்தின் படி தினசரி டேட்டா தீரும் நேரத்தில் 400எம்பி அளவிலான கூடுதல் டேட்டா ஜியோ வழங்குகிறது. இதில் ஐ.யூ.சி பேச்சு நேரம் வழங்கப்படாமல் வெறும் டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா
ஆனால் ஜியோவின் ரூ.10 ஐ.யூ.சி ரீசார்ஜ் திட்டத்தில் பயனர்களுக்கு மறைமுகமாக 1 ஜிபி இலவச டேட்டாவுடன் ரூ.10 மதிப்புள்ள ஐ.யூ.சி பேச்சு நேரத்தையும் ஜியோ வழங்கியுள்ளது. இனிமேல் ஜியோ பயனர்களுக்கு கூடுதல் டேட்டா தேவைப்பட்டால் இந்த ரூ.10 திட்டத்தை பயன்படுத்தி மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டாவை பயன்படுத்திக்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








