365 நாளிற்கு தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கும் Jio திட்டம்.! Disney+ Hotstar பிரீமியமும் இருக்கா?

|

இன்றைய மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையில் பல விதமான பொழுதுபோக்குகளைத் தேடி மக்கள் போகின்றனர். அதற்கு ஏற்றவாறு பல OTT தளங்கள் சுற்றிவந்து நம்மைச் சூழ்ந்துகொண்டுள்ளது. அதில் முக்கியமான ஒன்று தான் டிஸ்னி+ ஹாட்ஸ்டார். அணைத்து டெலிகாம் ஆபரேட்டர்களும் இப்போது தங்கள் ரீசார்ஜ் திட்டங்களுடன் பல OTT தளங்களுக்கான சந்தாக்களையும் இலவசமாக அளிக்கின்றன. அந்த வகையில் Jio இதுவரை வழங்காத ஒரு புது திட்டத்தை வழங்குகிறது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா கிடைக்கும் ஜியோ ரீசார்ஜ் திட்டமா?

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா கிடைக்கும் ஜியோ ரீசார்ஜ் திட்டமா?

மக்களும் அதன் மேல் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர் என்பது அந்த திட்டங்கள் விற்பனையாவதை வைத்தே தெரிந்துகொள்ள முடியும். இதுவரை இருந்து வந்த திட்டங்கள் வெறும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் திட்டத்தை மட்டுமே கொண்டிருந்தது. ஆனால் அதனை லேப்டாப் மட்டும் ஆண்ட்ராய்டு டிவி போன்றவற்றில் பயன்படுத்த முடியாது. என்ன தான் ரீசார்ஜ் உடன் ஹாட்ஸ்டார் சந்தா கிடைப்பது மகிழ்ச்சி தரும் செய்தியாக இருந்தாலும் அதை ஸ்மார்ட் போனில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது பலருக்கு பெரும் குறையாகவே இருந்தது.

இதுவரை வழங்காத ரீசார்ஜ் திட்டமா இது?

இதுவரை வழங்காத ரீசார்ஜ் திட்டமா இது?

அதற்கு மாற்றாக ஜியோ நிறுவனம் ஒரு புதிய திட்டத்துடன் வந்துள்ளது. இதுவரை எந்த டெலிகாம் ஆபரேட்டர்களும் கொடுத்தது இல்லை. ஏன் ஜியோ நிறுவனமே இது தான் முதல் முறை இந்த திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. முதல் கட்டமாக வெறும் இரண்டு திட்டங்களுடன் மட்டுமே இதை இணைத்துள்ளனர். இந்த திட்டம் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி என்ன திட்டத்தை ஜியோ நிறுவனம் மக்களுக்குத் தரப்போகிறது என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளதா? வாங்கப் பார்க்கலாம்.

இது மோசடி மாதிரில இருக்கு.! 28 நாள் ரீசார்ஜ் பிளான் பின்னணியில் உள்ள பகிரங்கமான உண்மை.!இது மோசடி மாதிரில இருக்கு.! 28 நாள் ரீசார்ஜ் பிளான் பின்னணியில் உள்ள பகிரங்கமான உண்மை.!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவுடன் பெஸ்ட் அனுபவம் வேண்டுமா?

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவுடன் பெஸ்ட் அனுபவம் வேண்டுமா?

பொதுவாக டிஸ்னி+ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவில் குறிப்பிட்ட அம்சங்கள் மட்டுமே தரப்படும். டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் முழு அனுபவத்தையும் பெறவேண்டும் என்றால் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவை நாம் பெற வேண்டும். ஆனால், ரீசார்ஜ் உடன் வரும் டிஸ்னி+ஹாட்ஸ்டார் சந்தாவில் இதுவரை எந்த நிறுவனமும் பிரீமியம் சந்தா தந்ததில்லை. இதை இப்போது ஜியோ நிறுவனம் மாற்றி எழுதியுள்ளது. இப்போது இரண்டு ரீசார்ஜ் திட்டங்களில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவை மக்களுக்கு வழங்குகின்றனர்.

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 1499 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 1499 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த ரூ. 1499 திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டத்தில் ஒரு நாளுக்கு 2ஜிபி என்ற கணக்கில் மொத்தம் 84 நாட்களுக்கு 168ஜிபி டேட்டா கிடைக்கிறது. அன்றைய நாளுக்கான டேட்டா தீர்ந்துவிட்டால், 64 kbps என்ற வேகத்தில் டேட்டாவை பயன்படுத்தலாம். இதனுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் நாள் ஒன்றிக்கு 100 SMS நன்மை கிடைக்கிறது. இத்துடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம், ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜிவ் கிளவுட் ஆகியவையும் கிடைக்கிறது.

Unknown Number விபரங்களை இலவசமாக தெரிந்துகொள்வது எப்படி? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!Unknown Number விபரங்களை இலவசமாக தெரிந்துகொள்வது எப்படி? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!

ரூ.1499 மதிப்புள்ள டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா இலவசமா?

ரூ.1499 மதிப்புள்ள டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா இலவசமா?

பொதுவாக ஆண்டொன்றுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவின் விலை ரூ.1499 ஆக இருக்கிறது. இதற்கான கோட் நீங்கள் ஜியோ ரீசார்ஜ் செய்தவுடன் உங்கள் மை ஜியோ கணக்கிற்கு அனுப்பப்பட்டுவிடும். அதை பயன்படுத்தி டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், ஜியோ நிறுவனம் வேறொரு திட்டத்தையும் வழங்குகிறது, ஆனால், இது 365 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது.

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 4199 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 4199 ப்ரீபெய்ட் திட்டம்

அடிக்கடி ரீசார்ஜ் செய்ய விரும்பாமல் ஒரே முறையில் நீண்ட காலத்திற்கு ரீசார்ஜ் செய்யும் பழக்கம் உள்ளவர்களுக்கு இது சிறப்பான திட்டமாகும். இந்த ரூ. 4199 திட்டம் முழு ஆண்டிற்கும் அதாவது, 365 நாட்களுக்கு வேலிடிட்டியுடன் வருகிறது. இது ஒரு நாளுக்கு 3ஜிபி என்ற கணக்கில் ஒரு ஆண்டிற்கு மொத்தம் 1095 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 SMS நன்மையை வழங்குகிறது.

WhatsApp இல் யார் உங்களை Block செய்தார்கள் என்று தெரியனுமா? இந்த 5 டிப்ஸை பாருங்க.!WhatsApp இல் யார் உங்களை Block செய்தார்கள் என்று தெரியனுமா? இந்த 5 டிப்ஸை பாருங்க.!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் உடன் முதல் ரீசார்ஜ் திட்டமா இது?

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் உடன் முதல் ரீசார்ஜ் திட்டமா இது?

மேலும், இந்த ரீசார்ஜ் திட்டம் ஒரு ஆன்ட்ரிக்கான ரூ. 1499 மதிப்புள்ள டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவையும் இலவசமாக வழங்குகிறது. இத்துடன் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜிவ் கிளவுட் ஆகிய வசதிகளும் கிடைக்கின்றன. டெலிகாம் ஆபரேட்டர்களில் முன்னணியில் இருக்கும் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்களையும் தாண்டி ஜியோ தான் இந்த டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் திட்டத்தை ரீசார்ஜ் உடன் இணைத்து முதன்முதலில் அறிமுகம் செய்துள்ளது என்பது கூடுதல் சிறப்பு.


Best Mobiles in India

Read more about:
English summary
Reliance Jio Prepaid Plan With 3GB Of Daily Data and Disney+ Hotstar Premium Subscription

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X