சத்தம் இல்லாம தூக்கிட்டாங்க! இனிமேல் இந்த Jio பிளானும் கிடைக்காது; முக்கிய நன்மை ஒன்றும் கிடைக்காது!

|

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் அதன் ப்ரீபெயிட் திட்டங்களின் தொகுப்பில் (Prepaid Recharge List) ஒரு முக்கிய மாற்றத்தை செய்துள்ளது. அதாவது ஒரு முக்கியமான ப்ரீபெயிட் ரீசார்ஜ்ஜை - சத்தம் போடாமல் - நீக்கி உள்ளது!

அதென்ன ரீசார்ஜ்? அது ஏன் நீக்கப்பட்டுள்ளது? அது என்னென்ன நன்மைகளை வழங்கியது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

2 மாதங்களில் 14 திட்டங்கள் நீக்கம்!

2 மாதங்களில் 14 திட்டங்கள் நீக்கம்!

உங்களில் சிலர் ஏற்கனவே அறிந்து இருக்கலாம். ஜியோ நிறுவனம் கடந்த அக்டோபரில் இருந்தே டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்கும் திட்டங்களை அகற்றத் தொடங்கியது.

கடந்த மாதம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்கிய 12 திட்டங்கள் - ஒரே நேரத்தில் - நீக்கப்பட்டது. அதன் பின்னர் ரூ 1,499 மற்றும் ரூ.4,199 என்கிற 2 ப்ரீபெய்ட் ரீசார்ஜ்களின் வழியாக மட்டுமே டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா அணுக கிடைத்தது. தற்போது அந்த இரண்டு திட்டங்களும் கூட நீக்கப்பட்டுள்ளது!

பங்கம் செய்த சிங்கத்தின் பிள்ளை.. Airtel யூசர்களே மனச கல் ஆக்கிக்கோங்க.. இல்ல Jio-க்கு மாறிடுங்க!பங்கம் செய்த சிங்கத்தின் பிள்ளை.. Airtel யூசர்களே மனச கல் ஆக்கிக்கோங்க.. இல்ல Jio-க்கு மாறிடுங்க!

இனி தேடினாலும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் கிடைக்காது!

இனி தேடினாலும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் கிடைக்காது!

கடந்த மாதம் நீக்கப்பட்ட டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் திட்டங்களின் பட்டியலில், ரூ.1499 மற்றும் ரூ.4,199 மதிப்பிலான ப்ரீபெய்ட் ரீசார்ஜ்களும் இணைந்துள்ளன.

இதன் மூலம் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்கி வந்த அனைத்து ரீசார்ஜ் திட்டங்களையும் ஜியோ நிறுவனம் கைவிட்டுள்ளது!

ரிலையன்ஸ் ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள ரீசார்ஜ் பட்டியலிலும் சரி, பேடிஎம் மற்றும் அமேசான் பே போன்ற மூன்றாம் தரப்பு ரீசார்ஜ் தளங்களிலும் சரி.. எங்குமே ரூ.1,499 மற்றும் ரூ.4,199 திட்டங்கள் காணப்படவில்லை!

ஜியோ ஏன் அனைத்து ஹாட்ஸ்டார் திட்டங்களையும் நீக்கியது?

ஜியோ ஏன் அனைத்து ஹாட்ஸ்டார் திட்டங்களையும் நீக்கியது?

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அனைத்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் திட்டங்களையும் ஏன் நீக்கியது என்கிற கேள்விக்கான சரியான பதில் இல்லை.

இருப்பினும், இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL 2023) அடுத்த சீசனை ஸ்ட்ரீம் செய்யும் உரிமை Disney+ Hotstar க்கு இல்லை என்பதாலும், அந்த உரிமை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் Viacom 18-க்கு கிடைத்து உள்ளதாலும் கூட, ஜியோ நிறுவனம் அதன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் திட்டங்களை தூக்கி எரிந்து இருக்கலாம்!

Google Pay, Paytm-இல் ஒளிந்து இருக்கும் தமிழர்களுக்கு மட்டுமான ஒரு அம்சம்! உடனே Settings-க்கு போங்க!Google Pay, Paytm-இல் ஒளிந்து இருக்கும் தமிழர்களுக்கு மட்டுமான ஒரு அம்சம்! உடனே Settings-க்கு போங்க!

ஏர்டெல், வோடாபோன் ஐடியாவும் இதை பின்பற்றுமா?

ஏர்டெல், வோடாபோன் ஐடியாவும் இதை பின்பற்றுமா?

தற்போது வரையிலாக - ஜியோ நிறுவனத்தின் போட்டியாளர்களான - ஏர்டெல் மற்றும் வி (வோடாஃபோன் ஐடியா) நிறுவனங்கள், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் நெட்பிளிக்ஸ் ஆகியவற்றிற்கான சந்தாக்களை தத்தம் ப்ரீபெய்ட் திட்டங்களின் வழியாக வழங்கி வருகின்றன.

வரும் நாட்களில் அதில் என்னென்ன மாற்றங்கள் நடக்கலாம் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை!

இனி ஜியோ பயனர்கள் என்ன செய்ய வேண்டும்?

இனி ஜியோ பயனர்கள் என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் ஒரு ப்ரீபெய்டு ரிலையன்ஸ் ஜியோ பயனராக இருந்தால், இப்போதைக்கு உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது. ஜியோவின் JioTV சந்தாவை மட்டுமே பயன்படுத்த வேண்டி இருக்கும்.

அதாவது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மூலம் மட்டுமே கிடைக்கும் ஸ்டார் இந்தியாவுக்குச் சொந்தமான சேனல்களை உங்களால் அணுக முடியாது. மாறாக JioTV ஆப் வழியாக அணுக கிடைக்கும் சேனல்களை மட்டுமே பார்க்க முடியும்.

ஒருவேளை நீங்களொரு போஸ்ட்பெய்ட் பயனர் என்றால், ரூ. 399 முதல் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் திட்டங்களின் வழியாக நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் வீடியோவிற்கான இலவச சந்தாக்களை பெறலாம்!

Best Mobiles in India

English summary
Reliance Jio removed all disney plus hotstar plans from its prepaid recharge list

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X