Jio பயனர்கள் 3 மாதத்திற்கு எந்த கவலையும் இல்லாமல் என்ஜாய் செய்யச் சிறந்த திட்டம் இதுதான்!
ப்ரீபெய்ட் பயனர்களில் இரண்டு விதமான பயனர்கள் உண்டு, ஒரு வகையான பயனர்கள் குறைந்த விலையில் ஒவ்வொரு மாதமும் தங்களுக்கு பிடித்தமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களைத் தேர்வு செய்கின்றனர். இன்னொரு பிரிவை சேர்ந்த பயனர்கள் ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் அடுத்த 3 மாதத்திற்கு எந்த கவலையும் இல்லாமல் டேட்டா மற்றும் அழைப்பு நன்மையை அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.

மூன்று மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே ரீசார்ஜ்
இப்படி மூன்று மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே ரீசார்ஜ் செய்யும் பழக்கத்தை உடையவர் நீங்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கானது தான். ஜியோ நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் திட்டங்களில் அதிக நன்மையுடன் கிடைக்கக்கூடிய சிறப்பான 3 மாத ரீசார்ஜ் திட்டத்தை தன் வசம் வைத்துள்ளது. அதாவது 84 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியுடன் வரும் ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது. உங்களுக்கான சிறந்த திட்டம் எது என்று பார்க்கலாம்.

ஜியோ ரூ.555 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோவிலிருந்து நீங்கள் பெறக்கூடிய மலிவான 84 நாட்கள் செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் திட்டம் இதுவாகும். இத்திட்டம் தினமும் 1.5 ஜிபி டேட்டா நன்மையையும், வரம்பற்ற ஜியோ-டு-ஜியோ அழைப்பையும், ஜியோ-டு-ஜியோ அல்லாத அழைப்புக்கென்று மொத்தம் 3,000 FUP நிமிடங்களுடன், தினசரி 100 இலவச எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது. இத்துடன், ஜியோ பயன்பாடுகளுக்குமான இலவச சந்தாவும் கிடைக்கிறது.

ஜியோ ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோவிலிருந்து 84 நாட்கள் செல்லுபடியாகும் மற்றொரு திட்டம் இதுவாகும். தினமும் 1.5 ஜிபி டேட்டா போதாது என்பவர்களுக்கு இந்த ரூ.599 திட்டம் நல்ல சாய்ஸ். இத்திட்டத்தின் கீழ் தினமும் 2 ஜிபி டேட்டா நன்மை, வரம்பற்ற ஜியோ-டு-ஜியோ அழைப்பு, ஜியோ-டு-ஜியோ அல்லாத அழைப்புக்கு மொத்தமாக 3,000 FUP நிமிடங்கள் மற்றும் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் உடன் அனைத்து ஜியோ பயன்பாடுகளுக்குமான இலவச சந்தாவையும் ஜியோ வழங்குகிறது.

ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோவிலிருந்து 84 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கும் இறுதி திட்டம் இதுவாகும். ஜியோவின் மற்ற திட்டங்களுடன் ஒப்பிடுகையில் இதன் விலை சற்று அதிகம், ஆனால் இந்த திட்டத்தின் நன்மையோ அதற்கு ஏற்றார் போல அதிகம் தான்.

தினமும் 3 ஜிபி டேட்டா
ஜியோவின் ரூ.999 திட்டத்தின் கீழ் தினமும் 3 ஜிபி டேட்டா நன்மை, வரம்பற்ற ஜியோ-டு-ஜியோ அழைப்பு, ஜியோ-டு-ஜியோ அல்லாத அழைப்புக்கென்று மொத்தம் 3,000 FUP நிமிடங்கள் மற்றும் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் உடன் அனைத்து ஜியோ பயன்பாடுகளுக்குமான இலவச சந்தாவும் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications