Home
News

அதே ரூ.123 ரீசார்ஜ் ஆனால்? TRAI போட்ட உத்தரவு.. ஜியோபோன் பயனர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிரந்தர மாற்றம்!

டிராய் (TRAI) என்கிற இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (Telecom Regulatory Authority of India) உத்தரவை தொடர்ந்து, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது தனது ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கான ஜியோ போன் பிளான்கள் (JioPhone Plans) மற்றும் ஜியோபோன் ப்ரைமா பிளான்களின் (JioPhone Prima Plans) "பெயர்களை" நீக்கி, மாற்றி உள்ளது.

தற்போது ஜியோ இணையதளத்தில் 4ஜி ஃபீச்சர் போன் பிளான்கள்" (4G Feature Phone Plans) மற்றும் "4ஜி ஃபீச்சர்ஃபோன் ஆட்-ஆன்கள்" (4G Feature Phone Add-ons.) என்கிற பெயர்களின் கீழ் கிடைக்கும் திட்டங்களை மட்டுமே பார்க்க முடிகிறது.

ஜியோபோன் பயனர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிரந்தர மாற்றம்!

சந்தை பங்கின் அடிப்படையில், நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோவிடம், வெளிப்படைத்தன்மை இல்லாததாகவும், பாகுபாடு காட்டுவதாக சுட்டிக்காட்டப்பட்ட சில கட்டண நடைமுறைகளை நிறுத்துமாறும், டிராய் (TRAI) உத்தரவிட்டதாக வந்த செய்திகளை தொடர்ந்து இந்த மாற்றம் நிகழ்ந்து இருக்கலாம் என்று டெலிகாம்டால்க் (Telecom Talk) வலைதளத்தின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது.

ஜியோவிற்கு டிராய் வழங்கிய உத்தரவுகள்: ஏப்ரல் 2026-ல் வெளியான முந்தைய செய்திகளின்படி, தற்போது ஜியோபாரத் மற்றும் ஜியோஃபோன் பயனர்களுக்கு மட்டுமேயான, டிவைஸிற்கு ஏற்ற கட்டண திட்டங்களை மறுசீரமைத்து, அனைத்து டிவைஸ்களின் பயனர்களுக்கும் கிடைக்க செய்யுமாறு ஜியோவிற்கு டிராய் உத்தரவுகளை பிறப்பித்ததாக கூறப்படுகிறது.

டிராய் உத்தரவுகளுக்கு பதிலளிக்கும் விதமாகவே மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது, "4ஜி ஃபீச்சர் போன் பிளான்கள்" மற்றும் "4ஜி ஃபீச்சர் போன் ஆட்-ஆன்கள்" என்கிற புதிய பெயரிடல்களால் தெரியவருகிறது. அப்படியாக மே 1, 2026 நிலவரப்படி, ஜியோ வலைத்தளத்தில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் 4ஜி ஃபீச்சர் ஃபோன் திட்டங்கள் மற்றும் 4ஜி ஃபீச்சர் போன் ஆட்-ஆன் திட்டங்களின் விவரங்கள் இதோ:

1. ஜியோ ரூ.123 - 4ஜி ஃபீச்சர் ஃபோன் திட்டம் (முன்பு ஜியோபாரத் ஃபோன் திட்டம்)
முக்கிய நன்மைகள்: அன்லிமிடெட் வாய்ஸ், ஒரு நாளைக்கு 0.5ஜிபி (14ஜிபி), மற்றும் 300 எஸ்எம்எஸ். அதிவேக டேட்டா ஒதுக்கீட்டிற்கு பிறகு, 64 கேபிபிஸ் ஸ்பீடில் அன்லிமிடெட் டேட்டா.
வேலிடிட்டி: 28 நாட்கள்
சந்தாக்கள் மற்றும் நன்மைகள்: ஜியோசாவன், ஜியோடிவி,
ஒரு நாளுக்கான பயனுள்ள விலை: ரூ.4.40

2. ஜியோ ரூ.234 - 4ஜி ஃபீச்சர் ஃபோன் திட்டம் (முன்பு ஜியோபாரத் ஃபோன் திட்டம்)
முக்கிய நன்மைகள்: அன்லிமிடெட் வாய்ஸ், ஒரு நாளைக்கு 0.5ஜிபி (28 ஜிபி), மற்றும் 28 நாட்களுக்கு 300 எஸ்எம்எஸ்கள். அதிவேக டேட்டா ஒதுக்கீட்டிற்குப் பிறகு, 64 கேபிபிஸ்-ல் அன்லிமிடெட் டேட்டா.
வேலிடிட்டி: 56 நாட்கள்
சந்தாக்கள் மற்றும் பலன்கள்: ஜியோசாவன், ஜியோடிவி,
ஒரு நாளுக்கான பயனுள்ள விலை: ரூ.4.18

3. ஜியோ ரூ.369 - 4ஜி ஃபீச்சர் ஃபோன் திட்டம் (முன்பு ஜியோபாரத் ஃபோன் திட்டம்)
முக்கிய நன்மைகள்: அன்லிமிடெட் வாய்ஸ், ஒரு நாளைக்கு 0.5ஜிபி (42ஜிபி), மற்றும் 28 நாட்களுக்கு 300 எஸ்எம்எஸ். அதிவேக டேட்டா ஒதுக்கீட்டிற்கு பிறகு, 64 கேபிபிஎஸ்-ல் அன்லிமிடெட் டேட்டா.
வேலிடிட்டி: 84 நாட்கள்
சந்தாக்கள் மற்றும் பலன்கள்: ஜியோசாவன், ஜியோடிவி,
ஒரு நாளுக்கான பயனுள்ள விலை: ரூ.4.39

4. ஜியோ ரூ.1234 - 4ஜி ஃபீச்சர் ஃபோன் திட்டம் (முன்பு ஜியோபாரத் ஃபோன் திட்டம்)
முக்கிய பலன்கள்: அன்லிமிடெட் வாய்ஸ், ஒரு நாளைக்கு 0.5ஜிபி (168ஜிபி), மற்றும் 28 நாட்களுக்கு 300 எஸ்எம்எஸ். அதிவேக டேட்டா ஒதுக்கீட்டிற்கு பிறகு, 64 கேபிபிஎஸ் ஸ்பீடில் அன்லிமிடெட் டேட்டா.
வேலிடிட்டி: 336 நாட்கள்
சந்தாக்கள் மற்றும் பலன்கள்: ஜியோசாவன், ஜியோடிவி,
ஒரு நாளுக்கான பயனுள்ள விலை: ரூ.3.67

1. ஜியோ 4ஜி ஃபீச்சர் ஃபோன் ஆட்-ஆன் ரூ.26 பேக் (முன்பு ஜியோஃபோன் டேட்டா ஆட்-ஆன்)
முக்கிய நன்மைகள்: 2ஜிபி டேட்டா. அதிவேகப் பயன்பாட்டிற்கு பிறகு, 64 கேபிபிஸ் ஸ்பீடில் அன்லிமிடெட் டேட்டா.
வேலிடிட்டி: 28 நாட்கள்
ஒரு நாளுக்கான கட்டணம்: ரூ.0.93

2. ஜியோ 4ஜி ஃபீச்சர் ஃபோன் ஆட்-ஆன் ரூ.62 பேக் (முன்பு ஜியோஃபோன் டேட்டா ஆட்-ஆன்)
முக்கிய நன்மைகள்: 6ஜிபி டேட்டா. அதிவேகப் பயன்பாட்டிற்கு பிறகு, 64 கேபிபிஸ் ஸ்பீடில் அன்லிமிடெட் டேட்டா.
வேலிடிட்டி: 28 நாட்கள்
ஒரு நாளுக்கான விலை: ரூ.2.21

3. ஜியோ 4ஜி ஃபீச்சர் ஃபோன் ஆட்-ஆன் ரூ.86 பேக் (முன்பு ஜியோஃபோன் டேட்டா ஆட்-ஆன்)
முக்கிய நன்மைகள்: ஒரு நாளைக்கு 0.5ஜிபி. மொத்தம் 14ஜிபி டேட்டா. அதிவேக பயன்பாட்டிற்கு பிறகு, 64 கேபிபிஸ் ஸ்பீடில் அன்லிமிடெட் டேட்டா.
வேலிடிட்டி: 28 நாட்கள்
ஒரு நாளுக்கான விலை: ரூ.3.07

4. ஜியோ 4ஜி ஃபீச்சர் ஃபோன் ஆட்-ஆன் ரூ.122 பேக் (முன்பு ஜியோஃபோன் டேட்டா ஆட்-ஆன்)
முக்கிய நன்மைகள்: ஒரு நாளைக்கு 1ஜிபி. மொத்தம் 28ஜிபி டேட்டா. அதிவேக பயன்பாட்டிற்கு பிறகு, 64 கேபிபிஸ் ஸ்பீடில் அன்லிமிடெட் டேட்டா.
வேலிடிட்டி: 28 நாட்கள்
ஒரு நாளுக்கான விலை: ரூ.4.35

5. ஜியோ 4ஜி ஃபீச்சர் ஃபோன் ஆட்-ஆன் ரூ.182 பேக் (முன்பு ஜியோஃபோன் டேட்டா ஆட்-ஆன்)
முக்கிய நன்மைகள்: ஒரு நாளைக்கு 2ஜிபி. மொத்தம் 56ஜிபி டேட்டா. அதிவேக பயன்பாட்டிற்கு பிறகு, 64 கேபிபிஸ் ஸ்பீடில் அன்லிமிடெட் டேட்டா.
வேலிடிட்டி: 28 நாட்கள்
ஒரு நாளுக்கான விலை: ரூ.6.5

Best Mobiles in India

English summary
Reliance Jio renamed JioPhone Plans into 4G Feature Phone After TRAI Order What changed From May 1
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X