நீண்ட நாட்கள் வேலிடிட்டி தரும் ஜியோவின் சூப்பரான ரீசார்ஜ் திட்டங்கள்: இதோ பட்டியல்.!

|

ஜியோ (Jio) நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாகத் திகழ்கிறது. இதற்கான முக்கிய காரணம், ரிலையன்ஸ் ஜியோ மட்டுமே இந்தியாவில் குறைந்த விலையில் அதிக பயனை வழங்குகிறது. கம்மி காசுக்கு எக்ஸ்ட்ரா நன்மை வழங்குவதனாலேயே நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் ஜியோவை தேர்வு செய்துள்ளனர். Jio தனது பயனர்களுக்குத் தேவையான நன்மைகளை எல்லா வகையான பிரிவிலும் வழங்குகிறது. குறிப்பாக பட்ஜெட் மற்றும் பிரீமியம் திட்டங்களை வழங்குகிறது.

டேட்டா நன்மையை விட, வேலிடிட்டி தான் முக்கியமா?

டேட்டா நன்மையை விட, வேலிடிட்டி தான் முக்கியமா?

அதேபோல், நிறுவனத்திடம் இருந்து கம்மி காசில் அதிக வேலிடிட்டி கிடைக்கக்கூடிய திட்டங்களும் இப்போது கிடைக்கிறது. இந்த ரீசார்ஜ் திட்டங்களை பற்றி நம்மில் பலரும் அறிந்திருக்கவில்லை. உண்மையை சொல்லப் போனால், டெலிகாம் பயனர்களுக்குக் கிடைக்கும் டேட்டா நன்மையை விட, மிகவும் முக்கியமானது வேலிடிட்டி தான் என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இன்னும் சிலர் டேட்டா நன்மையை மட்டுமே கருத்தில் கொண்டு அவர்களுக்கான திட்டத்தைத் தேர்வு செய்கிறார்கள்.

ஏன் வேலிடிட்டி தான் முக்கியம்னு சொல்றாங்க தெரியுமா?

ஏன் வேலிடிட்டி தான் முக்கியம்னு சொல்றாங்க தெரியுமா?

ஆனால், நாம் எப்போது கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான அடிப்படை விஷயம் வேலிடிட்டி தான் என்பது குறிப்பிடத்தக்கது. காரணம், உங்களுடைய சிம் செயல்பாட்டில் இருந்தால் மட்டுமே உங்களால் டேட்டா நன்மை, வாய்ஸ் கால் நன்மை மற்றும் SMS நன்மை போன்ற சேவைகளைத் தடையில்லாமல் பயன்படுத்த முடியும். வேலிடிட்டி இல்லாத சிம் கார்டு சேவையில் இருக்காது என்பதனால் தான் வேலிடிட்டி ஒரு முக்கியமான அடிப்படை விஷயமாக கருதப்படுகிறது.

நத்திங் போன் தெரியும் இது என்னப்பா 'சம்திங்'.. 'Something'.! உங்க போனை Nothing டிசைனுக்கு உடனே மாற்றலாமா?நத்திங் போன் தெரியும் இது என்னப்பா 'சம்திங்'.. 'Something'.! உங்க போனை Nothing டிசைனுக்கு உடனே மாற்றலாமா?

குறைந்த கட்டணத்தில் அதிக வேலிடிட்டி கிடைக்கும் திட்டங்கள்

குறைந்த கட்டணத்தில் அதிக வேலிடிட்டி கிடைக்கும் திட்டங்கள்

டெலிகாம் நிறுவனங்களும் கூட வேலிடிட்டியை அடிப்படையாக வைத்துத் தான் அவற்றின் விலையை நிர்ணயம் செய்கின்றன. வேலிடிட்டி அடிப்படையிலான நன்மைகளை வைத்துத் தான் உங்கள் திட்டத்திற்கான கட்டணம் உங்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. இப்படி முக்கியமான வேலிடிட்டியை அதிகமாக வழங்கி, உங்களிடம் இருந்து குறைந்த கட்டணத்தை மட்டும் வசூலிக்கக்கூடிய 3 ஜியோ ரீசார்ஜ் திட்டங்களைப் பற்றித் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் பெஸ்டான 3 திட்டங்கள் இது தானா?

ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் பெஸ்டான 3 திட்டங்கள் இது தானா?

ரிலையன்ஸ் ஜியோ இந்த வகையின் கீழ் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. இந்த மூன்று திட்டங்களின் விலை ரூ. 155, ரூ. 395 மற்றும் ரூ. 1559 ஆக இருக்கிறது. இந்த மூன்று திட்டங்களும் உங்கள் சிம் கார்டை செயல்பாட்டில் வைத்திருக்கத் தேவையான வேலிடிட்டி உடன் வருகின்றன. இந்த திட்டங்கள் அதிக செல்லுபடி காலத்தை வழங்குவதால், இதில் மிகக் குறைவான டேட்டாவை மட்டுமே நீங்கள் எதிர்பார்க்கமுடியும். ஆனால், உங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை கிடைக்கிறது.

ஜியோவின் ரூ.155 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோவின் ரூ.155 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.155 ப்ரீபெய்ட் திட்டமானது உங்களுக்கு 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியுடன் வருகிறது. முன்பே சொன்னது போல, இந்த திட்டங்கள் கணிசமான அளவு டேட்டாவை மட்டுமே வழங்குகின்றன. இந்த திட்டம் 2ஜிபி மொத்த டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்ட பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்புடன் நன்மை உடன், மொத்தம் 300 SMS நன்மையையும் ஜியோ வழங்குகிறது. கூடுதல் கட்டணமின்றி ஜியோ ஆப்ஸ் சந்தாவும் கிடைக்கிறது. உண்மையில் இது ஒரு நல்ல ஒப்பந்தம் தான்.

PAN கார்டில் பெயர், போட்டோ தகவலை மாற்றுவது எப்படி? ஆப்லைன் or ஆன்லைன் சேஞ்சஸ் எது சிறந்தது?PAN கார்டில் பெயர், போட்டோ தகவலை மாற்றுவது எப்படி? ஆப்லைன் or ஆன்லைன் சேஞ்சஸ் எது சிறந்தது?

ஜியோவின் ரூ.395 விலை திட்டம்

ஜியோவின் ரூ.395 விலை திட்டம்

இந்த ஜியோ பட்டியலில் இருக்கும் இரண்டாவது திட்டம் ரூ.395 விலையில் வருகிறது. இதன் மூலம், பயனர்கள் அதிவேக 6 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். வழங்கப்பட வரம்பிற்குப் பின் இணைய வேகம் 64 Kbps ஆகக் குறைகிறது. இத்துடன் பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை மற்றும் மொத்தம் 1000 SMS-களையும் ஜியோ வழங்குகிறது. இந்த திட்டம் ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தாவுடன் 84 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. அழைப்பு நன்மையுடன் அதிக வேலிடிட்டி தேவையுள்ளவர்களுக்கு இது பெஸ்ட் சாய்ஸ்.

336 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி திட்டம் இது தான்

336 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி திட்டம் இது தான்

மேலே குறிப்பிட்டது போன்ற மிக நீண்ட கால திட்டத்திற்கு நீங்கள் செல்ல விரும்பினால், நீங்கள் ரூ.1559 விலையில் ப்ரீபெய்ட் திட்டத்திற்குச் செல்லலாம். இந்த திட்டம் மொத்தம் 336 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டம் பயனர்களுக்கு அதிவேக 24 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. வரம்பிற்குப் பிறகு இணைய வேகம் 64 Kbps ஆக குறைகிறது. இத்துடன் உங்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை மற்றும் 3600 SMS நன்மையையும் ஜியோ வழங்குகிறது.

1 இல்ல 2 இல்ல மொத்தம் 12 OTT சேனல்! விலை வெறும் ரூ.149 மட்டுமே! Airtel-லின் இந்த திட்டம் தான் பெஸ்ட்!1 இல்ல 2 இல்ல மொத்தம் 12 OTT சேனல்! விலை வெறும் ரூ.149 மட்டுமே! Airtel-லின் இந்த திட்டம் தான் பெஸ்ட்!

இந்த திட்டங்கள் யாருக்கெல்லாம் சிறந்தது?

இந்த திட்டங்கள் யாருக்கெல்லாம் சிறந்தது?

இந்த மூன்று திட்டத்துடனும் உங்களுக்கு ஜியோ பயன்பாடுகளான JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud போன்ற இலவச நன்மை கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு டேட்டா நன்மை முக்கியமில்லை என்றாலோ, அல்லது உங்கள் வீட்டில் வைஃபை சேவை இருக்கிறது என்றாலோ, இந்த திட்டத்தை நீங்கள் தாராளமாகத் தேர்வு செய்யலாம். வாய்ஸ் கால் நன்மையுடன் அதிக வேலிடிட்டியை எதிர்பார்க்கும் பயனர்களுக்கு இந்த திட்டம் ஒரு அற்புதமான சாய்ஸ் ஆகும்.

Best Mobiles in India

English summary
Reliance Jio Prepaid Packs With Best Validity and Other Benefits

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X