Jio-வில் இனி அந்த திட்டம் கிடையாது: அதிரடி அறவிப்பு-ஷாக் ஆகாதிங்க.,இதோ அட்டகாச புது திட்டம் அறிமுகம்

|

புத்தாண்டை வரவேற்கும் விதமாக அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ஆஃபர்கள் அறிவித்தது. இதில் ஜியோ எப்போதுமே தனித்து செயல்படும். அதன்படி 2020 ஆம் ஆண்டை முன்னிட்டு 2020 ரூபாய்க்கு திட்டத்தை அறிமுகம் செய்து ஜியோ அசத்தியது.

2020 ஆம் ஆண்டு ரீசார்ஜ் திட்டம்

2020 ஆம் ஆண்டு ரீசார்ஜ் திட்டம்

இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக ரூ.2020-க்கு ஜியோ திட்டம் ஒன்றை அறிமுகம் செய்தது. அதன்படி ரூ.2020 செலுத்தி 12 மாத சேவையை பெற்றுக் கொள்ளலாம். இதன்மூலம் வருடம் முழுவதும் இலவச கால், தினசரி 1.5 ஜிபி டேட்டா உள்ளிட்ட அனைத்தும் 365 நாட்களுக்கும் வழங்குயது. அதோடு வருடம் முழுவதும் இலவச மெசேஜ்கள் மற்றும் ஜியோ ஆப் சேவையும் இதில் வழங்கப்பட்டது. தற்போது இந்த சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ரிலையன்ஸ் ஜியோ ரூ.2,121 ப்ரீபெய்ட் திட்டம்

புதிய ரிலையன்ஸ் ஜியோ ரூ.2,121 ப்ரீபெய்ட் திட்டம்

ப்ரீபெய்ட் திட்டங்களைப் பொறுத்தவரை, ரிலையன்ஸ் ஜியோ எப்போதும் பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோனை விட முன்னிலையில் இருக்கிறது. ஆனால் ஜியோ திட்டங்களின் ஆஃப்-நெட் அழைப்புகள் FUP வரம்புடனே கிடைக்கின்றன. இந்த முறையானது ரூ .2,121 ப்ரீபெய்ட் திட்டத்திற்கும் பொருந்தும்.

உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா?., தத்தளிக்கும் மக்கள்உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா?., தத்தளிக்கும் மக்கள்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ .2,121 திட்டம்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ .2,121 திட்டம்

வரம்பற்ற ஜியோ முதல் ஜியோ குரல் அழைப்பு, 12,000 ஜியோ அல்லாத மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் அழைப்பு, ஒரு நாளைக்கு 1.5 ஜிபி தரவு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கும். இந்த திட்டமானது 336 நாட்களுக்கு செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

JioTV மற்றும் JioCinema ஆகியவையின் இலவச அணுகல்

JioTV மற்றும் JioCinema ஆகியவையின் இலவச அணுகல்

இதன்படி பார்த்தால் மொத்தமாக 504 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் வழக்கம் போல், இந்த திட்டம் JioTV மற்றும் JioCinema போன்ற பயன்பாடுகளுக்கு இலவச அணுகலை வழங்குகிறது. ஜியோ டிவி என்பது தற்போது 650 க்கும் மேற்பட்ட சேனல்களைக் கொண்ட ரிலையன்ஸ் ஜியோவின் லைவ் டிவி பயன்பாடாகும், அதேசமயம் ஜியோசினிமா பயன்பாடு சன் என்எக்ஸ்டி உள்ளிட்டவைகளின் அடக்கம் கொண்ட சேவையாகும்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவின் 1.5 ஜிபி தினசரி டேட்டா திட்டங்கள் ரூ.199 முதல் தொடங்குகின்றன. இந்த திட்டம் 28 நாட்களுக்கு மொத்தம் 42 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது, வரம்பற்ற ஜியோ - ஜியோ குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் மற்ற நெட்வொர்க்குகளுக்கான 1,000 FUP நிமிடங்கள் போன்ற சலுகைகளுடன் இந்த திட்டம் கிடைக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோவின் பிரபலமான ப்ரீபெய்ட் திட்டங்களில் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் மிக முக்கியமானது, தினமும் 1.5ஜிபி டேட்டா,வரம்பற்ற ஜியோ - ஜியோ குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் மற்ற நெட்வொர்க்கிற்கான 2,000 FUP நிமிடங்கள் என 56 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இத்திட்டத்தின் மூலம் பயனர்களுக்கு மொத்தமாக 84 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

Google Map-ஐ மிஞ்சிய டால்பின்: புயலில் சிக்கிய படகு.,ஏலே டோன்ட் வொரி பீ ஹேப்பி-கரை சேர்த்த டால்பின்Google Map-ஐ மிஞ்சிய டால்பின்: புயலில் சிக்கிய படகு.,ஏலே டோன்ட் வொரி பீ ஹேப்பி-கரை சேர்த்த டால்பின்

ரிலையன்ஸ் ஜியோ ரூ 555 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ 555 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ சில மாதங்களுக்கு முன்பு ஆல்-இன்-ஒன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் ரூ.555 திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தினமும் 1.5ஜிபி டேட்டா,வரம்பற்ற ஜியோ - ஜியோ குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் மற்ற நெட்வொர்க்கிற்கான 3,000 FUP நிமிடங்கள் என 84 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Reliance Jio Removes one Annual Plan but Introduces 336 Days Validity plans

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X