மார்ச் 31-ல் காலாவதியாகும் ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப்; அடுத்தது என்ன.?

ரிலையன்ஸ் ஜியோவின் ப்ரைம் மெம்பர்ஷிப் சந்தாவானது, வருகிற மார்ச் 31-ஆம் தேதியுடன் காலாவதியாகிறது.

|

முதலில் மூன்று மாதங்கள் என்று தொடங்கி மொத்தம் ஆறு மாதங்களுக்கும் மேலாக, இலவச வாய்ஸ் மற்றும் டேட்டா சலுகைகளை வழங்கிய ரிலையன்ஸ் ஜியோவின் ப்ரைம் மெம்பர்ஷிப் சந்தாவானது, வருகிற மார்ச் 31-ஆம் தேதியுடன் காலாவதியாகிறது.

மார்ச் 31-ல் காலாவதியாகும் ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப்; அடுத்தது என்ன.?

இலவச சேவையில் இருந்து கட்டண சேவையாக மாறிய பின்னர், ஜியோ நிறுவனமா தானாக வீழ்ச்சியை சந்திக்குமென காத்திருந்த இதர டெலிகாம் நிறுவனங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஜியோ அதன் கட்டண சேவையை அறிவித்த பின்னர் தொலைதொடர்பு துறையில் ஒரு கட்டண புரட்சியே வெடித்தது. அன்று தொடங்கி இன்று வரை, நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டா மற்றும் வரம்பற்ற வாய்ஸ் நன்மைகள் என்பது தான் - ஒரு சராசரி திட்டத்தின் அடிப்படை தகுதியாகும் என்ற நிலை உருவானது.

என்னது கூடுதல் நன்மைகளை வழங்கியதா.? எப்படி.?

என்னது கூடுதல் நன்மைகளை வழங்கியதா.? எப்படி.?

ரிலையன்ஸ் ஜியோ சேவையின் ஒரு பகுதியாக, ரூ.99/- மதிப்பிலான ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப் அறிவிக்கப்பட்டதும், அது ஒரு வருட காலத்திற்க்கான ரீசார்ஜ் விருப்பங்கள் மற்றும் கூடுதல் நன்மைகளை வழங்க உதவியதும் நாம் அறிந்த ஒன்றே. என்னது கூடுதல் நன்மைகளை வழங்கியதா.? அதெப்படி என்று கேள்வி எழுகிறதா.?

ப்ரைம் மெம்பர்ஷிப் வழியாக நாம் இதுனால வரை அனுபவித்த நன்மைகளின் விவரங்கள்:

ப்ரைம் மெம்பர்ஷிப் வழியாக நாம் இதுனால வரை அனுபவித்த நன்மைகளின் விவரங்கள்:

- ஒரு நாளைக்கு ரூ.10 /- என்கிற விலையின்கீழ் இலவச வரம்பற்ற தரவு மற்றும் குரல் சேவைகள்.
- கூடுதல் தரவு மற்றும் செல்லுபடியாகும் காலத்தை நீடிக்கும் சிறப்பு ரீசார்ஜ் திட்டங்கள்.
- எந்த நெட்வொர்க் உடனாகவும் வோல்ட் அடிப்படையிலான ரோமிங் உட்பட இலவச வாய்ஸ் நன்மைகள்
- ஜியோ ஆப்ஸ்களுக்கான இலவச அணுகல்

மார்ச் 31-ஆம் தேதியன்று காலாவதியாகிறது.!

மார்ச் 31-ஆம் தேதியன்று காலாவதியாகிறது.!

கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த ஜியோ மெம்பர்ஷிப் ஆனது, வருகிற மார்ச் 31-ஆம் தேதியுடன் அதன் செல்லுபடியை முடித்து கொள்கிறது. இந்த காலாவதி சார்ந்த அறிவிப்பானது, ஜியோ வழியாக, மிக விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கக்கூடுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.99/- ஆனது ஒரு இலவச சேவையாக மாறும்?

ரூ.99/- ஆனது ஒரு இலவச சேவையாக மாறும்?

இந்த காலாவதி சார்ந்த உத்தியோகபூர்வமான அறிவிப்பு எதுவும் இல்லை என்றாலும் கூட, இது சார்ந்த நினைவூட்டல் அறிவிப்பு வெளியாகாத பட்சத்தில், நிறுவனத்தின் ஜியோ ப்ரைம் சந்தா என்கிற ஒரு விடயமே இல்லாமல் ஆக்கப்படும் அல்லது ஜியோ ப்ரைம் சந்தாவானது ஒரு இலவச சேவையாக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லிமிடெட் பீரியட் ஆபராகவே விளம்பரப்படுத்தப்பட்டது.!

லிமிடெட் பீரியட் ஆபராகவே விளம்பரப்படுத்தப்பட்டது.!

முதலில், ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப் ஆனது ஒரு லிமிடெட் பீரியட் ஆபராகவே விளம்பரப்படுத்தப்பட்டது. அதாவது குறிப்பிட்ட தேதிக்குள் ரூ.99/- ரீசார்ஜை செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. காலப்போக்கில், அதிகமான சந்தாதாரர்களைப் பெறும் நோக்கத்தின் கீழ் ப்ரைம் சந்தாவை பெறும் காலம் நீடிக்கப்பட்டு கொண்டே போனது.

How To Increase the Speed of your Laptop (TAMIL)
ரீசார்ஜை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.!

ரீசார்ஜை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.!

இப்போது, ​​ஜியோவின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில், ப்ரைம் மெம்பராக இல்லாத சந்தாதாரர்களுக்கு வழங்கும் சேவைகள் பற்றி எந்த குறிப்பும் இல்லை. ஆக, ரூ.99/- மதிப்புள்ள ஜியோ மெம்பர்ஷிப் சந்தாவானது மெல்ல மெல்ல மறைந்து போகும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதன் அர்த்தம் - மார்ச் 31-ஆம் தேதியன்று ஜியோ வாசிகள் ரூ.99/- என்கிற ஆண்டு சந்தாவிற்கான ரீசார்ஜை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

Best Mobiles in India

English summary
Reliance Jio Prime membership subscription to end on March 31: What next? Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X