Jio ப்ரீபெய்ட் திட்டம்: 30 நாளுடன் ஒரு முழு மாதத்திற்கும் செல்லுபடியாகும் புதிய ரீசார்ஜ் திட்டமா? என்ன விலை?
ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் அதன் சலுகைகளில் பல புதிய ப்ரீபெய்ட் திட்டங்களைச் சேர்த்துள்ளது. அந்த திட்டங்களில் ஒன்று தான் ரூ.259 திட்டமாகும். இந்த திட்டத்தில், பயனர்களுக்குப் பல விதமான நன்மைகள் கிடைக்கிறது. அதிலும் குறிப்பாக இந்த புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் 30 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி நன்மையோடு வருகிறது. ஆம், நீங்கள் படித்தது சரி தான், வழக்கமாகக் கிடைக்கும் 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வரும் திட்டம் போன்று இது இல்லை. இந்த திட்டம் முழுமையாக ஒரு மாதம் முழுக்க செல்லுபடியாகிறது.

ரிலையன்ஸ் ஜியோவின் புதிய ரூ.259 திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் இந்த புதிய ரூ.259 திட்டமானது தினமும் 1.5 ஜிபி டேட்டா நன்மை, தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு ஆகியவற்றைப் பெறுகிறார்கள். ஆனால், இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இந்த திட்டத்தில் பயனர்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் தினசரி தரவு நன்மை முடிந்த பின் இணைய வேகம் 64 Kbps ஆகக் குறைக்கப்படும். மேலும், JioCinema, JioTV, JioCloud மற்றும் JioSecurity உள்ளிட்ட ஜியோ பயன்பாடுகள் பயனர்களுக்கு ஒரு தொகுப்பாக வழங்கப்படுகின்றன.

30 நாட்களுக்கு முழுமையான சேவை கிடைக்கும் ரீசார்ஜ் திட்டம் இது தான்
இந்த திட்டத்துடன் 30 நாட்களுக்கு முழுமையான சேவை செல்லுபடியாகும் பயனர்களுக்கு இது ஒரு நல்ல ப்ரீபெய்ட் திட்டமாகும். பலர் 28 நாட்கள் திட்டத்தைப் பெறுவது குறித்தும், 30 நாட்கள் சேவையுடன் வந்த சலுகையைப் பெறுவது குறித்தும் புகார் அளித்துள்ளனர். இருப்பினும், தொலைத்தொடர்பு நிறுவனம் இதே திட்டத்தை இன்னும் 28 நாட்களுக்கு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதே நன்மைகளுடன் கிடைக்கும் 28 நாட்கள் சேவை செல்லுபடியாகும் திட்டமானது ரூ. 239 விலையில் கிடைக்கிறது. மேலும், ரூ. 20 செலுத்தினால், பயனர்கள் முழு மாதத்திற்கான (30 நாட்களுக்கு) இந்த புதிய திட்டத்தின் மூலம் பெற முடியும்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ. 555 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள் என்ன?
ஜியோவின் ரூ.259 ப்ரீபெய்ட் திட்டத்திற்குக் கூடுதலாக, ரிலையன்ஸ் ஜியோ அதன் பயனர்களுக்கு ரூ. 555 விலையில் ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தையும் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த ரூ. 555 திட்டத்தில், அதன் பயனர்களுக்கு 55 நாட்களுக்கு 55 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். ஆனால், இது ஒரு டேட்டா மட்டும் திட்டமாகும் என்பதை வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டும். அதாவது இந்த திட்டத்தில் பயனர்களுக்கு குரல் அழைப்பு நன்மை மற்றும் SMS நன்மைகள் என்று எந்த நன்மையையும் கிடைக்காது. இந்த திட்டத்துடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலின் ஓவர்-தி-டாப் (OTT) சந்தாவும் உள்ளது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் கூடுதல் நன்மை
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா மற்றும் சில கூடுதல் தரவுகளுடன் உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்ய விரும்பும் நபர்களுக்கு இந்தத் தரவு மட்டும் திட்டம் நல்லது. இது 55 நாட்கள் திட்டம் என்பதால், அடிப்படை ப்ரீபெய்ட் திட்டத்தின் காலாவதி பற்றி எந்த கவலையும் இல்லை. ஜியோவின் மற்ற சில டேட்டா வவுச்சர்கள் அடிப்படை வவுச்சரைப் போலவே செல்லுபடியாகும். அதாவது வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் கொண்ட அடிப்படை ப்ரீபெய்ட் திட்டம் காலாவதியானதுடன், டேட்டா வவுச்சரும் காலாவதியாகிவிடும்.

ஜியோ மார்ட் கேஷ் பேக் சலுகையும் கிடைக்கிறதா?
இந்த திட்டத்தை ஜியோ நிறுவனம் சத்தமில்லாமல் அதன் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக, ரிலையன்ஸ் நிறுவனம் இந்த ரூ. 555 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை IPL போட்டிகள் துவங்கும் நேரத்தில் அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்துடன் ஜியோ பயனர்களுக்கு ஜியோ மார்ட் கேஷ் பேக் சலுகையும் கிடைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. முழு மாதத்திற்கும் செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டம் வேண்டும் என்று விரும்பும் வாடிக்கையாளர்கள் இந்த புதிய ரூ. 259 திட்டத்தைக் கருத்தில்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications