Home
News

இதுவும் போச்சா.. சத்தமின்றி மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டத்தை நீக்கிய Jio.. எந்த திட்டம்?

ஜியோ (jio) நிறுவனம் சமீபத்தில் அழைப்பு நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை விரும்பும் பயனர்களுக்கு புதிய திட்டங்களை கொண்டுவந்தது. ஆனால் தற்போது மலிவு விலையில் அதிக வேலிடிட்டி மற்றும் அழைப்பு நன்மைகளை வழங்கிய ஒரு மலிவு விலை திட்டத்தை நீக்கியுள்ளது ஜியோ. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது தற்போது ஜியோவின் ரூ.189 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 189 Plan) ரீசார்ஜ் செய்ய கிடைக்கவில்லை. குறிப்பாக ஜியோவின் ரூ 189 மதிப்பிலான வேல்யூ திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டது. இந்த நாட்கள் முழுவதும் சிம் ஆக்டிவ் மற்றும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) கால்களும் எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களும் (Roaming Voice Calls) கிடைத்தது. மேலும் இந்த திட்டத்தில் 2 ஜிபி டேட்டா லம்ப்-சம் முறையில் கொடுக்கப்பட்டது. இந்த டேட்டாவானது தினசரிக்கு கிடையாது 28 நாட்கள் முழுவதுக்கும் பொருந்தும்.

 சத்தமின்றி மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டத்தை நீக்கிய Jio..

ஆனால் தற்போது இந்த ஜியோ ரூ.189 ப்ரீபெய்ட் திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கவில்லை. இதனால் ஜியோ பயனர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆனாலும் சமீபத்தில் வாய்ஸ் ஒன்லி ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்தது ஜியோ நிறுவனம். இந்த புதிய திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இப்போது அந்த வாய்ஸ் ஒன்லி திட்டங்களைப் பார்க்கலாம்.

ஜியோ நிறுவனத்தின் ரூ 1748 ப்ரீபெய்ட் திட்டம் (Jio rs 1748 prepaid plan) அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஜியோ ரூ 1748 ப்ரீபெய்ட் திட்டத்தில் 3600 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர ஜியோடிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் ( JioCloud) போன்ற நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும். மேலும் ஜியோ ரூ 1748 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 336 நாட்கள் ஆகும்.

ஜியோ நிறுவனத்தின் ரூ 448 ப்ரீபெய்ட் திட்டம் (Jio rs 448 prepaid plan) ஆனது 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மை இந்த திட்டத்தில் உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்க

குறிப்பாக ஜியோ ரூ 448 ப்ரீபெய்ட் திட்டத்தில் 1000 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர ஜியோடிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் ( JioCloud)போன்ற நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும். அதேபோல் ஜியோ நிறுவனம் இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.2025 திட்டத்தை அறிமுகம் செய்தது. இப்போது ரூ.2025 திட்டத்தில் கிடைக்கும் நன்மைகளைப் பார்க்கலாம்.

 சத்தமின்றி மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டத்தை நீக்கிய Jio..

ஜியோ ரூ.2025 ப்ரீபெய்ட் திட்டம் (Jio rs 2025 prepaid plan) தினசரி 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. 200 நாட்கள் இந்த வேலிடிட்டி திட்டத்தில் கிடைக்கிறது. எனவே நீங்கள் இந்த ஜியோவின் ரூ.2025 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 500ஜிபி டேட்டா வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறையும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஜியோ ரூ.2025 ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) ஆகியவற்றை இந்த ஜியோ ரூ.2025 திட்டத்தில் பயன்படுத்திக்கொள்ள முடியும். பின்பு இந்த திட்டத்தை தேர்வு செய்தால் ஆன்லைன் ஷாப்பிங், ஃபுட் ஆர்டர், டிக்கெட் புக்கிங்கிங் போன்றவற்றில் குறிப்பிட்ட சலுகைகள் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Reliance Jio quietly Removes Rs 189 plan : check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X