Jio 251 Plan: ஜியோ வாடிக்கையாளர்களுக்கு தெரியாத ஒரு திட்டம்: 4ஜிபி வரை டேட்டா.! பட்ஜெட் விலை.!

|

ஜியோ நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சில மாதங்களுக்கு முன் குரல் அழைப்புகளுக்கு கட்டணம் கொண்டு வந்தது, இதற்கு மக்களிடையே கடும் எதிர்ப்பும் விமர்சனமும் தொடங்கியது. ஆனால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் இன்றுவரை குரல் அழைப்புகளுககு கட்டணம் வசூல் செய்யவில்லை.

ஜியோ நிறுவனம்

ஜியோ நிறுவனம்

இருந்தபோதிலும் கூட ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த திட்டங்களை சிறந்த வேகத்துடன் வழங்கி வருகிறது. உதாரணமாக ஜியோ நிறுவனம் அதன் ரூ.199-திட்டம் வழியாக 1.5ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. ஆனால் ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்கள் இதே நன்மைகளை வழங்க ரூ.249 என்கிற கட்டணத்தை வசூலிக்கின்றன.

ரூ.251-ப்ரீபெய்ட்

ரூ.251-ப்ரீபெய்ட்

ஆனால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் இலவச அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. ஜியோ நிறுவனம்மட்டும் குரல் அழைப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கின்றன. பெரும்பாலான ஜியோ பயனர்களுக்கு ரூ.251-ப்ரீபெய்ட்திட்டத்தை தெரியாது என்றே கூறலாம்.

பொங்கல் கிஃப்ட் விடுங்க மக்களே: இந்திய ரயில்வே அறிவித்த மிகப்பெரிய ஜாக்பாட் கிஃப்ட் பாருங்க.!பொங்கல் கிஃப்ட் விடுங்க மக்களே: இந்திய ரயில்வே அறிவித்த மிகப்பெரிய ஜாக்பாட் கிஃப்ட் பாருங்க.!

ரூ.251-ப்ரீபெய்ட் திட்டம்

இன்னும் தெளிவாக சொல்லவேண்டும் என்றால் ஜியோ நிறுவனத்தின் இந்த ரூ.251-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி2ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டத்தின் சிறப்புகள் என்னென்ன என்று தெளிவாகப் பார்ப்போம்.

கிரிக்கெட் பேக்

கிரிக்கெட் பேக்

ஜியோ நிறுவனத்திடம் 6ஜிபி வரையிலான கூடுதல் டேட்டா நன்மைகளை வழங்கும் பல டேட்டா ஒன்லி திட்டங்கள்உள்ளன. அதில் நீங்கள் கவனிக்கவேண்டிய ஒரு முக்கிய திட்டம் இந்த ரூ.251 திட்டம் ஆகும். இந்த திட்டத்தின்பெயர் கிரிக்கெட் பேக் என்று அழைக்கப்படகிறது.

சூரியனில் ஓம் சத்தம் கேட்கிறது: கிரண்பேடி வீடியோ ஆதாரம்., டுவிட்டரில் கிளம்பிய போர்சூரியனில் ஓம் சத்தம் கேட்கிறது: கிரண்பேடி வீடியோ ஆதாரம்., டுவிட்டரில் கிளம்பிய போர்

51நாட்கள்

51நாட்கள்

அதாவது இந்த ரூ.251 திட்டத்தில் பயனர்களுக்கு எந்த விதமான குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளும் வழங்கப்படவில்லை, அதற்கு பதிலாக இது டேட்டா மட்டுமே வழங்கும்.பயனர்கள் தங்களது தற்போதைய ஆக்டிவ் திட்டத்தின் டேட்டா நன்மைக்கு மேல் ஒரு நாளைக்கு 2ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 51நாட்கள் ஆகும். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் 1ஜிபி டேட்டாவை வெறும் ரூ.2.46-க்கு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கவனிக்க வேண்டியது

கவனிக்க வேண்டியது

முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஜியோவின் ரூ.399திட்டத்தில் உள்ளீர்கள் என்றுவைத்துக்கொள்வோம், உடன் நீங்கள் ரூ..251 டேட்டா வவுச்சரை ரீசார்ஜ் செய்கிறீர்கள் என்றால், 56 நாட்களுக்கு
செல்லுபடியாகும் ரூ.399திட்டத்தின் தினசரி 1.5ஜிபி அளவிலான டேட்டா + ரூ.251 ரீசார்ஜ் திட்டத்தின் 2ஜிபிதினசரி டேட்டா என மொத்தம் 3.5 அளவிலான தினசரி டேட்டாவை நீங்கள் அனுபவிக்கலாம். ஆனால் ரூ.251திட்டம் ஆனது 51நாட்கள் வேலிடிட்டி என்பதையும் ரூ.399 திட்டம் ஆனது 56நாட்களுக்கு நன்மைகளை வழங்கும்
என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். குறிப்பாக இந்த கூடுதல் டேட்டா நன்மையானது ஒவ்வொரு ரிலையன்ஸ்ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ்க்கும் பொருந்தும், குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் நீங்கள் தினசரி 2ஜிபி டேட்டாதிட்டத்தையும் ரூ.251-ஐயும் ரீசார்ஜ் செய்தால் தினசரி 4ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும்.

மைஜியோ

மைஜியோ

ஜியோ நிறுவனத்தின் ரூ.251 திட்டம் ஆனது ஒவ்வொரு ரிலையன்ஸ் ஜியோ பயனருக்குமான டேட்டா பேக் கிடைக்காது,இது முற்றிலும் அதிக அளவிலான டேட்டாவை பயன்படுத்தும் பயனர்களை கொண்ட திட்டமாகும்.ரூ.251-திட்டத்தில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், ஒரு பயனர் ஏற்கனவே இருக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தின் மேல் இந்த ரீசார்ஜை செய்தால், ரூ. 251 டேட்டா வவுச்சர் ஆனது வரிசைப்படுத்தப்பட்டு இருக்கும்.ஆகவே ஜியோ ப்ரீபெய்ட் பயனர்கள் மைஜியோ செயலிக்குள் சென்று மை வவுச்சர்கள் பகுதிக்குச் சென்று அதை
ஆக்டிவேட் செய்தல் வேண்டும்.

Best Mobiles in India

English summary
Reliance Jio Users Can Get 2GB Extra Daily Data at Rs 2.46 per GB : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X