ஜியோ ப்ரைம் திட்டத்தின் 120ஜிபி 'இலவச' தரவு : பெறுவது எப்படி.?
இது என்ன சலுகை.? இதன் நிஜமான நன்மைகள் என்னென்ன.? இதனை பெறுவது எப்படி.?
மார்ச் 31-ஆம் தேதியோடு இதுநாள் வரை ரிலையன்ஸ் ஜியோ இலவசமாக விலகி வந்த சேவைகளானது ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கட்டண சேவைகளாக ஜியோ ப்ரைம் சேவையின் கீழ் நாம் பெற முடியும். இன்னும் ஒரு வாரம் கூட முழுதாய் இல்லாத நிலையில் பெரும்பாலான ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப்பை பெறவில்லை.
இந்நிலையில் முதலில் ஜியோ நிறுவனம் முற்றிலும் இலவசமாக ரிலையன்ஸ் ஜியோ ப்ரைம் உறுப்பினராக இணைய வாடிக்கையாளர்களுக்கு ஒரு மறைமுகமாக ஏற்பாடு செய்து கொடுத்திருந்தது. இப்போது மீண்டும் மேலுமொரு சலுகையை வழங்கியுள்ளது. என்ன சலுகை வழங்கியுள்ளது.? அதன் நிஜமான நன்மைகள் என்னென்ன.? அதனை பெறுவது எப்படி.?

5ஜிபி மற்றும் 10ஜிபி இலவச டேட்டா
ரிலையன்ஸ் ஜியோ, ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற அதன் ரீசார்ஜ் சலுகையை அறிவித்துள்ளது. இதன் மூலம் ஜியோ பயனர்கள் ரூ.303/- திட்டத்தின் கீழ் 5ஜிபி இலவச டேட்டாவும் மற்றும் ரூ.499/- திட்டத்தின் கீழ் 10ஜிபி இலவச டேட்டாவையும் பெறலாம்.

மாதத்திற்கு 10ஜிபி வரை
ஆரம்பத்தில் இந்த வாய்ப்பு ஒரு மாதம் செல்லுபடியாகும் என்று கூறப்பட்டது, ஆனால் இப்போது ஒரு முழு ஆண்டு முழுவதும் மாதத்திற்கு 10ஜிபி வரையிலாக இலவச டேட்டாவை அனுபவிக்க ரிலையன்ஸ் ஜியோ அனுமதிப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

120ஜிபி இலவச தரவு பெறுவது எப்படி.?
ஜியோ ப்ரைம் உறுப்பினராக இணைந்த பின்னர் நீங்கள் உங்களின் எண்ணுக்கு ரீசார்ஜ் செய்ய முடியும். ரூ.303/- அல்லது ரூ.499/- என்ற ரீசார்ஜ் செய்ய 28 நாட்கள் செல்லுபடியாகும் ஒரு மாதம் இலவச தரவு பெறலாம். ஆனால் மற்ற ஜியோ ப்ரைம் திட்டங்கள் சிலவும் உள்ளன. அதாவது ரூ.3,636/- நீங்கள் ரீசார்ஜ் செய்ய 336 நாட்கள் (திறம்பட 11 மாதங்கள் அல்லது 12 ரீசார்ஜ் சுழற்சிகள்) செல்லுபடியாகும் 60ஜிபி அளவிலான தரவு கிடைக்கும்.

12 மாத கால சுழற்சி
இந்த ரீசார்ஜ் விருப்பத்தின் கீழ், ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் 5ஜிபி அளவிலான தரவை ஒவ்வொரு 28 நாட்களும் ஜியோ ப்ரைம் உறுப்பினர்களாக 28ஜிபிக்கு மேல் கிடைக்கும். இதேபோல், ரூ. 5988/- ரீசார்ஜ் செய்ய ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 10ஜிபி அளவிலான இலவச தேடாத பெறலாம். ஆக இவ்வாறாக 12 மாத கால சுழற்சியில் நீங்கள் மொத்தமாக 120ஜிபி அளவிலான இலவச டேட்டா பெறலாம்.

செல்லுபடியாகும் காலத்தை முடிவு
மேலும், நிறுவனம் ரீசார்ஜ் செல்லுபடியாகும் காலத்தை முடிவு செய்யவும் பயனர்களை அனுமதிக்கிறது. எடுத்துக்காட்டாக பயனர்கள் ரூ.2,944 ரீசார்ஜ் செய்து 6 மாத கால ரீசார்ஜ் சுழற்சியில் 10ஜிபி இலவச தரவு பெறலாம் அல்லது 5ஜிபி அளவிலான இலவச டேட்டாவை 9 மாத கால ரீசார்ஜ் சுழற்சிகளில் ரூ.2,727/-க்கும் பெறலாம்.

பெருக்கி கொள்ள வேண்டும்
அதாவது எளிமையாக கூறவேண்டுமென்றால் நீங்கள் ரீசார்ஜ் (ரூ.303 மற்றும் ரூ.499) செய்ய விரும்பும் மதிப்பை எத்தனை மாதத்திற்கு வேண்டுமோ பெருக்கி கொள்ள வேண்டும். இந்த ஜியோ வாய்ப்பை அதிகபட்சமாக 12 சுழற்சிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

மார்ச் 31-ஆம் தேதி வரை மட்டுமே
இந்த இலவச தரவுகாளான் உங்களின் ஒரு நாள் டேட்டா வரம்பு முடிந்ததும் உங்கள் கைகளுக்கு கிடைக்கும் மற்றும் இதை 28 நாள் காலம் முழுவதிலும் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். மற்றும் இந்த ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சலுகை மார்ச் 31-ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
ஜியோ ப்ரைம் : கோபத்தை கிளப்பும் புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்.!


Click it and Unblock the Notifications