1ஜிபி இல்ல தினமும் 2.5ஜிபி டேட்டா தராங்க.. அதுவும் கம்மி விலையில்.! அள்ளித்தரும் Jio.!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டியாக அசத்தலான திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஜியோ நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஜியோசினிமா ஆப்பிற்கு ஹாலிவுட் திரைப்படங்களை (Hollywood Movies) கொண்டு வருவதற்காக வயாகாம்18 நிறுவனமானது வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி (Warner Bros Discovery)நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. குறிப்பாக ஜியோ ஆப் வசதியில் விரைவில் ஹாலிவுட் திரைப்படங்கள் வரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜியோ தினசரி 2.5ஜிபி டேட்டா வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.

ஜியோ ரூ 349 ப்ரீபெய்ட் திட்டம் ஒவ்வொரு நாளும் 2.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதன் மொத்த டேட்டா பலன் 75 ஜிபி ஆகும். இந்தத் திட்டம் அணைத்து நெட்வொர்க்கிற்கான அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மைகளையும், தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்குகிறது. இது 30 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது. இத்துடன் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றிற்கான அணுகலும் கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.
ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் அணைத்து நெட்வொர்க்கிற்கான அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை வழங்குகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை கிடைக்கிறது. இத்திட்டம் தினமும் 2.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் 90 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. மொத்தமாக இந்த திட்டம் 225 ஜிபி டேட்டாவை தருகிறது. இத்துடன் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றிற்கான அணுகலும் கிடைக்கிறது.
ஜியோ ரூ.2023 திட்டமானது 252 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டம் தினசரி 2.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மொத்தமாக இந்த திட்டமானது மொத்தம் 630ஜிபி டேட்டா வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக வரம்பற்ற குரலழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பாராட்டு சந்தா என அனைத்து நன்மைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.
ஜியோ ரூ.2,999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். ஆனால் இந்த திட்டத்தில் கூடுதலாக 23 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.இதுதவிர தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள், ஜியோசினிமா, ஜியோடிவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் போன்ற பல சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

அதேபோல் ஜியோசினிமா ஆப்பிற்கு ஹாலிவுட் திரைப்படங்களை (Hollywood Movies) கொண்டு வருவதற்காக வயாகாம்18 நிறுவனமானது வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி (Warner Bros Discovery) நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. அதாவது சமீபத்தில் தான் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரியின் கூட்டாண்மை முடிவுக்கு வந்தது.
எனவே கேம் ஆஃப் த்ரோன்ஸ், ஹவுஸ் ஆஃப் தி டிராகன்கள், தி லாஸ்ட் ஆஃப் அஸ் போன்ற சீரீஸ் உட்பட 144 எச்பிஓ ஒரிஜினல்ஸ் கடந்த மார்ச் 31 ஆம் தேதி முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் இருந்து அகற்றப்பட்டன. இதற்கிடையில் தான் வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி உடன் வயாகாம்18 என்கிற புதிய கூட்டணி உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications