Home
News

முடிச்சு விட்ட Reliance Jio.. இனிமேல் அந்த சலுகை ப்ரீபெய்ட் திட்டங்களில் கிடைக்காது.. ஏன்?

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) சமீபத்தில் தனது ப்ரீபெய்ட் திட்டங்களில் ஜியோசினிமாவை (JioCinema) நீக்கியது. அதாவது ஜியோசினிமா டிஸ்னி+ ஹாட்ஸ்டாருடன் இணைந்து ஜியோஹாட்ஸ்டார்-ஆக உருவாகியுள்ளது. எனவே தேவையில்லாமல் தனியாக இருந்த ஜியோசினிமா தற்போது நீக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குறைவான பயனர்களே இந்த ஜியோசினிமா தளத்தைப் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் ஜியோசினிமா நீக்கப்பட்டுள்ளதால் சில பயனர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஜியோசினிமாவை நீக்கினாலும் ஜியோடிவி, ஜியோகிளவுட் போன்ற சலுகைகளை ப்ரீபெய்ட் திட்டங்களில் வழங்கி வருகிறது ஜியோ நிறுவனம். ஜியோ டிவி செயலி மூலம் பல்வேறு முக்கியமான ஓடிடி தளங்களை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சரி இப்போது ஜியோஹாட்ஸ்டார் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்க்கலாம்.

முடிச்சு விட்ட Reliance Jio.. இனிமேல் அந்த சலுகை கிடைக்காது.. ஏன்?

ஜியோ நிறுவனத்தின் ரூ.949 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 949 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த நீங்கள் ரூ.949 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா முடிந்தவுடன் 64கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்தலாம்.

84 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார்(JioHotstar) சந்தா வழங்குகிறது ஜியோ ரூ.949 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஜியோ திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோடிவி, ஜியோகிளவுட் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

ஜியோ ரூ 195 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 195 Prepaid Plan) ஆனது டேட்டா + ஓடிடி சலுகைகளை மட்டுமே கொடுக்கிறது. எனவே இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 15 ஜிபி டேட்டா மற்றும் 90 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. அதேபோல ஜியோஹாட்ஸ்டார் சந்தா 90 நாட்களுக்கு கிடைக்கிறது. வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகை வேண்டும் என்றால் வேறொரு திட்டத்தில் தான் ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஒருவேளை ஜியோஹாட்ஸ்டார் வேண்டாம் அமேசான் பிரைம் சந்தா வேண்டும் என நினைக்கும் பயனர்கள் ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.

ஜியோவின் ரூ.1029 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Jio Rs 1029 prepaid plan) ஆனது 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் லைட் (Amazon Prime Lite) சந்தாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் 84 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும்.

அதேபோல் தினமும் இந்த திட்டத்தில் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பதை கவனத்தில் கொள்க. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோவின் ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது.

மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோடிவி (JioTV), ஜியோ கிளவுட் ( JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.1029 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Reliance Jio removes JioCinema from mobile plans: Do you know why?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X